Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

வேத விளக்கமே மூவர் தேவாரம் - பா.கமலக்கண்ணன் - Vedhavilakkamae Moovar Thevaaram - Veda Vilakkame Moovar Devaram - Pa Kamalakannan - Vedha Vilakame Moovar Dhevaram

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 407
₹100.00

ஆன்மீகம் நூல்.

 
காகித அட்டை/ பேப்பர்பேக்; 
168 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: மே 2015.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்த நூல் வேதவிளக்கமே மூவர் தேவாரம், பா. கமலக்கண்ணன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
 
முன்னுரை:  
மனித இனத்தைப் பார்த்து வேதம் இவ்வாறு கட்டளையிடுகின்றது:
 
"எழுந்திருங்கள்; விழித்துக் கொள்ளுங்கள்; சிறந்த 
ஆச்சார்யர்களை அடைந்து ஞானத்தை பெறுங்கள்." - யஜுர்வேதம், கட உபநிஷதம் 3:14. 
 
நாம் பக்தியோடு பற்பல தீர்த்தங்களில் நீராடியும், ஆலயம் தொழுதும், திருமுறைகளை ஓதியும் வருகின்றோமே பிறகு என்ன ஞானத்தைப் பெறுவது என்பற்று வினவுகிறோம். 
 
நம் முன்பாக அப்பரடிகள் தோன்றி இவ்வாறு மொழிகின்றார்:
கங்கை யாடிலென் காவிரி யாடிலென் 
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென் 
ஒங்கு மாகடல் ஓதநீ ராடிலென் 
எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே - அப்பர் தேவாரம் 4/பொதுபாவநாசத்திருக்குறுந்தொகை-2.
 
அப்பரடிகளே இவ்வாறு கூறவேண்டிய காரணம் என்ன என்று திகைத்து நிற்கிறோம். 
 
நம் முன்பாக ஆதிசங்கரர் தோன்றி வேதம் கூறுவதை இவ்வாறு விளக்குகிறார்.
 
"மோட்சத்திற்குக் காரணமான சாதனங்களுள் பக்தியே சிறந்தது. தன்னுடைய சூக்கும சரீரத்தைத் தொடர்ந்து சிந்தித்தலே (ஸ்வ - ஸ்வரூப அனு சந்தானம் - பக்தி - இதி) பக்தி என்று கூறப்படுகிறது." - விவேக சூடாமணி 31
 
ஆதிசங்கரரை அடுத்து மீண்டும் அப்பரடிகள் இவ்வாறு கூறுகிறார்: 
 
தேடிக் கண்டு கொண்டேன் 
திருமாலொடு நான்முகனும் 
தேடித் தேடொணாத் தேவனை - என்னுளே 
தேடிக் கண்டு கொண்டேன். - அப்பர் 4 / திருஅங்கமாலை பண்: சாதாரி - 12
 
இப்போது நம் முன் நிற்பவர் அவ்வை மூதாட்டி அவர் என்ன சொல்கிறார் என்று கேட்போம்:
 
உடம்பினைப் பெட்ரா பயனாவ தெல்லாம் 
உடம்பினில் உத்தமனைக் காண் - அவ்வைக் குறள்  - 11
 
மனிதராய்ப் பிறந்தோர் அனைவரும் உடம்புக்குள்ளே இறைவனைக் காண வேண்டுமா? இதுவரை யாரும் இவ்வாறு கூறவில்லையே என்று திகைத்து நிற்கிறோம்.
 
இப்போது மீண்டும் ஆதிசங்கரர் தோன்றி வேத விளக்கம் கூறுவதைக் கேட்போம்:
 
1."எப்படியோ அடைதற்கரிய மனிதப்  பிறவியையும் அதிலும் ஆண் பிறவியையும், வேதத்தின் உட்கருத்தையும் அறிந்து, எவனொருவன் தன்னுடைய முத்தியின் பொருட்டு முயற்சி செய்யவில்லையோ அந்த மூடன் ஆத்மாவைக் கொன்றவனாகிறான். ஏனெனில் பொய்மையைக் கைக் கொண்டதால், உண்மையாகிய தன்னை அழித்து விடுகின்றான்" - விவேக சூடாமணி 4
 
2.இங்கே இவ்வுடலிலேயே சத்துவகுணம் நிறைந்த மனதில் புத்தி குகையில் (பிரமரந்திரம்) அவ்யாத்ருத ஆதாசத்தில் (நெற்றி நடுநிலையில்) சிறந்த ஒளியுடன் ஆத்மாவானது நடுப்பகல் சூரியன்போல் தனது ஒளியால் இவ்வுலகனைத்தையும் பிரகாசிப்பித்துக் கொண்டு விளங்குகின்றது" - விவேக சூடாமணி 132
 
3.அடக்கப்பட்ட மனத்தால் உன்னிடத்திலேயே நீ, உன்னுடைய ஆத்மாவை  இதுதான் நான் என்று புத்தியின் தெளிவால் நேராக அறிவாயாக."
 
"பிறப்பு இறப்பு ஆகிய அலையுடன் கூடிய பிறவிக்கடலை கடப்பாயாக. பிரம்ம ரூபத்துடன் நிலைபெற்றவனாய், செய்ய வேண்டியதைச் செய்தவனாய் ஆவாயாக." - விவேக சூடாமணி 136.
 
வேதம் காட்டும் வழியில் முத்தி அடைதற்பொருட்டு முயற்சி செய்யாத மனிதர் அனைவரும் மூடர்களா? தங்களுடைய ஆத்மாவைத் தாங்களே கொன்றவர்களா? ஐயோ, தலை சுற்றுகிறதே!
 
மீண்டும் அவ்வை மூதாட்டி வருகிறாரே ! என்ன சொல்லப் போகிறார் என்று கேட்போம்:
 
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் 
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை 
திருவா சகமும் திருமூலர் சொல்லும் 
ஒருவா சகமென் றுணர். - நல்வழி - 40.
 
என்னவிந்தை! திருக்குறளும், வேதங்களின் சிகரமான உபநிஷதங்களும், அப்பர், சம்பந்தர், சுந்தரர்பாடிய தேவாரமும், பரஞ்சோதி முனிவரின் சிவஞான போதமும், மாணிக்கவாசகரின் திருக்கோவையார், திருவாசகமும், திருமூலர் திருமந்திரமும் ஒரே கருத்தையே வெளிப்படுத்துகின்றனவா?
 
இதோ, மூவர் தேவாரத்தையும் கரத்தில் எடுக்கின்றோம்: ஆழ்ந்து ஆய்வு செய்கின்றோம்; மற்ற நூல்களோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றோம். ஆம்; அவ்வையின் வாக்கு சத்தியவாக்கே! நம்முடைய ஆய்வின் விளைவாக "வேத விளக்கமே மூவர் தேவாரம்" என்ற நூல் முகிழ்ந்துள்ளது. மூவரையும் மனம், மொழி, மெய்யால் வணங்கி இந்நூலை நடராஜப் பெருமானின் திருவடிகளிலே சமர்ப்பிக்கின்றேன். நான் கண்ட உண்மை, காண்க இவ்வையம் என்று பிரார்த்திக்கின்றேன்.
 
இந்த ஆய்வு நூலை அன்போடு கண்ணுற்று வாழ்த்துரை வழங்கியுள்ள திருப்பனந்தாள், காசிமடம் அதிபர், கயிலை மாமுனிவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்களுக்கும் அணிந்துரை வழங்கியுள்ள Dr.சுதா சேஷய்யன் M.D. அவர்களுக்கும் என்னுடைய வணக்கமும் நன்றியும் உரித்தாக்குகின்றேன்.
 
இந்நூலை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வழங்கும் புத்தக உலகின் முடிசூடா மன்னர் திரு.ஏ.திருநாவுக்கரசு செட்டியார் அவர்களுக்கும், இளையவர் திரு.T.R.இராமநாதன் செட்டியார் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.
 
ஞானம் பயில்வோம்; நமனை வெல்வோம்!
 
இஞ்ஞனம்,
பா.கமலக்கண்ணன் 
துணை மாவட்ட ஆட்சித் தலைவர் (ஓய்வு).
 
பொருளடக்கம்:
01.தேவாரம் அருளிய முமூர்த்திகள்;  
02.இறைவனைப் பற்றிய உண்மைகள்;  
03.இறைவன் படைத்தவை;  
04.பரப்பிரமத்தின் சொரூபமே ஜீவன்;  
05.மனித உடலில் ஜீவன் இருக்குமிடம்;  
06.ஜீவனின் தோற்றம்;  
07.இறைவனின் அடிமுடி;  
08.சூக்கும சரீரமே ஆறாவது அறிவு;  
09.ஜீவனைக் கண்டால் பாவம் போகும்;  
10.தசநாதங்களும் இயற்கை மணமும்;  
11.முத்தி சித்தி நிலைகள்;  
12.பொய்த்தவத்தார் சிவனை அறியார்;  
13.சிறு தெய்வங்கள்;  
14.தேவாரத்தில் பரிபாஷை;  
15.இறைவனைத் தேடுவது எங்கே ?; 
16.தேவாரத்தில் அகத்தியர்;  
17.நூற்பயன். 
 
ஆசிரியர் குறித்து: திரு.பா.கமலக்கண்ணன் அவர்களின் முதல் நூல் 'ஞானக்கனல்' வானதி பதிப்பகத்தால்  1989-ல் வெளியிடப்பெற்று இதுவரை பத்து பதிப்புகள் வந்துள்ளன. இவர் திருஅருட்பா 6733 பாடல்களுக்கும் ஞானவிளக்க உரை எழுதியுள்ளார். தேவாரம், திருவாசகம், திருமந்திரம், சிவஞானபோதம், ஆகிய அனைத்தும் வேதங்களின் விளக்கமே என்று நிறுவி நூல்களை உருவாக்கியுள்ளார். திருவள்ளுவரின் சுயசரிதையை வெளிப்படுத்தி அவர் பிறந்தது கரூர்; இயற்பெயர்: சாம்புவமூர்த்தி, தந்தையார் சாம்பசதாசிவன் என்றும் அவர் அகத்தியருடைய சீடர் என்றும் நிறுவியுள்ளார். சிலப்பதிகாரத் தலைமை பொற்கொல்லன் ஒரு யவனன் என்று நிறுவியுள்ளார். இவர் தமிழில் முப்பத்திரண்டு நூல்களும் ஆங்கிலத்தில் நான்கு நூல்களும் உருவாக்கியுள்ளார். அவ்வைக்குறள், ஞானவாசிட்டம் ஆகிய அரிய நூல்களை இவர் வெளிக்கொணர்ந்துள்ளார். இவருடைய 'சித்தர் தத்துவம்' என்ற நூல் 2001-ம் ஆண்டில் சிறந்த நூலாகத் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப் பெற்றது.
More Information
SKU Code VAN B 407
Weight in Kg 0.540000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பா.கமலக்கண்ணன் - P.Kamalakannan
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:வேத விளக்கமே மூவர் தேவாரம் - பா.கமலக்கண்ணன் - Vedhavilakkamae Moovar Thevaaram - Veda Vilakkame Moovar Devaram - Pa Kamalakannan - Vedha Vilakame Moovar Dhevaram

Similar Category Products





Other Books by பா.கமலக்கண்ணன் - P.Kamalakannan