Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

சிந்தையைக் கவர்ந்த கவிஞர் பட்டுக்கோட்டையா? கண்ணதாசனா? & இன்றைய வாழ்வுக்கு வழிகாட்டி இராமாயணமா? மகாபாரதமா? - Sinthaiyaik Kavarntha Kavinyar Pattukkottaiya? Kannathasana? & Inraiya Valvukku Valikatti Ramayanama? Mahabharathama? - Vaazhvukku Vazhikatti Ramaa

  Store Review (4)

Contact Seller

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Guhashri Audiobks 109
₹99.00

வழக்காடு மன்றம் அல்லது பட்டிமன்ற பேச்சு. 

மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த தமிழ் ஒலிப் புத்தகம் சிந்தையைக் கவர்ந்த கவிஞர் பட்டுக்கோட்டையா? கண்ணதாசனா? & இன்றைய வாழ்வுக்கு வழிகாட்டி இராமாயணமா? மகாபாரதமா?, சோ.சத்தியசீலன், அ.அறிவொளி குழுவினர்களின் வழக்காடு மன்ற உரையாடல்கள் ஆனந்தா கேசட்ஸ் நிறுவனத்தாரால்  வெளியிடப்பட்டது. 

வழக்காடு மன்றம் பேச்சாளர் குறித்து: 

சோ. சத்தியசீலன், (14 ஏப்ரல் 1933 - 9 ஜூலை 2021) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழறிஞராவார். பட்டிமன்றப் பேச்சாளர், சமயச் சொற்பொழிவாளர், வர்ணனையாளர், தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். வயது முதிர்வின் காரணமாக 2021 ஜூலை 9 ஆம் நாள் திருச்சியில் காலமானார்.

டாக்டர் அ. அறிவொளி:- தமிழறிஞர், ஆன்மீக இலக்கிய சொற்பொழிவாளர், சிறந்த பட்டிமன்ற நடுவர், திருக்கோவில்கள் வரிசைகள் என்ற தலைப்பில் தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள கோவில்கள் மற்றும் பஞ்சபூத ஸ்தலங்களுக்கு நேரில் சென்று அதன் வரலாறுகளையும், சிறப்புக்களையும் ஆராய்ந்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். மேலும் 120-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.

டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் மாற்று முறை மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் அறிவொளி. உலக நாடுகளுக்கு மாற்று மருத்துவத்தை கொண்டு சென்ற இவர் புற்றுநோய்க்கு தமிழ் மருத்துவத்திலும் தீர்வு கூறினார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் பூம்புகார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி உள்ளார்.

திருச்சி கம்பன் கழகத்தில் ஆய்வுரை திலகம் என்ற பட்டம் மற்றும் கபிலவாணர் விருது பெற்றவர் டாக்டர் அ. அறிவொளி. 1986-ம் ஆண்டு வழக்காடு மன்றத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். 

இவரது சொந்த ஊர் நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சிக்கல். தமிழ்த் தொண்டாற்றும் பொருட்டு திருச்சியில் வசித்து வந்தார். இவர் 08.05.2018 அன்று இறைவனடி சேர்ந்தார்.

More Information
SKU Code Guhashri Audiobks 109
Weight in Kg 0.480000
Brand Bookwomb
Author Name சோ.சத்தியசீலன், அ.அறிவொளி குழுவினர் - S. Sathiyaseelan, A. Arivoli Kuluvinar
Publisher Name ஆனந்தா கேசட்ஸ் - குகஸ்ரீ வாரியார் - Ananda Casettes -Gugasri Variyaar
Write Your Own Review
You're reviewing:சிந்தையைக் கவர்ந்த கவிஞர் பட்டுக்கோட்டையா? கண்ணதாசனா? & இன்றைய வாழ்வுக்கு வழிகாட்டி இராமாயணமா? மகாபாரதமா? - Sinthaiyaik Kavarntha Kavinyar Pattukkottaiya? Kannathasana? & Inraiya Valvukku Valikatti Ramayanama? Mahabharathama? - Vaazhvukku Vazhikatti Ramaa

Similar Category Products