வேதராமன் (ஆரண்ய காண்டத்தில் அர்த்த விசேஷங்கள்) - முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் - Vedharaaman (Aaranya Kaandathil Artha Visheshangal) - Mukkur Lakshminarashimhacharyar - Vedaraman - Vetharaaman - Vetharaman - Vedaraaman - Vedharaman
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
Availability: In stock
SKU:
VAN B 441
₹75.00
ஆன்மீகம் நூல்.
காகித உறை / பேப்பர்பேக்;
200 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதற் பதிப்பு: ஜூன், 2004;
ஐந்தாம் பதிப்பு: ஜனவரி, 2019.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் வேதராமன், முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் “வேத ராமன்” என்னும் தலைப்பில் ஸ்ரீ உ.வே. முக்கூர் லக்ஷ்மிநரசிம்மாசாரியார் அதிஅத்புதமாக உபன்யாசம் செய்துள்ளார். அவரின் உபன்யாச தொகுப்பு “வேத ராமன்” என்னும் புத்தகமாக வெளிவரும் சமயத்தில், அதனை பரிசோதித்து வெளியிடும் பாக்கியம் ஸ்ரீ உ. வே. அனந்தபத்மநாபாசாரியார் (APN சுவாமி) அவர்களுக்கு கிடைத்தது. பிறகு மேலும் பல் வேறு விதமாக ஆராய்ச்சி செய்த ஸ்ரீ APN சுவாமி, பாலகண்டம் முதற்கொண்டு ராமாயணத்தில் வேத ஒலியை அனைவரும் அறியும் வண்ணம் உபன்யாசம் செய்ய ஆவல் கொண்டார். அதன் பயனாக “வேத ராமன்” என்னும் தலைப்பில் ஆரண்ய காண்டம் வரை விரிவாக உபன்யாசம் செய்துள்ளார். இதை விளக்கும் ச்லோகங்களையும் ராமன் அருளால் தானே இயற்றியுள்ளார்.
ஸ்ரீ:
|| ஸ்ரீமதே ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருசிம்ஹ பரப்ரஹ்மணே நம: ||
|| ஸ்ரீமதே ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருசிம்ஹ திவ்ய பாதுகா ஸேவக ஸ்ரீவண் சடகோப
ஸ்ரீ நாராயண யதீந்த்ர மஹா தேசிகாய நம: ||
|| ஸ்ரீ மட்டபல்லிநாதம் ப்ரணதோஸ்மி நித்யம் நம: ||
||ஸ்ரீமத் உபயவேதாந்த ஸ்ரீ முக்கூர் லக்ஷ்மீந்ருஸிம்ஹார்ய
மஹா தேசிகாய நம: ||
முகவுரை:
ஸ்ரீய: பதியான பகவானுடைய மூச்சுக் காற்றான வேதத்தை, வேதத்தின் விழுப்பொருளை உலகத்தோருக்கு எளிய முறையில் விளக்குவதற்காக பகவானாலேயே நடித்துக் காண்பிக்கப்பட்ட அவதாரம் ஸ்ரீராமாவதாரம்.
பல தர்ம விசேஷங்கள் அடங்கிய இவ்வுயர்ந்த காவியத்தை மேலெழுந்தவாரியாக படித்தால் பல விசேஷ அர்த்தங்கள் புலப்படாது.
ஸ்ரீ முக்கூர் ஸ்வாமி இவ்விதிகாசத்தில் படிந்து குடைந்து நீராடி பல அரியபெரிய விஷய விசேஷார்த்தங்களை பாரதத்தின் பல்வேறு இடங்களில் உபன்யஸித்திருக்கிறார். இவற்றில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஸ்வாமி சபாவில் ஸ்ரீ ஸ்வாமி உபன்யஸித்த விஷயங்களிலிருந்து இவ்வுன்னதமான நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக ஆரண்ய காண்டத்தில் ஸ்ரீராமபிரான் நடைமுறையில் காட்டிய 14 அர்த்த விசேஷங்கள் இதில் விவரிக்கப்படுகிறது. உபநிஷத் பலனான பகவான் ராமபிரான் ஆரண்யத்துக்குள் ப்ரவேசித்து பல தர்மங்களை காட்டியருளி வேதராமனாக திகழ்கிறான்.
வேதபர்வதமாகவும், வேத வழியில் ஒழுகியவருமான ஸ்ரீ முக்கூர் ஸ்வாமி
* ஓம்காரப் பொருள்
* சரணாகத ரக்ஷணத்திற்காக பகவான் அவதரிக்கிறான்
* சாமான்ய தர்மம்
* விசேஷ தர்மம்
* எல்லா கர்மாக்களினாலும் ஆராதிக்படுபவனும் பலனைக் கொடுப்பவனும் பகவான்
* பக்தர்களை தேடி வருபவன்
* ஸத்யஸந்தத்வன்
*ஏகவீரன்
* ந்ருஸிம்மனே ராமன்
* பரமாத்மா எவனை விரும்புகிறானோ அவனால் அவன் அடையப்படுவான்
* ரிஷிகளுக்கு நாம் கடன்பட்டிருக்கிறோம்
* அந்யோன்ய தாம்பத்யம்
* துஷ்டர்களிடம் பரிகாசம் கூடாது
* விதிக்கப்பட்ட கடமையை செய்தல்
என்கிற 14 அர்த்தவிசேஷங்களின் மூலம் எளிய உயரிய முறையில் அவன் தசரத ராமன் மட்டுமல்ல வேத ராமன் என்பதை ஸ்தாபிக்கிறார். முக்கியமாக இவ்வர்த்தங்கள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஸ்ரீமுக்கூர் ஸ்வாமியின் உயர்ந்த வாக் வைபவத்திலிருந்து இவ்வுயர்ந்த நூல் வெளிவர பல மகான்கள் பாடுபட்டிருக்கிறார்கள். முக்கியமாக ஸ்ரீ R.ஸ்ரீநிவாசன் தம்பதியினரின் அயராத உழைப்பும், பக்தியும் வியக்கத்தக்கது. அடியேன் இவ்வுத்தம தம்பதியினரின் ஈடுபாட்டிற்கும் பக்திக்கும் தலையல்லால் கைம்மாறுகாணகில்லேன். ஸ்ரீமான் M.V.அனந்தபத்மனாபசாரியார் ஸ்வாமி சீரிய முறையில் பிழை திருத்தி கொடுத்ததற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்ரீமுக்கூர் ஸ்வாமிகளின் 60வது திருநக்ஷ்த்திர மஹோற்சவத்தின்போது ஸ்ரீ அழகியசிங்கரின் பரமானுக்கிரஹத்தோடு இப்புத்தகம் வெளியிடப்படுவது மிகவும் சிறப்பு.
இந்நூலை வெளியிடும் வானதி பதிப்பகம் ஸ்ரீ திருநாவுக்கரசு அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராஜ்யலக்ஷ்மீ ஸமேத ஸ்ரீ மட்டபல்லி யோகாநந்த லக்ஷ்மீந்ருஸிம் ஹனின் க்ருபையால் எல்லோரும் நீங்காத செல்வதுடன் சர்வமங்களங்களையும் பெற்று வாழ அவன் திருவடிவாரத்தில் ப்ரார்திக்கிறேன்.
தாஸன்,
- முக்கூர் லக்ஷ்மிந்ருஸிம்ஹாசாரியார் ஸ்ரீநிவாஸன்,
Chairman,
Sri Swati Narasimha Maha Yagna Trust
T. Nagar, Chennai - 600017.
பதிப்புரை:
"வேதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதை ராமாவதாரத்தில் பரமாத்மா காட்டினான். உலகத்தில் இருப்பவர்கள் எல்லோரும் வேதார்த்தத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்று மூலமான வேதமே மஹான்களின் திவ்ய வாக்கினால் காவியமாக, சங்கீதமாக நாடகமாக உருவெடுத்திருக்கின்றது" என்று முக்கூர் ஸ்வாமிகள் இந்நூலில் கூறுகிறார்கள்.
வேத ராமன் காட்டிய வழி என்ன என்பதை நாம் உணர்ந்துகொள்ள இந்நூல் பெரிதும் உதவும்.
ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகளின் அறுபதாவது திரு நட்சத்திர மஹோற்சவத்தில் இந்நூல் வெளியாவது தமிழ் மக்கள் செய்த பாக்கியம்.
வேத சாரமான இந்த நூலை வெளியிட அனுமதி வழங்கியுள்ள ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகளின் குடும்பத்தாருக்கு வானதி பதிப்பகம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது.
அன்பன்,
வானதி திருநாவுக்கரசு.
பாரத தேசத்தில் பிறக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
இங்கு வாழ படிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
ஆத்ம விசாரம், பரமாத்ம விசாரம் இங்குதான் அதிகம்.
நம்முடைய பாரம்பர்யத்தை நாம் நன்கு உணர வேண்டும்.
நம்முடைய மஹரிஷிகள் இதையெல்லாம் கட்டிக் காத்தார்கள்.
ஆசிரியர் குறிப்பு : ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளன ஐந்து நரசிம்ம ஷேத்திரங்கள். இந்த ஐந்து நரசிம்மர்களும் தம்மைக் காட்டிக்கொண்டது ஸ்ரீ உ.வே. முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியார் என்ற புகழ் பெற்ற நரசிம்ம உபாசகரிடம். இவர் உலக நன்மைக்காக நரசிம்மரின் அவதார தினமான சுவாதி நட்சத்திரங்களில் நூற்றியெட்டிற்கும் மேலான யக்ஞங்களை நடத்தியுள்ளார்.
இவற்றில் சில, பிரபல நரசிம்ம ஷேத்திரங்களான, மங்களகிரி, வேதாத்ரி, கடிகாசலம் என்ற சோளிங்கர், அந்தர்வேதி, யாதகிரி, ஷோபநாத்ரி, வாடபல்லி, ஸிம்ஹாசலம், நைமிசாரண்யம், பிருந்தாவனம், ஸ்ரீ ரங்கம், நங்கைநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளன.
ஸ்ரீமுக்கூர் சுவாமிகளின் மட்டபல்லி யக்ஞ வாடிகை சந்நிதானத்தில் முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியாரின் நாலடி உயரத்துடன் அமர்ந்த திருக்கோலத்தில் சிலாரூபம். இவர் நிகழ்த்திய நூற்றியெட்டிற்கும் மேற்பட்ட சுவாதி யக்ஞங்களில், யக்ஞ மூர்த்தியாக இருந்த லஷ்மி நரசிம்மர், இன்றும் மாதந்தோறும் சுவாதித் திருமஞ்சனம் பெற்றுக்கொண்டு அழகுறக் காட்சியளிக்கிறார்.
SKU Code | VAN B 441 |
---|---|
Weight in Kg | 0.480000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் - Sri Mukkur Lakshmi Narasimhachariar |
Publisher Name | வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%