Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

பாலியல் கலைக்களஞ்சியம் - டாக்டர் பி.எம்.மாத்யூ வெல்லூர் - Paliyal Kalaikalanjiyam - Dr.P.M.Mathew Vellore - Paaliyal Palial Paaliyal Kalai Kalanchiyam Kalanjiyam Kalanjhiyam Kalanjiyum

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Kch B 250
₹675.00

மொழிபெயர்ப்பு பாலியல் கல்வி நூல்; மூலம்: மலையாளம்.

காகித உறை/ பேப்பர்பேக்;

504 பக்கங்கள்;

மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இது ஒரு பாலியல் கல்வி நூல். கேரளத்தின் உளவியல் அறிஞர்களில் முதன்மையானவரான டாக்டர் பி.எம். மாத்யூ வெல்லூர் எழுதிப் பெரும் வரவேற்பைப் பெற்ற நூல் ‘பாலியல் கலைக்களஞ்சியம்.’ பாலியலை ஒரு கலையாகப் பாவித்துப் பாலியல் அணுகுமுறைகள், பிரச்சினைகள், தவறான எண்ணங்கள் குறித்து இந்நூல் விளக்குகிறது. பிற உயிரினங்களுடன் ஒப்பீடு, இதுவரையிலான ஆய்வுகள், பாலியல் கலை நூல்கள் மற்றும் ஆய்வறிஞர்கள் பற்றிய தகவல்களும் இந்நூலில் அடங்கியுள்ளன. கீழைநாட்டு, மேலை நாட்டுப் பாலியல் கலை நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட கருத்துகள், பாலியல் சார்ந்த விநோதமான தகவல்கள் மற்றும் புராண, இலக்கிய, சமய நூல்களில் உள்ள கருத்துகள் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்தக் கலைக்களஞ்சியத்தின் தனிச்சிறப்பு. ஏறக்குறைய 300 கோட்டுப்படங்கள், ஆணின் பாலியல் குறைபாடுகள், ஓரினச்சேர்க்கை, காலணி தரும் காமம், சுயஇன்பம், துரிதஸ்கலிதம், பாலியல்கலை, பிணத்துடன் உறவு, பெண்ணின் பாலியல் சிரமங்கள் போன்ற 400க்கும் மேற்பட்ட தலைப்புகள் அடங்கிய இந்தக் கலைக்களஞ்சியம் கிரௌன்  அளவில், 525க்கும் மேற்பட்ட பக்கங்களுடன் நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது. பாலியல் குறித்த மிகையான கற்பனைகளைத் தகர்த்து அறிவியல்பூர்வமான தகவல்களைத் தரும் இந்த அரிய கலைக்களஞ்சியம், தமிழில் ஒரு புதுமுயற்சி.

எழுத்தாளர் குறிப்பு : டாக்டர் பி.எம். மாத்யூ வெல்லூர் பிரபல மனநோய் மருத்துவர் டாக்டர் பி.எம். மாத்யூ, கேரளத்தில் மாவேலிக்கரையை அடுத்த கரிப்புழா பாலைக்கல் தாழே வீட்டில் 1933 ஜனவரி 31ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை பி.எம். மத்தாயி; தாய் குஞ்ஞம்மா. திருவனந்தபுரம் மார் இவானியோஸ் கல்லூரியிலிருந்து இன்டர்மீடியட் தேர்வு பெற்ற பின்னர் ஆலுவா யூ.சி. கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர் கேரளப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார். ‘பாலியல் குறைபாடுள்ளவர்களின் ஆளுமைத்தன்மை’ என்பதே இவரது முனைவர் பட்டத்துக்கான ஆய்வு. பெங்களூரை மையமாகக் கொண்ட நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மென்டல் ஹெல்த் அண்ட் நியூரோ சயின்ஸ் (NIMHANS) நிறுவனத்தில் சிகிச்சை உளவியல் பட்டமும் பெற்றார் (1963). வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் உளநோய்ப் பிரிவில் கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் ஆகவும், மருத்துவக் கல்லூரிப் பேராசிரியராகவும் 1970வரை பணியாற்றினார். கேரள அரசின் பொதுக் கலைக்களஞ்சியத்தின் உளவியல் பிரிவின் துணை ஆசிரியராக ஐந்து வருடங்கள் பணியாற்றினார். 1975 முதல் திருவனந்தபுரத்திலுள்ள உளவியல் சிகிச்சை மையத்தின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இன்ஸ்டிட்யூட் ஆஃப் பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்ற நிறுவனத்தின் இயக்குநராகவும் செயலாற்றி வருகிறார். ‘மனசாஸ்திரம்’, ‘குடும்ப வாழ்க்கை’ முதலிய இதழ்களின் ஆசிரியராக இருந்திருக்கிறார். நவீன ஊடகங்களில் உளவியல் தொடர்பான கட்டுரைகள் எழுதிவருகிறார். ‘மலையாள மனோரமா’ வார இதழில் இவரது ‘உளவியல் அறிஞரின் பதில்’ என்ற பகுதி இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்தது. விறுவிறுப்பான நடையில் எழுதும் டாக்டர் மாத்யூ சிறுகதைகளும் எழுதியுள்ளார். இவர் சிறந்த பேச்சாளர், நடிகர். சிற்பக்கலை, கார்ட்டூன் முதலியவற்றிலும் திறமை படைத்தவர். இவரது முக்கியப் படைப்புகள்: ‘அப்பா நான் எங்கிருந்து வருகிறேன்’, ‘இளவயதினரின் வாழ்க்கைப் பிரச்சினைகள்’, ‘குடும்ப வாழ்க்கை’, ‘இளமை’, ‘குமரப்பருவம்’, ‘காளைப்பருவம்’, ‘முதுமை’, ‘அப்பா சிறுவனாயிருந்தபோது’. இந்நூல்கள் மலையாள மொழியில் பாலியல் ஆய்வுப்பிரிவில் போற்றப்படுபவையாகும். மேலும் ‘உங்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள்’, ‘விடுபடும் முடிச்சுகள்’, ‘உளவியல் பிரச்சினைகள்’, ‘எவ்வாறு படிக்கவேண்டும், தேர்வு எழுதவேண்டும், ராங்க் பெற’, ‘இல்வாழ்க்கை-தொடர்பு-பிணைப்பு’ போன்றவை இவரது பிற நூல்கள். உளவியல் சிகிச்சையில் (சைக்கோதெரபி) 46 வருடங்கள் அனுபவமுள்ள டாக்டர் பி.எம். மாத்யூ, இன்று கேரளத்தின் உளவியல் அறிஞர்களில் முதன்மையானவர். திருவனந்தபுரம் நந்தன்கோட்டில் வசித்து வருகிறார். மனைவி: சூசி மாத்யூ. மக்கள்: டாக்டர் சஜ்ஜன், டாக்டர் ரேபா, லோலா. முகவரி: Dr. P. M. Mathew Vellore Psycho Therapic Centre Charachira, Kaudiyar P.O. Thiruvananthapuram 695 003 Phone : 2316433, 2310478.

More Information
SKU Code Kch B 250
Weight in Kg 1.840000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788189359584
Author Name டாக்டர் பி.எம். மாத்யூ வெல்லூர் - Dr. P.M. Mathew Vellore
Publisher Name காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications
Write Your Own Review
You're reviewing:பாலியல் கலைக்களஞ்சியம் - டாக்டர் பி.எம்.மாத்யூ வெல்லூர் - Paliyal Kalaikalanjiyam - Dr.P.M.Mathew Vellore - Paaliyal Palial Paaliyal Kalai Kalanchiyam Kalanjiyam Kalanjhiyam Kalanjiyum

Similar Category Products