Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Yoga Therapy for Obesity & Constipation உடல் எடை, தொந்தி, மலச்சிக்கல் நீக்கும் யோகாசனங்கள் - ஆசனா இரா.ஆண்டியப்பன் Udal Edai, Thondhi, Malachikkal Neekum Yogasanangal by Asana R Aandiappan

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 216
₹60.00
யோகாசனம் புத்தகம்; 
படிக்கக்கூடிய எழுத்துரு; 
காகித அட்டை; 
128 பக்கங்கள்; 
முதல் பதிப்பு:  ஆகஸ்ட் 2001; 
7வது பதிப்பு:  நவம்பர் 2018;
பாரதி பதிப்பகம்.

FREE SHIPPING ON ALL ORDERS. 
Prices are Inclusive of Tax.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
Best book that covers the Yoga practices to effectively address Obesity.
How to reduce weight with regular yoga practice and yogic diet. 

பதிப்புரை:

இயல்பான உடலமைப்பைப் பெற்றிருப்பதே - ஆணாயினும், பெண்ணாயினும் - தோற்றத்தில் அழகைத்தரும். உடல் எடை கூடி, தொந்தியும் தொப்பையுமாக காட்சியளித்தால் பார்ப்பதற்கு விகாரமாகத் தெரிவது மட்டும் அல்லாமல், பருமனான உடலில் நோய்கள் விரைவில் தொற்றிக் கொள்ளும்  என்பதும் கண்கூடு. மேலும் நோய்கள் பலவற்றுக்கும் அடிப்படையானது மலச்சிக்கல் ஆகும்.

இவற்றைக் குணமாக்கி இயல்பான உடலமைப்பையும் ஆரோக்கியத்தையும் பெற சிகிச்சைகளும், மருந்துகளும் உண்டென்றாலும், செலவில்லாமல் எளிய முறையில் இயற்கையான வழியில் யோகாசனப் பயிற்சிகளின் மூலம் இவற்றைக் குணப்படுத்தும் வழிமுறைகளை யோகாசனப் பேராசிரியர் ஆசனா.இரா.ஆண்டியப்பன் அவர்களுக்கு எங்கள் நன்றி.

                                                                                                                             - பதிப்பகத்தார் .

சமீப காலம் வரை நமது தேசத்தில் உடல் பருமனாக இருப்பது தேக பலத்திற்கு அடையாளமாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய நவநாகரிக சமுதாயத்தில் தோன்றுகிற பல வியாதிகள் அவை பருமனாக இருப்பவர்களுக்கே எளிதில் வரக்கூடும் என்பது தெரிந்த பிறகே இதன் அபாயத்தை மக்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.

நீரிழிவு, இரத்த அழுத்தம், இருதய நோய், இரணியா, மூத்திர உறுப்புக் கோளாறுகள், மூட்டுப்பிடிப்பு, மலச்சிக்கல், மூலம் போன்ற பல வியாதிகள் இதனால் எளிதில் நேரக்கூடியவை. மேலும் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு வியாதியை குணப்படுத்துவதும் சிக்கலான காரியமாகும். சொல்லப்போனால் அநேகம் பேருக்கு உடல் பருமன் குறைந்ததும் வியாதிகளுள்  பாதிக்கு மேல் குணமாகி விடுவதைக் காணலாம்.

இப்புத்தகத்தில் கூறியிருக்கும் பயிற்சிகளை ஒழுங்காக ஒழுங்காக  உறுதியாக தொடர்ந்து நம்பிக்கையுடன் நிதானமாக அவரசப்படாமல் தொடர்ந்து நம்பிக்கையுடன் நிதானமாக அவரசப்படாமல் செய்பவர்களுக்கு நிச்சயமாக, உடல் எடை குறையும், தொந்தி கரையும்.

பின்வரும் பயிற்சிகள் மிக எளிய பயிற்சிகள். இவற்றுள் முடிந்தவரைச் செய்தாலே நல்ல பயன் கிடைக்கும். பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்னால் உடல் எடையையும் தொந்தியின் சுற்றளவையும் அளந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பயிற்சி தொடர்ந்த 2 வாரத்தில் வயிற்றுப் பக்கங்களில் இருபுறமும் சிறு பள்ளம் விழும். அதுவே உடல் எடை குறையும் முதல் அறிகுறி. அடுத்து அடிவயிற்றின் அளவு குறைந்து கால் சட்டை இடுப்பில் பொருந்தாமல் கீழே சரியும்.

மூன்று வாரம் தொடர்ந்து பயிற்சி செய்தபின் உடல் எடையையும், தொந்தியின் அளவையும் பார்த்தால் மிகக் குறைந்திருப்பதை உணரலாம்.

உடலை வனப்புள்ளதாக மாற்றி, உற்சாகமாக வாழவைக்கப் பயிலுதல்தான் யோகாசனப் பயிற்சியாகும். உடல் உறுப்புகளை, அமைதியான முறையில் இயக்கி, அதன் மூலம் நுரையீரலை உயிர்க்காற்றால் நிரப்பி, இதயத்தை வலிமையாக்கி, இரத்தத்தை விரைவுபடுத்தி, கழிவுப் பொருள்களை விரைவாக வெளியேற்றி உடலைத் தூய்மைப்படுத்தவும், உடலை மென்மையாகவும், மெருகேற்றவும் மேற்கொள்கின்ற முயற்சியே யோகாசனப் பயிற்சியாகும். வயிற்றில் வளரும் கொழுப்பினைக் கரைத்து, குறைத்து, வெறுமையாக்கி, வளமையான தசை திசுக்களை உருவாக்குவதே யோகாசனப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.

ஆசிரியரை பற்றி: யோகாசனப் பேராசிரியர் ஆசனா இரா.ஆண்டியப்பனின் ஆசனப் பயிற்சி முறைகள், பலன்கள் அனைத்தும், தமிழ்நாட்டுச் சித்தர் ஞானத்திற்குரிய ஒளிச் சுடர்களாகத் திகழ்கின்றன. சன் டி.வி.யில் ஆண்டியப்பன் நடத்திவரும் யோகாசனப் பயிற்சிகள், ‘யோகக் கலை’ பத்திரிகைக்குரிய விளக்கங்களாகவும் விளங்குகின்றன. திருமூலரின் யோக புத்தகமான திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ள அஷ்டாங்க யோகா வழிமுறையை பின்பற்றி வருபவர் குருஜி. டாக்டர். ஆசன ஆண்டியப்பன். பண்டையகால யோகாவைப் பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்து யோகாவின் பெருமைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லி பயிற்சியளித்தும் வருகிறார் இவர். தனக்கென ஒரு தனி யோகா முறையையும் ஏற்படுத்தியுள்ள ஆசன ஆண்டியப்பன், பல்வேறு சிகிச்சை முறைக்கு பலனளிக்கும் வகையில் யோகாவை பயன்படுத்தி உதவியுமுள்ளார்.

Read more at: https://yourstory.com/tamil/60fbb5d40e-yoga-gives-peace-of-body-and-mind-the-list-of-training-centers-
More Information
SKU Code Bharti B 216
Weight in Kg 0.100000
Book Type Paperback
Brand Bookwomb
Author Name Asana R Aandiappan ஆசனா இரா.ஆண்டியப்பன்
Publisher Name Bharathi Pathippagam பாரதி பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Yoga Therapy for Obesity & Constipation உடல் எடை, தொந்தி, மலச்சிக்கல் நீக்கும் யோகாசனங்கள் - ஆசனா இரா.ஆண்டியப்பன் Udal Edai, Thondhi, Malachikkal Neekum Yogasanangal by Asana R Aandiappan

Similar Category Products