Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

கவிஞர் கண்ணதாசனின் துன்பங்களிலிருந்து விடுதலை - THUNBANGALILIRUNDHU VIDUTHALAI - KANNADASAN - Audio CD

  Store Review (4)

Contact Seller

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
KP Audiobks 007
₹80.00
ஆடியோ நூல் - Audio CD - Audio Books

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

கவிஞர் கண்ணதாசனின் துன்பங்களிலிருந்து விடுதலை, மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் கவிஞரின் குரலில். 

துன்பங்கள் என்பவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று தவிக்கிற இல்லற வாசிகள் ஏராளம். 
மனிதனுக்குத் துன்பமே இல்லாதவன் என்று எவனுமே கிடையாது. 
எல்லோருக்கும் சோதனை. எல்லோருக்கும் கஷ்டங்கள். 
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். 
நானும் பார்க்கிறேன். ஒருவர் 25 வருட காலமாக சப்-எடிட்டராகவே இருக்கிறார். 25 வருட காலமாக ஒருத்தர் அசிஸ்டன்ட் டைரக்டராகவே இருக்கிறார். இரண்டு வருட காலத்தில் ஒருவர் திடீரென்று டைரக்டர் ஆகிவிடுகிறார். அவன் மட்டும் அப்படி வந்துவிட்டானே என்று தோன்றுகிறதே தவிர தான் ஏன் வரவில்லை என்று அவனுக்கு தோன்றுவதே இல்லை.

நமக்கு வைத்தது இவ்வளவுதான் என்று ஒருவன் நடக்கத் துவங்கும்போது கிடைத்தது பெரிதாய்த் தெரிகிறது. இன்னொருவனுக்கு ஒரு வாய்ப்பு வந்தால் நமக்கு அது வரவில்லையே என்று ஏங்குவது. அவனுக்குக் கிடைப்பது நமக்கு கிடைக்கவில்லையே என்று ஏங்குவது. இன்னும் இன்னும் இன்னும் இன்னும் என்று ஏங்குவது. இதுதான் முதல் துன்பம். 

துன்பங்களைப் பொறுத்தவரை அது நம் கையில் இல்லை.
கவலையில்லாத மனிதன் என்று நான் ஒரு படம் எடுத்தேன், அதில் வந்த கவலை தீர 15 வருடங்கள் ஆகிவிட்டது.
                   - கவிஞர் கண்ணதாசன். 
 

அன்பார்ந்த நேயர்களே!
காலத்தால் அழியாத கவியரசு கண்ணதாசனின் புத்தகங்களை, ஒலிப்புத்தகங்களாய் Audio Books வடிவத்தில் கண்ணதாசன் ஆடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. மேலும் பாடல் கேட்பது போன்ற பரவசத்துடன் மிக இயல்பான குரலில், புத்தக வாசிப்பின் புது அனுபவத்தை உங்களுக்கு தரும் இந்த முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை. இந்த ஒலிப்புத்தகங்களை பிரதி எடுத்து விநியோகிப்பதையும் இன்டர்நெட்டில் ஏற்றம் செய்வதையும் தவிர்க்க உதவிட வேண்டும். உங்களின் இந்த உதவி மேலும் பல சிறந்த நூல்களை இதே போன்று ஒலி வடிவில் கொண்டுவர உங்களுக்குத் துணை புரியும்.
                                                              - காந்தி கண்ணதாசன். 

கவிஞர் கண்ணதாசனைப் பற்றி: 
கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
More Information
SKU Code KP Audiobks 007
Weight in Kg 0.300000
Brand Bookwomb
Author Name Kavignar Kannadhasan/ கவிஞர் கண்ணதாசன்
Publisher Name Kannadasan Pathippagam / கண்ணதாசன் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:கவிஞர் கண்ணதாசனின் துன்பங்களிலிருந்து விடுதலை - THUNBANGALILIRUNDHU VIDUTHALAI - KANNADASAN - Audio CD

Similar Category Products