Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Guhashri Audiobks 128
₹99.00

இறை இசை பாடல்கள்.

மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த தமிழ் ஒலிப் புத்தகம் முருகன் தமிழ்ப் பாடல்கள், திருபுவனம் ஜி. ஆத்மநாதன் & பம்பாய் கோமதி சுப்ரமணியம் அவர்களின் இசையில் ஆனந்தா கேசட்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

இசைகலைஞர் பற்றி:  தமிழிசை ஒன்றையே தன் ­மூச்சாகக் கருதி இசைத்தும், பாடியும் வரும் தமிழிசைக் கலைஞர் திரு.ஆத்மநாதனைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டாமா?

இவரின் பூர்வீகம் தஞ்சை மாவட்டம்  சாலிய மங்கலத்தை அடுத்த திருபுவனம் என்ற கிராமம். அப்பா குருமூ­ர்த்தி, அம்மா சந்தான லஷ்மி. விவசாயத்தொழிலை அடிப்படையாகக் கொண்டு இக்குடும்பத்தில் உள்ள குரு­மூர்த்தி அப்பொழுதே 15  ஆண்டுகளாக, பஞ்சாயத்துத் தலைவராக பதவி வகித்தவர், அம்மா சந்தான லக்ஷ்மியின் அப்பா பெயர் நாகலூர் கண்ணுச்சாமி. இவர் அன்றே ஆர்மோனியம் வாசிக்கும் கலைஞராகவும், தெருக்கூத்தில் நடிக்கும் நடிகராகவும் விளங்கியவர். இரணியன் நாடகத்தில் நாவலூர் கண்ணுச்சாமி அவர்கள் நடித்துப் புகழ்பெற்றவர். அதுபோல் குரு­மூர்த்தி அவர்களும் மகாபாரத்தில் அபிமன்யுவாக நிடித்துப் புகழ்பெற்றவர். இப்படிப்பட்ட கலைக்குடும்பத்தின் வாரிசாக வந்தவரே நம் தமிழிசைக் கலைஞர் ஆத்மநாதன்.

புரந்தர தாசன் அவர்களின் பாடல்களை தஞ்சை பிரேமா அவர்களிடம் கற்றுக்கொண்டார். அபூர்வ ராகங்களை தஞ்சை ஜெயசங்கர் ஜோஷி அவர்களிடம் கற்றுக்கொண்டார். அபூர்வ ராங்கள் என்பது கைக்கவசி, பிந்துமாதவி, நாசிக்க பூசணி போன்ற ராகங்கள். மேலும் தமிழ் கீதம், தமிழ் வர்ணம் போன்ற தமிழ் வர்ணனைகளை இவர்களிடம் ஆத்மநாதன் கற்றுக்கொண்டார்.

குருகுல வாசம் போல இசை படித்த இவர் தஞ்சை மாவட்டத்தில் உளள பல பகுதிகளுக்குச் சென்று கச்சேரி நடத்தியதோடு, புதுக்கோட்டை, மதுரை, திருச்செந்தூர், நாகர்கோவில் எனப் பல மாவட்டங்கள் தோறும் சென்று பாடி தமிழிசை வளர்த்தார், தானும் வளர்ந்தார்.

1992ஆம் ஆண்டு சென்னை வருகிறார். வயலின் சக்ரவர்த்தியான பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களைச் சந்தித்து உதவிகேட்க, இதன் மூ­லம் இவரது இசையமைப்பில் 8 ஆண்டுகள் உதவியாளராக ஆத்மநாதன் இருந்தார். இவரின் இசையில் தேவாரம், திருவாசகம், திருப்பாவை, போன்ற பக்திப்பாடல்களை ஆத்மநாதன் பாடியிருப்பது பெருமைக்குரியதாகும். இன்று நான் இசையமைப்பாளராக இருக்கக் காரணம்  குன்னக்குடி அவர்களிடம் எட்டு ஆண்டுகள் நான் கற்ற அந்த இசை அனுபவமே எனப் பெருமையாகக் கூறுகிறார் ஆத்மநாதன்.

இசைப்பணி:

1997-ல் சென்னையில் உள்ள தமிழிசைக் கல்லூரியால் விரிவுரையாளராக 3 ஆண்டுகள் இருந்தார். அப்போது மாணவர்களுக்கு  தமிழ் கீதம், தமிழ் வர்ணனை, தமிழ் கீர்த்தனைகள் போன்றவற்றை பயிற்சி அளித்தார். தமிழிசையில் அதிக ஈடுபாடு வந்ததற்கு இக்கல்லூரியில் பணியாற்றியதே காரணம் என்கிறார். காலை நேரம், மாலை நேரம் என இரு நேரமும் கல்லூரியில் பணியாற்றி இவர் மாலை நேரக் கல்லூரி மாணவர்கள் 20 பேருக்கு பயிற்சி அளித்து “சேர்ந்திசை”  நிகழ்தியது  இவரைப் பலரும் புகழச் செய்தது.

2000ம் ஆண்டில் கல்லூரிப் பணியை விட்டு வெளியே வந்தவர் “சங்கீதி சாகர் இசைக் கடல் பண்பாட்டு அறக்கட்டளை” என்ற இசை மையத்தை ஆரம்பித்தார். இங்கு வாய்ப்பாட்டு இசை மட்டுமே கற்றுக்கொடுத்தார். இதில் படித்து பல மாணவர்கள் பயனடைந்தனர் ஸ்ரீமுத்தரா, நித்திய சீனிவாசன், மார்க்கபந்து, யாழினி நிம்பி (USA) சத்திய சீலன், பெங்களூர், ரூபராஜ், தாமிணி சௌந்தர்யா, சிரன், யாழினி குமரன் (USA) ஐஸ்வரியா, யாழினி பொற்செழியன், நம்பி பொற்செழியன் (USA FETNA) போன்று நன்கு மேடைகளில் பாடிவரும் மாணவர்களை உருவாக்கியிருக்கிறார்.

இசையில் சாதித்தவை:

* இதுவை (1978 முதல் 2013 வரை) 1000 தமிழிசை மேடைக் கச்சேரி நகழ்த்தியுள்ளார்.

* 20 (ஆல்பம்) குறுந்தகடு பாடி வெளியிட்டுள்ளார்.

* 10 (ஆல்பம்) குறுந்தகடு இவர் இசை அமைத்தார்.

* இவரின் இசையின் பாடிய பிரபல பாடகர்கள் க.சுசிலா, வாணி ஜெயராம், மகாநிதி ஹோபனா, L.R..ஈஸ்வரி, ஸ்ரீ உத்ரா, ஐஸ்வர்யா, சத்யசீலன், காயத்திரி, சிரன், அனுராதா தினகரன், மருத்துவர். எஸ். வெங்கடேசன், மஹதி போன்றவர்கள் பாடியுள்ளனர்.

பெற்ற விருதுகள்:

1.    கிருபானந்த வாரியார் தலைமையில் திருச்சி பாரதன் எழுதிய முருகன் பக்தி பாடல்களை பாடியுள்ளார். இதற்குப் பெரிய விழாவாக சீர்காழி கோவிந்த ராசன் முன்னிலையில் கிருபானந்த வாரியார் ஆத்மநாதனுக்கு வழங்கிய பட்டம் “குகன் இசைச் செல்வர்” என்ற பட்டம் வழங்கப்பட்து. 1985 ல் 25 வயதில் பெற்ற பட்டமாகும்.

2.    ராஜராஜன் கல்விப் பண்பாட்டுக் கழகத்தின் சார்பாக சந்திரகாசன் மாவட்ட ஆட்சியல் தலைமையின் சார்பில், மருந்துவர் செல்லப்பா அவர்களால் பட்டுக்கோட்டையில் “இன்னிசை ஏந்தல்” என்ற விருது வழங்கப்பட்டது.

3.    நாகராஜனார் அறக்கட்டளை சார்பாக ஆர்.எம்.விரப்பன் அவர்களால் “நல்லிசைத் திலகம்” என்ற பட்டம் சென்னை தியாகராசர் கல்வி அரங்கத்தில் வழங்கப்பட்டது.

4.    வடலூர் அருளப்பா இசைச் சங்கத்தின் சார்பாக “அருட்பா இசைமணி” என்ற பட்டத்தை பழனிச்சாமி (மாவட்ட ஆட்சியர்) அவர்கள் வழங்கினார்.

5.    திருவருள் திருச்சபை சார்பாக “குகஸ்ரீ” என்ற பட்டம் 2001-ல் வழங்கப்பட்டது.

6.    2010-11 ம் வருடம் தமிழ் நாட்டு அரசு கலைப் பண்பாட்டுத்துறை சார்பாக “கலைஞன் மணி” என்ற பட்டம் வழங்கப்பட்டது.

7.    தென்கை கலை இலக்கியக் கழகம் சார்பாக திருச்சியில் “தமிழ் இசைத் திலகம்” என்ற பட்டத்தை வைரமாலை அந்தோணி சாமி அவர்கள் வழங்கினார்.

8.    Ministry of Culture என்ற இந்திய கலை மையத்திலிருந்து Karnatic Music award, Wocal award karnatic Music Seanior Followship- 2008 என்ற விருது வழங்கப்பட்டு மாதம் 12 ஆயிரம் ரூபாய் என 2 வருடத்திற்கு வழங்கியது இந்திய அரசு.

அமைப்பும் பொறுப்பும்:

* சங்கீத சாகர் கல்சுரல் டிரஸ்ட் -ன்  நிறுவனர்.

* வடலூர் அருட்பா இசைச் சங்கத்தின் செயலாளர்.

*  தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில்  நவராத்திரி விழாவின் செயலாளர்.

 

*  திருவையாறு ஆராதனை விழாவின் நிர்வாக உறுப்பினர்.

More Information
SKU Code Guhashri Audiobks 128
Weight in Kg 0.480000
Brand Bookwomb
Author Name திருபுவனம் ஜி. ஆத்மநாதன் & பம்பாய் கோமதி சுப்ரமணியம் - Thirupuvanam G. Aathmanathan & Bombay Komathi Subramaniyam
Publisher Name ஆனந்தா கேசட்ஸ் - குகஸ்ரீ வாரியார் - Ananda Casettes -Gugasri Variyaar
Write Your Own Review
You're reviewing:முருகன் தமிழ்ப் பாடல்கள் - Murugan Tamilp Padalkal

Similar Category Products





Other Books by திருபுவனம் ஜி. ஆத்மநாதன் & பம்பாய் கோமதி சுப்ரமணியம் - Thirupuvanam G. Aathmanathan & Bombay Komathi Subramaniyam