Details
இரண்டு நாவல்களை உள்ளடக்கிய இந்த நாவலில் அவரின் பாத்திரப்படைப்புகள் நம் அண்டை வீட்டு மனுசங்களை அடையாளப்படுத்தும் விதமாக அமைந்திருகிறது காதல் என்ற ஒரு வார்த்தையை எதற்கெல்லாம் சாதகமாக்கிக் கொள்கிறது இந்த சமூகம் என்று இவரின் கதா பாத்திரங்கள் நமக்குள் உணர்த்துவது இன்பத்தை அல்ல மாறாக வலியை உண்டு பண்ணுகிறது. தாயின் மீது அன்பு கொள்ளும் மகன் மனைவியை வெறுக்கும் கணவன் , மனைவி சுகமாக இருக்க வேறு ஒரு பெண்ணை காதல் என்னும் வலையில் வீழ்த்தி பணிப் பெண்ணாக மாற்றும் கொடூரன் என நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் படமாக இந்த கதை.
இடது பக்கம் தேங்கின நீரை வாரி அடித்து வீசியப்படி பஸ் நின்றது. இதற்கு முன்னால் போன பஸ்ஸூம் இப்படியே செய்திருக்க வேண்டும். பஸ் ஸ்டான்டிலுள்ளவர்கள் ஒரு அனுபவத்திற்குப்பிறகு, வருகின்ற பஸ்ஸின் வேகத்தை மனசில் குறித்துக்கொண்டு நாலாபக்கமும் சிதறி ஓடி, மறபுடியும் பஸ் நோக்கி ஓடிவந்தார்கள். எந்த மாற்றமுமில்லமால் தளர்வாய் நடைபோடும் வாழ்க்கையில் இந்த மாதிரி சிதறி ஓடுவதும், மறுபடி ஒன்று கூடுவதும் சந்தோஷம் கொடுத்துவிடும் போலிருக்கிறது. உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு கிழவனைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் சிரிப்பாகவே இருந்தார்கள். பஸ்ஸிலிருந்து பெருமாள் இறங்குவதற்கு முன்னால் எல்லோரும் ஏறுவதற்கு முயற்சி செய்தார்கள்..