Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

வேண்டியது அருளும் சதுரகிரி மகிமை - கயிலைமாமணி வி.சரவணன் Vendiyathu Arulum Sadhuragiri Magimai

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 503
₹70.00
பேப்பர்பேக் அட்டை;  
மொழி: தமிழ்; 
ஆன்மீகம் நூல்;
122 பக்கங்கள்;
வானதி பதிப்பகம்.                          

 FREE SHIPPING ON ALL ORDERS. 
 Prices are Inclusive of Tax.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்த நூல் வேண்டியது அருளும் சதுரகிரி மகிமை, கயிலைமாமணி வி. சரவணன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

அடியேனைப் பற்றி...
சிவாய நம:
ஓம் அகத்தீஸ்வராய வித்மஹே!
பொதிகை சஞ்சாராய தீமஹி!!
தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்:

அன்புள்ளம் கொண்ட ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம். அடியேன் பெயர் கயிலைமாமணி சரவணன் (வயது 33). பேரானந்தம் கொண்ட ஆன்மீக செய்தி வாயிலாக உங்களிடம் அறிமுகப்படுத்தி கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

அடியேனுக்கு ஆன்மீகத்தில் அதீத நம்பிக்கை. இதன் விளைவு பிறவாமையை அடைவது. இதற்கான வழியை யாரிடம் கேட்பது என்று கேள்விகள் எழும்போது பதிலாக வந்தது சித்தர்கள்.

ஆம், இந்த சித்தர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று எண்ணும் போது உடன் நினைவில் வருவது அகத்தியர். அவர் காவி உடை தரித்து சடாமுடியுடன் கையில் கமண்டலத்துடன் இருப்பது திரைப்படங்களில் பார்த்து பழகிப்போன உருவம்.

உண்மையில் சித்தர்கள் அப்படித்தான் இருப்பார்களா? இல்லை வேறு மாதிரி இருப்பார்களா? வேறு மாதிரி என்றால் எப்படி இருப்பார்கள்? அவர்களது வாழ்க்கை முறை என்ன? அவர்களது வயது என்ன? அவர்களது நோக்கம் என்ன? அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?

என்பதைப்பற்றி ஆராயும்போது மன்னிக்கவும் அவர்களைப் பற்றி  ஆராயும் அளவு அடியேனுக்கு அருகதை இல்லை. எனவே, அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டபோது, இதற்கெல்லாம் விடையாகக் கிடைத்தது சதுரகிரி.

இந்த சதுரகிரியில் என்ன இருக்கிறது? எப்படி இருக்கிறது? இங்கு அடியேனுக்கு ஏற்பட்ட அனுபவம், அதிசய சம்பவங்கள் பற்றியும், இந்த சதுரகிரி எங்கே இருக்கிறது என்பதைப் பற்றியும், சதுரகிரியில் உள்ள ஒவ்வொரு இடங்களைப் பற்றியும் வரலாற்று உண்மைகளுடன் தெளிவாக இனி பார்ப்போம். வாருங்கள்.

அடியார்க்கு அடியார் 
- கயிலைமாமணி V. சரவணன்
1984, உத்தமர் கோவில்,
திருச்சி -621 216
Ph.98420 38933.

பொருளடக்கம்:
01.சஞ்சீவகிரி எனும் சதுரகிரி; 
02.மாவூற்று;  
03.தாணிப்பாறை; 
04.யாத்திரைப் பயணிகள் அறியவேண்டியது;  
05.அத்திரி மகிரிஷி வனம்;  
06.காராம் பசுத் தடம்;  
07.கோரக்கர் குகை;  
08.இரட்டை லிங்கம்;  
09.நாவல் ஊற்று;  
10.பச்சரிசி பாறை;  
11.பிலாவடி கருப்பண்ணசாமி கோவில்;  
12.சதுரகிரி;  
13.சுந்தரமூர்த்தி லிங்கம்;  
14.சுந்தர மகாலிங்கம் கோயில்;  
15.சட்டைநாதர்;  
16.சந்தன மகாலிங்கம் கோவில்;  
17.தவசிப்பாறை நோக்கி;  
18.மாமர ஊற்று;  
19.வெள்ளைப் பிள்ளையார்;  
20.நடுகாட்டு நாகர்;  
21.பெரிய மகாலிங்கம்;  
22.சித்தவனம்;  
23.தவசிப்பாறை;  
24.போகர் குகை;  
25.திருக்கை கன்னிமார். 

நூல் ஆசிரியரைப் பற்றி: 
கயிலைமாமணி வி.சரவணன் அவர்கள், திருச்சி உத்தமர் கோவிலில் 19-6-1977-ல் திரு வடிவேல் நாட்டார், திருமதி விஜயராணி அவர்களுக்கு மகனாகப் பிறந்தார். இவர் திருச்சி தேசிய கல்லூரியில் பள்ளிப் படிப்பு முதல் கல்லூரி வரை பயின்றவர். இக்கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டமும், அழகப்பா பல்கலைக்கழகத்தில் இளங்கலை நூலக அறிவியல் பட்டமும் பெற்றவர். சிறு வயது முதல் ஆன்மீகத்தில் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளபடியால் குமாரி முதல் இமயம் வரை பல ஸ்தலங்களுக்கு சென்றுள்ளார். தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் தான் சென்று வந்த ஸ்தலங்களை வீடியோ வடிவிலும் வெளியிட்டு வருகிறார். திருக்கயிலை பயணம் சென்று தரிசித்து வந்ததற்காக தென்சேரி மலை திருநாவுக்கரசு மடம் தலைவர் தவத்திரு.முத்துசிவராமசாமி அடிகளாரிடம் கயிலைமாமணி, கயிலை மாமணி விருது மற்றும் காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் கயிலாஷ் தர்ஷன் ரத்னா என்ற விருதும் பெற்றுள்ளார். இவர் தினசரி நாளிதழ், வார இதழ், மாத இதழ்களிலும் பல ஆன்மீக கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பல இடங்களில் 18 சித்தர்களுக்கு ஆலயங்கள் எழுப்பியுள்ளார். மற்றும் அனுமன் ஆலயம் ஒன்ரையும் நிர்வாகம் செய்து வருகிறார்.
More Information
SKU Code VAN B 503
Weight in Kg 0.450000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name கயிலைமாமணி வி.சரவணன் - Kayilaimaamani V.Saravanan
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:வேண்டியது அருளும் சதுரகிரி மகிமை - கயிலைமாமணி வி.சரவணன் Vendiyathu Arulum Sadhuragiri Magimai

Similar Category Products





Other Books by கயிலைமாமணி வி.சரவணன் - Kayilaimaamani V.Saravanan