- Home /
- வாலி வதை ஆதிகவியும் கம்பகவியும் - டாக்டர்.பிரியா ராமசந்திரன் - Vaali Vadhai Aadhikaviyum Kambakaviyum
- Description
-
Details
"வாலிக்கு மரணதண்டனை அளித்து அவனை விலங்குபோல் வேட்டையாடிக் கொன்ற தனது காவிய நாயகன் அறம் தவறவில்லை. வால்மீகி என்ற சிற்பியின் உள்ளெண்ணத்திற்கேற்ப இராமனின் கதாபாத்திரம் வடிவம் பெற்றது.
வாலி வதைப் பகுதி, பிறன்மனை நயந்தவன், கிளையோடும் அழிவான் என்ற அறம் வழுவாச் சிந்தனையை இராமகாதையின் மகுட வாசகத்தை, நிலைநாட்டியது. வாலி வதைக் காட்சியை நம் மனக்கண் முன் சொற்களால் வரைந்த ஆதிகவி, இதில் எந்தவொரு சிக்கலையும் முடிச்சையும் காணவில்லை."
"கம்பன் ஒரு சூத்திரம் படைத்தான். அவனது காப்பியத்தில் வாலி வதையைப் படித்தால் பல கேள்விகள் எழும். ஆதிகவியின் காப்பியத்தில் வாலி வதைப் பகுதியை உள்வாங்கிய பிறகு கம்பனைப் படித்தால் அனைத்துக் கேள்விகளும் விடையாக மாறும். வினாவுக்கு எதிராக வந்த வினாவே விடையாகும்." - பிரியா இராமச்சந்திரன்.
"இந்நூலில் வால்மீகி வாலி வதையில் இடும் ஆறு முடிச்சுக்களை இனங்காட்டி, கம்பன் அம்முடிச்சுக்களை இலகுவாய் அவிழ்க்கும் அதிசயத்தையும், நிறுவிக் காட்டுகிறார் பிரியா இராமச்சந்திரன்.
"கம்பனின் வாலி வதையைத் திரும்பத் திரும்பப் படிக்க கற்றோர் தம் ஆழத்திற்கேற்ப அது அகன்று விண்கடந்து விரியும் அதிசயத்தை, அற்புதமாய் எடுத்துச் சொல்லித் தன் நூலை முடிக்கிறார்." - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்.
இந்த நூல் வாலிவதை ஆதிகவியும் கம்பகவியும் டாக்டர். பிரியா ராமசந்திரன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ஆதிகவி வால்மீகியும், தமிழ்க்கவி கம்பனும் நல்கிய படைப்புகளில், வாலி வதையால் இராமன் முதற்கொண்டு பல்வேறு கதை மாந்தர்களும், தம் இயல்பில் அடையும் மாற்றங்களை நுாலில் நேர்த்தியாகத் தொகுத்துத் தந்திருக்கிறார்.எழுத்தாளர் பற்றி: டாக்டர். பிரியா ராமசந்திரன், குழந்தை நல சிகிச்சை நிபுணர். புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு இலவச சிகிச்சையளிக்க, `ரே ஆஃப் லைட் ஃபவுண்டேஷ'னைத் தொடங்கியவர் டாக்டர் ப்ரியா ராமச்சந்திரன்.வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட அவரது நூல்கள்:இராமாயணமும் இராமாவதாரமும்;வாலி வதை ஆதிகவியும் கம்பகவியும்;தர்மயுத்தத்தில் கர்ம யோகியும் ஞானயோகியும். - Specification
-
Specification
SKU Code VAN B 265 Weight in Kg 0.4900 Brand Bookwomb Dispatch Period in Days 3 ISBN No. Author Name டாக்டர்.பிரியா ராமசந்திரன் - Dr.Priya Ramachandran Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam - Reviews