Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

வேத விளக்கமே சிவஞான போதம் - பா.கமலக்கண்ணன் - Vedha Vilakkamae Sivagnana Bodham - P Kamalakannan - Veda Vilakkame Shivagnana Bhodham - Vetha Vilakame Sivagnana Botham

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 411
₹80.00

சித்தர் நூல் / சித்தர் தத்துவம்/ ஆன்மீகம் நூல்.    

காகித அட்டை / பேப்பர்பேக்; 
120 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: மே 2018.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்த நூல் வேத விளக்கமே சிவஞானபோதம், பா. கமலக்கண்ணன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
 
முன்னுரையிலிருந்து: 
ஞான மார்க்கத்தை விட மேலான அறநெறி நாட்டில் இல்லை. ஞான மார்க்கத்தைப் பற்றாத சமயமும் நன்றன்று. ஞான மார்க்கத்தைப் பற்றாத நெறிகள் முத்தியடையச் செய்யமாட்டா. ஞானத்தவத்தில் உயர்ந்தோர் மனிதருள் மேலானவராவார்.
 
வேதங்களின் விளக்கமாக அமைந்திருப்பது திருமந்திரம் ,மட்டுமல்ல; திருக்குறள், மூவர் தேவாரம், திருவாசகம்; பரஞ்சோத்தி முனிவர் மெய்கண்ட தேவருக்கு அருளிய சிவஞானபோதம் ஆகிய அனைத்துமே என்று அவ்வை மூதாட்டி பதிவு செய்துள்ளார்.
 
உலக மக்கள் ஞானம் அடைந்து உய்வதற்காக அளப்பரும் கருணையோடு, நடராஜபெருமான் உருவாக்கிய உன்னதமான - ஒப்புயர்வற்ற - தலைசிறந்த சிவஞானபோதம் என்னும் ஞானக் கருவூலத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டேன்.
 
"சிவஞானபோதம்" என்பதுஎன்பது 245 வரிகளையுடைய 12 வடமொழி ஸ்லோகங்களாகும். இது தட்சிணாமுர்த்தி வடிவில் தோன்றிய சிவபெருமானால் அருளப்பெற்று அவராலேயே ஜனகர் முதலான முனிவர்களுக்கு உபதேசிக்கப்பெற்றது. இதை, சத்தியஞான தரிசிநிகள் என்ற முனிவர், பரஞ்சோதி முனிவருக்கு உபதேசித்தார். அவர், திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்ட தேவ நாயனார் என்பவருக்கு உபதேசித்து, தமிழாக்கம் செய்து விளக்க உரையும் கூறுமாறு ஆணையிட்டார்.
 
மெய்கண்ட தேவ நாயனார், மங்கல வாழ்த்துப் பாடல் ஒன்றும், அவையடக்கம் ஒன்றும் எழுதி, 12 ஸ்லோகங்களையும் 12 தமிழ்ப்பாடல்களாக உருவாக்கினார். அவற்றுக்கு விளக்க உரையாக 81 எடுத்துக்காட்டு வெண்பாக்களை அமைத்தார். இதுவே தமிழில் சிவஞானபோதமாகும். இந்நூல் பன்னிரு சைவத் திருமுறைகளில் சேர்க்கப்படவில்லை. ஆனால் 14 சைவ சாத்திரங்களுள் ஒன்றாக வைக்கப்பெற்றுள்ளது.  
 
மனிதன், ஞானத்தவம் செய்து முத்தியடையாதவாறு வீழ்த்தி மறுபிறப்பில் ஆழ்த்துவது, ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களாகும். அந்த மும்மலங்களையும் அழித்து, முத்தி அடையும் வழியை விளக்குவது சிவஞானபோதம் போன்ற ஞான நூல்களாகும். ஆனால், அத்தகைய நூல்களை வைத்து, பொய்யர்கள் மக்களை ஏமாற்றி, பணம் பறிக்காத வகையில் அந்த நூல்களில் பரிபாஷைச் சொற்கள் அமைந்துள்ளன. அந்த பரிபாஷைச் சொற்களை ஞானிகளே விளக்க முடியும். இதனால் ஞானமார்க்கமென்பது பெரும்பாலும் வழக்கழிந்ததாகிவிட்டது. இதை அறிந்த நடராஜப்பெருமான் அகத்தியரை அழைத்து, தமிழ் நாட்டிற்குச் சென்று, வழக்குத் தமிழில் பாடி ஞானத்தைப் பரப்புமாறு ஆணையிட்டார்.
 
இதுவரை வெளிவந்த பற்பல அறிஞர்களின் உரைகளுக்கு முற்றிலும் மாறாக என்னுடைய ஞானவிளக்கம் காணப்பெறும். ஏனெனில் மற்ற உரைகள் இலக்கண இலக்கியம் சார்ந்த உரைகளாகும். ஆனால் என்னுடைய ஞானவிளக்கம் என்பது மெய்ஞ்ஞான குரு புதுக்கோட்டை ஆறுமுகம் அய்யா அவர்களிடம் கற்ற ஞானக்கல்வின் அடிப்படையிலும், ஐம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட மெய்ஞ்ஞான அனுபவங்களைக் கொண்டும் உருவானதாகும். முத்தி அடைய விரும்புவோர் ஆழ்ந்து கற்று சிந்தித்து தெளிவு பெறலாம். 
 
இங்ஙனம், 
பா.கமலக்கண்ணன்.
 
ஆசிரியர் குறித்து: திரு.பா.கமலக்கண்ணன் அவர்களின் முதல் நூல் 'ஞானக்கனல்' வானதி பதிப்பகத்தால்  1989-ல் வெளியிடப்பெற்று இதுவரை பத்து பதிப்புகள் வந்துள்ளன. இவர் திருஅருட்பா 6733 பாடல்களுக்கும் ஞானவிளக்க உரை எழுதியுள்ளார். தேவாரம், திருவாசகம், திருமந்திரம், சிவஞானபோதம், ஆகிய அனைத்தும் வேதங்களின் விளக்கமே என்று நிறுவி நூல்களை உருவாக்கியுள்ளார். திருவள்ளுவரின் சுயசரிதையை வெளிப்படுத்தி அவர் பிறந்தது கரூர்; இயற்பெயர்: சாம்புவமூர்த்தி, தந்தையார் சாம்பசதாசிவன் என்றும் அவர் அகத்தியருடைய சீடர் என்றும் நிறுவியுள்ளார். சிலப்பதிகாரத் தலைமை பொற்கொல்லன் ஒரு யவனன் என்று நிறுவியுள்ளார். இவர் தமிழில் முப்பத்திரண்டு நூல்களும் ஆங்கிலத்தில் நான்கு நூல்களும் உருவாக்கியுள்ளார். அவ்வைக்குறள், ஞானவாசிட்டம் ஆகிய அரிய நூல்களை இவர் வெளிக்கொணர்ந்துள்ளார். இவருடைய 'சித்தர் தத்துவம்' என்ற நூல் 2001-ம் ஆண்டில் சிறந்த நூலாகத் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப் பெற்றது.
More Information
SKU Code VAN B 411
Weight in Kg 0.440000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பா.கமலக்கண்ணன் - P.Kamalakannan
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:வேத விளக்கமே சிவஞான போதம் - பா.கமலக்கண்ணன் - Vedha Vilakkamae Sivagnana Bodham - P Kamalakannan - Veda Vilakkame Shivagnana Bhodham - Vetha Vilakame Sivagnana Botham

Similar Category Products





Other Books by பா.கமலக்கண்ணன் - P.Kamalakannan