Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: In stock
SKU:
TMN B 005
₹120.00
பேப்பர் பேக்
பக்கம் : 200
பதிப்பு : 3
வெளியீட்டு ஆண்டு : 2010
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இப்புத்தகத்தில் 2 புதினங்கள் இடம்பெற்றுள்ளன.
1.சரிகைவேட்டி - 102 பக்கங்கள்
2.காதல் வரி - 98 பக்கங்கள்.
1.சரிகைவேட்டி:- நேற்று மாலை அப்பா இந்த புத்தகத்தைக் கொடுத்து 'தினமும் காலையில் படி, குமுதவல்லி. இது உனக்கும் நல்லது. உன் புருஷனுக்கும் நல்லது' என்று சொல்லிவிட்டுப் போனார்.
சுத்தி இருக்கிற மனுஷாளாலே வீண் சண்டை வரும். மனக்கிலேசம் ஏற்படும். வாக்குவாதம் சண்டை வரலாம். மனக்கஷ்டங்கள் உடம்பை பாதிக்கலாம். படுக்கையில் சாய்க்கலாம். எல்லாத்துக்கும் முன்னாடியே பகவானேன்னு காலைப் பிடிச்சுக்கிறது நல்லதில்லையா.
என்னைச் சுத்தி இருக்கிற உஷ்ணத்தைக் குறைச்சிருப்பான்னு கெஞ்சறது நல்லதில்லையா? உனக்கு நான் கெடுதல் சொல்வேனா. பேசாம இதைப் படியேன்.
என்ன நோய்ப்பா. ரொம்ப நாள் படுக்கைல கிடப்பேனா? குமுதவல்லி கலவரத்தோடு கேட்டாள்.
நான் அப்படிச் சொல்லலேம்மா. கோபம், பொறாமை, ஆங்காரம், ஆத்திரம் இதெல்லாம் நோய். இதெல்லாம் இல்லாத இருந்தா உடம்பும் ஆரோக்கியமா இருக்கும்.
என்னை ரொம்ப அல்பமா நினைக்கிறேப்பா.
நாம மனுஷாதானேம்மா. இன்னிக்கு ஒரு முகம். நாளைக்கு ஒரு முகம். காலைல ஒரு புத்தி. சாயங்காலம் ஒரு புத்தி. பகல்ல ஒரு நினைப்பு ராத்திரி ஒரு கனா, முன்னையும் பின்னையும் அலைஞ்சுண்டுதானே இருக்கோம். திடமா இருக்க முடியலைங்கறதுதானே குறை.
அப்பா பேச, குமுதவல்லி யோசனையில் ஆழ்ந்தாள்.
2.காதல் வரி:
வீடுங்கறது விட்டுக் கொடுக்குற இடம். நாம ஒன்னு விட்டுக்கொடுத்தா புருஷன் ஒன்னு விட்டுக் கொடுப்பான். விட்டுக் கொடுக்கிற புருஷன் வரணும்னு வேண்டிக்கோ. ஏதோ சில இடங்கள்ல அயோக்கியனா புருஷன் கிடைச்சிருக்கலாம். அதுக்காக எல்லாரையும் சொல்றது சரியில்லை.
வாழ்க்கை ரொம்பப் பெரிசு. நம்ம எடைக்கு அது கிடைக்கறதேயில்லை. இது சரி, இது தப்புன்னு சொல்ல முடியறதேயில்லை. கேள்வியோட வாழ்ந்துட்டு கேள்வியோட சாகறது தான் நல்லது.
இதுதான் சரின்னு சொல்றவளும் முட்டாள். தப்புன்னு எதிர்க்கறவளும் முட்டாள். தயவுசெய்து அலட்டாத வாழ்க்கையை உற்றுப் பார். ஏதோ புரியும். புரிஞ்சிடுத்துன்னா சைலெண்டாயிடுவே. யார் கத்தறாங்களோ அவங்களுக்குப் புரியலைன்னு அர்த்தம். தயவு செய்து கத்தாதே. போ. சீட்டுக்குப் போ.
வீட்டுக்குப் போய் அம்மாகிட்ட அமைதியாய் பேசு. சரின்னு சொல்லு. நீ சமையல் கத்துகிறது தப்பே இல்லை. இது அசிங்கமேயில்லை. நீ சமைக்கறது உன் புருஷனுக்கு மட்டுமேயில்லை, குழந்தைகளுக்கு. உன் குழந்தைகளுக்கு உன்னாலதான் நன்னா சமைக்க முடியும். ஆயாவால சமைக்க முடியாது. ஏன்னா, அவங்களுக்கு எந்த அக்கறையும் இருக்காது. ஏனெனில்..." அந்தப் பெண் பத்ம அவளைக் கூர்ந்து பார்த்தாள். "ஒருமுகப்பட்ட அன்பும், அக்கறையும் இணை பிரியாதவை. அன்புதான் அக்கறை, அக்கறைதான் அன்பு.
புத்தக விமர்சனம்:
சமீபத்தில் மேகலாவில் 'சரிகை வேட்டி' படித்தேன். ஒரு பூரண திருப்தி ஏற்பட்டது. நாவலை படித்து முடித்த பின்பும் மனசு - ஆதித்யம் ஹிருதயம் புண்யம் சர்வசத்ரு வினாசனம் என்றது.
உலகத்தின் குணாம்சத்தை பல்வேறு விதமாக வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் தங்கள் படைப்புகளுக்கு மீளா அடிமையானேன்.
தருமபுத்திரா, தருமபுத்திரா எது நகைச்சுவை என்று யட்சன் கேட்டதை முன்னரே அடுக்குமல்லி மற்றும் சில நாவல்களில் கையாண்டுள்ளீர்கள். ஆனாலும் மீண்டும் படிக்கும்போதும் நிஜம் முகத்தில் அறைந்து சட்டென ஆழ்ந்த யோசிப்பை தருகிறது.
மரணமே நிஜம் என்று புத்திக்கு தெரிந்ததும் மனசு கவலையோடு பேசாத தொடங்கிவிடுகிறது.
சங்கரராமன் - மனசுக்குள் சரிகை வேட்டியோடு வலம் வருகிறார்.
இனிது இனிது காதல் இனிது தொடர்ந்து படித்து வருகிறேன்.
நவரச நாவலில் கல்யாணத் தேறும்
பல்சுவை நாவலில் காதல் வரியும்
வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பற்றிக் கற்றுக் கொடுத்தது.
காதல் வரி எழுதிய விதம் இதமாக இருந்தது.
- பெ. நாகமாணிக்கம்.
SKU Code | TMN B 005 |
---|---|
Weight in Kg | 0.040000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | பாலகுமாரன் Balakumaran |
Publisher Name | THIRUMAGAL NILAYAM திருமகள் நிலையம் |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%