Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

SKU:
TMN B 038
₹130.00
புதினம்
பக்கம் : 296
பதிப்பு : 7
வெளியீட்டு ஆண்டு : 2008

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

"ஒவ்வொரு இதழிலும் உங்கள் எழுத்தில் இருந் வார்த்தைகளின் அன்பு இழைகளால் செய்யப்பட்ட பின்னலும் சமயங்களில் திராவக வீச்சுகளுமாய்.. ஒரு கட்டுரைத் தொடரை கதையின் சுவாரசியத்துடன் கொடுத்தீர்கள்.  'அழகு யதேச்சை.. முயற்சி செய்து பெறுவதல்ல. காதல் காமத்திற்காக மட்டுமல்ல' என்று பல வரிகள் நெஞ்சில் அசையாமல் அமர்ந்திருக்கின்றன
 
பிரியங்களுடன்,
 
பட்டுக்கோட்டை பிரபாகர்." "அடிபட்டு பத்தினியாய் இருப்பதைவிட சுதந்திரமாய் தேவடியாளாக இருப்பது மேல்" என்கிறார் கும்பகோணம் டீச்சர், இது பெண் ஆண் மீது உமிழ்ந்த வெறுப்பு எச்சில், அடக்கி ஆளும் ஆணின் மீது  கொண்ட ஆங்காரம், நேசமாய் பார்க்கும் போது அவனின் கால்களில் சரணாகதியாக கிடக்கும் பெண் தன்னை ஒடுக்கும் போது  மரபு நாசமாக போகட்டும் என்று சபிப்பதில் ஆச்சர்யம் இல்லை" என்பதை இந்த நாவலில் உணர்வு வலைகளை கொண்டு பின்னியிருக்கிறார் ஆசிரியர். "நாகராஜன் இரு மணம் புரிந்து கொள்கிறான். இரண்டாவது மனம் அவனின் ஆசைக்காக மட்டுமே. இரண்டாவது மனைவியும், அவளது மகளான ராஜேஸ்வரியின் துன்பத்தை பற்றிய கொடுமை. ஆணாதிக்க சமுதாயத்தை பற்றியும், ஆண்கள் பிறரின் தேவையை தனக்கு எவ்வாறு சாதகமாக்கி கொள்கிறார்கள்." "இந்த வீடு சரியாய் இல்லை. ஏழ்மை மட்டும் இல்லை. கௌரவமும் சரியாக இல்லை. இவர்களை விட ஏழைகள் உண்டு கும்பகோணத்தில். யாரும் அந்த வீட்டு பெண்ணின்மீது கைவைக்க முடியாது. ஆண் இல்லாத குடும்பமானால் இதுதானா"
More Information
SKU Code TMN B 038
Weight in Kg 0.060000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name THIRUMAGAL NILAYAM திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:Kai Veesamma Kai Veesu - கை வீசம்மா கை வீசு