Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு (12 தொகுதிகள்) - Aanandha Rangappillai Avarkalin Dinappadi Sethik Kurippu (12 Thoguthigal)

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Akani B 049
Regular Price ₹8,400.00 Special Price ₹7,500.00

Save: 900.00 Discount: 10.71%

நினைவுக்குறிப்பு. 
 
பேப்பர்பேக்;  
5190 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
அகநி வெளியீடு.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஃப்ரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனியில் மொழிபெயர்ப்பாளராக இருந்த அனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள், தற்காலிக வாசிப்புக்கு ஏற்ற வகையில் திருத்தப்பட்டு, மீண்டும் வெளியிடப்பட்டுள்ளன. சென்னையில் பிறந்த அனந்தரங்கம் பிள்ளை, புதுச்சேரியின் பிரெஞ்சு ஆளுநராக த்யூப்ளே இருந்தபோது, 1746ல் தலைமை மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். 1756வரை அவர் அந்தப் பதவியில் இருந்துவந்தார். 1761ல் அவர் மரணமடையும்வரை, தொடர்ச்சியாக நாட்குறிப்பில் அன்றாட நிகழ்வுகளைப் பதிவுசெய்துவந்தார். 1736 செப்டம்பர் 6ஆம் தேதி முதல், அவர் மரணமடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, அதாவது 1761 ஜனவரி பத்தாம் தேதிவரை இந்த நாட்குறிப்புகளை சுமார் 25 ஆண்டுகளுக்கு அவர் தொடர்ச்சியாக பதிவுசெய்து வந்திருக்கிறார். அனந்தரங்கம் பிள்ளையின் டைரிக் குறிப்புகள் பல சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடக்கியவை. 1755ல் லிஸ்பனில் நடந்த மிகப் பெரிய நிலநடுக்கம், ஆளுநர் துய்ப்ளேவின் பாதுகாவலர்களாக, வாட்டிகனில் பாதுகாப்புப் பொறுப்பில் உள்ள சுவிஸ் கார்டுகள் செயல்பட்டது, புதிய வாழ்வைத் தேடி புதுச்சேரிக்கு வந்த ஆப்பிரிக்க கறுப்பினத்தவர்கள் பற்றிய குறிப்புகள், துய்ப்ளேவின் துணைவியார் மதாம் துய்ப்ளேவுக்கும் அனந்தரங்கம் பிள்ளைக்கும் இடையிலான மோதல்கள், பிரஞ்சு அரசவைச் செய்திகள் ஆகியவை அவரது நாட்குறிப்பில் இடம்பெற்றிருக்கின்றன.
 
எழுத்தாளர் குறிப்பு :  
டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப., மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகிலுள்ள வடகரை கிராமத்தில் பிறந்தவர். முதுகலை ஆங்கில இலக்கியமும் சட்டமும் படித்தவர். ஐ.ஏ.எஸ். தேர்விற்காக வரலாற்றை ஒரு பாடமாக எடுத்து படித்தப் பிறகு, அவரின் முழு ஆர்வமும் வரலாற்றின்மீதே திரும்பியது. வரலாற்றைத் தேடி பயணிப்பதில் தீராத ஆர்வம் உள்ளவர். இயற்கைப் பாதுகாப்பு செயல்பாட்டாளர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராய் இருந்தபோது மாவட்டத்தில் உள்ள அனைத்து மலைப்பகுதிகளிலும் பத்து லட்சம் விதைகளைத் தூவி, மலைவளம் காத்தவர். மாவட்டத்தில் இருக்கும் ஆயிரம் ஆண்டுகாலப் பழமையான கோவில்களில் உள்ள கல்வெட்டுகளைத் தொல்லியல்துறை உதவியுடன் படியெடுத்தவர். 'திருக்குறளில் உள்ள உள்நாட்டு வெளிநாட்டுச் சட்டக்கூறுகள்' என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முதல் பட்டமளிப்பு விழாவில் 'முனைவர்' பட்டம் பெற்ற முதல் மாணவர். தற்போது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.                                                                                                                                                                                                                                      அ. வெண்ணிலா என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பிறந்த இவர் “ஆதியில் சொற்கள் இருந்தன”, “நீரிலலையும் முகம்”, “கனவிருந்த கூடு” உள்ளிட்ட ஏழு நூல்களை எழுதியுள்ளார். சென்னை புத்தகக் கண்காட்சி, நெய்வேலி புத்தகக் கண்காட்சிகளில் சிறந்த படைப்பாளி விருது, சிற்பி அறக்கட்டளை விருது, கவிப்பேரரசு - கவிஞர் தின விருது, ஏலாதி இலக்கிய விருது, தமுசெ விருது, சக்தி -2005 விருது போன்றவற்றைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய “கனவைப் போல மரணம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
More Information
SKU Code Akani B 049
Weight in Kg 4.460000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப, அ.வெண்ணிலா - Dr M.Rajendiran I.A.S, A.Vennilaa
Publisher Name அகநி வெளியீடு - Akani Veliyeedu
Write Your Own Review
You're reviewing:ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு (12 தொகுதிகள்) - Aanandha Rangappillai Avarkalin Dinappadi Sethik Kurippu (12 Thoguthigal)

Similar Category Products





Other Books by டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப, அ.வெண்ணிலா - Dr M.Rajendiran I.A.S, A.Vennilaa