Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

YOUR INFINITE POWER TO BE RICH - Tamil - ஆழ்மனத்தின் அளப்பரிய சக்தியை உபயோகித்துப் பெரும் செல்வந்தராவது எப்படி

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 4314
₹299.00
சாதா அட்டை; 
மொழி: தமிழ்; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-13: 978-8183222792

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

பணம் மிகவும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்ற மக்களுக்காகவும், வாழ்க்கை தங்களுக்காகப் பாதுகாத்து வைத்துள்ள வளங்களைக் கையகப்படுத்த முற்படுபவர்களுக்காகவும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ள எளிமையான உத்திகளைச் செயல்படுத்த தயாராக இருக்கின்ற, உடனடி விளைவுகளை விரும்புகின்ற மக்களுக்காக இது எழுதப்பட்டுள்ளது.
 
இதில் விளக்கப்பட்டுள்ள மனித மனத்தின் அடிப்படை விதிகளை ஏற்றுக் கொண்டு கடைபிடித்து வந்தால், நிச்சயமான, உறுதியான விளைவுகளை நீங்கள் பெறுவீர்கள். இதில் கூறப்பட்டுள்ள உத்திகளை ஒரு பன்னிரண்டு வயதுச் சிறுவன்கூட எளிதாகப் புரிந்து கொண்டு செயல்படுத்தும் வகையில் எளிமையான நடையிலேயே நான் இதை எழுதியுள்ளேன்.
 
இதில் கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள் அனைத்தும், இதில் விவரிக்கப்பட்டுள்ள உளம்சார்ந்த விதிகளையும் ஆன்மீக விதிகளையும் பயன்படுத்திச் செல்வந்தர்களாக ஆனவர்களைப் பற்றியது. இவர்கள் பல்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்கள். மேலும், அவர்கள் பலதரப்பட்ட வருவாய் நிலைகளைச் சேர்ந்தவர்கள். சமூகத்தின் வெவ்வேறு  நிலைகளில் இருந்து வந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட விதத்தில் சிந்தித்ததின் மூலமும், ஆழ்மனத்தின் சக்தியைச் சரியான முறையில் பயன்படுத்தியதன் மூலமும் ஏராளமான செல்வத்தைக் குவித்துள்ளனர்.        
 
செல்வச் செழிப்புடன் கூடிய மகிழ்ச்சியான, வெற்றிகரமான ஒரு வாழ்க்கையின் பலன்களை நீங்கள் அறுவடை செய்ய விரும்பினால், இப்புத்தகத்தை நீங்கள் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். இதில் கூறப்பட்டுள்ளவற்றின்படி அப்படியே நடந்து கொள்ளுங்கள். அப்போது ஒரு பிரம்மாண்டமான, அருமையான, மகிழ்ச்சியான, செல்வச் செழிப்பான, உன்னதமான வாழ்க்கைக்கான பாதை உங்கள் கண்முன் விரியும்.
 
ஆசிரியர் :   டாக்டர் மர்ஃபி உலகெங்கிலும் வாழும் மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளார். அவரின் வழியை JMWGroup.net at Dr-Joseph-Murphy.com முன்னெடுத்து வருகிறது.
 
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு எழுதினார், கற்பித்தார், ஆலோசனை வழங்கினார், மற்றும் விரிவுரை செய்தார். அவரது விரிவுரைகள் மற்றும் பிரசங்கங்கள் ஆகியவற்றை கேட்பதற்க்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஆயிரக் கணக்கான மக்கள் அவரது தினசரி வானொலி நிகழ்ச்சியையும், அவர் எழுதிய 30 புத்தகங்களையும் வாசித்துள்ளனர்.  அயர்லாந்தில் பிறந்த ஜோசஃப் மர்ஃபி பின்னர் அமெரிக்காவில் குடியேறினார். அங்கு உளவியலில் அவர் முனைவர் பட்டம் பெற்றார். அவர் தன் வாழ்வின் பெரும்பகுதியைக் கிழக்கத்திய மதங்களைப் படிப்பதில் செலவிட்டார். பல வருடங்கள் இந்தியாவில் தங்கியிருந்து ஆராய்ச்சியிலும் அவர் ஈடுபட்டார். 'அமேசிங் லாஸ் ஆஃப் காஸ்மிக் மைண்ட்', தி மிரக்கில்  ஆஃப் மைண்ட் டைனமிக்ஸ்', 'தி காஸ்மிக் பவர் வித்தின் யூ' உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட மிகச் சிறந்த ஊக்குவிப்பு நூல்களை அவர் எழுதியுள்ளார். அவருடைய 'ஆழ்மனத்தின் அற்புத சக்தி' நூல்தான் அவரது மிகப் பிரபலமாகத் திகழ்கிறது.          
 
மொழிபெயர்ப்பாளர் - நாகலட்சுமி சண்முகம்.      நாகலட்சுமி மிகச் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். மக்களிடம் பரிபூரண மாற்றம் கொண்டுவரும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு. முத்துசாமி அவர்களின் பேத்தியான நாகலட்சுமியிடம் இருக்கும் இயல்பான தமிழ் ஆர்வம், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரை இழுத்து வந்துள்ளது.
 
கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 35 புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார்.
More Information
SKU Code PRK B 4314
Weight in Kg 0.250000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788183222792
Author Name Joseph Murphy - டாக்டர் ஜோசப் மர்ஃபி. தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
Publisher Name MANJUL PUBLISHING HOUSE / மஞ்சுள் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:YOUR INFINITE POWER TO BE RICH - Tamil - ஆழ்மனத்தின் அளப்பரிய சக்தியை உபயோகித்துப் பெரும் செல்வந்தராவது எப்படி

Similar Category Products





Other Books by Joseph Murphy - டாக்டர் ஜோசப் மர்ஃபி. தமிழில்: நாகலட்சுமி சண்முகம்