Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

அறுபடை வீடுகள் - 5 - Arupadai Veedukal - 5

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Alnce B 264
₹80.00
ஆன்மிகம். 

மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் அறுபடை வீடுகள் - 5, பி.ஸ்ரீ. அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.                                                                                                                   
                                                                                                     
எழுத்தாளர் பற்றி: பி. ஸ்ரீநிவாச்சாரி அல்லது பி.ஸ்ரீ. (ஏப்ரல் 16, 1886 – அக்டோபர் 28, 1981) பேச்சாளராக, எழுத்தாளராக, உரையாசிரியராக, பதிப்பாசிரியராக, வரலாற்று ஆசிரியராக, பத்திரிகை ஆசிரியராக, சமயாச்சாரியராக, திறனாய்வாளராக, காந்தியவாதியாக, கம்ப மேதையாக இப்படி பன்முக வித்தகராக விளங்கியவர். இவர் பி. ஸ்ரீ. ஆச்சார்யா என்றும் வழங்கப்படுகிறார். 

இவர் எழுதிய "ஸ்ரீஇராமானுஜர்" என்னும் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு 1965-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் பாராட்டும், பொன் முடிப்பும் வழங்கப்பட்டது.  

நெல்லை மாவட்டத்தில் உள்ள விட்டலாபுரம் என்ற ஊரில் 1892-ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ் இலக்கியத்தில் நல்ல ஆற்றலும், உலக இலக்கியங்கள் பற்றித் தீவிரமான அறிவும் ஈடுபாடும் உள்ளவர். அவருடைய கம்ப சித்திரம் ஆனந்த விகடனில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்து, பலர் கவனத்தையும் கவர்ந்தது. இன்றும் பலரும் கம்ப ராமாயணம் பற்றிப் பேசுவதற்கு அடி எடுத்துத் தந்தவர் பி.ஸ்ரீ என்றுதான் சொல்ல வேண்டும்.  

மும்மொழி வித்தகரான இவரது நூல்கள் எல்லாம் சிறந்தவை என்றே கூற வேண்டும். இதிலும் குறிப்பாக கம்ப சித்திரம், சித்திர ராமாயணம், திவ்யப் பிரபந்த சாரம், திருப்பாவை, திருவெம்பாவை, மஹாபாரதக் கதைகள் இவைகளைச் சொல்லலாம். 

தமிழ்ச் சுவையை தாம் அனுபவிக்குமாறே பிறரையும் அனுபவிக்கச் செய்யும் விசேஷத்திறமை வாய்ந்தவர். பல சந்தேக விபரீதங்களை அழித்தருளியவர். உயர்ந்த மதி நலமும், ஆழ்ந்த அனுபவமும் உடையவர். சைவ வைஷ்ணவங்களாகிய இரு சமயங்களிலிருந்தும் அரிய பெரிய விஷயங்களை யாவரும் எளிதில் அறியும்படி நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 

பி.ஸ்ரீ.யின் தமிழ்ப்பணி பெரும்பாலும் தேசிய நூல்கள், சமய இலக்கியங்கள், வாழ்க்கைச் சரிதங்கள், வேதாந்தங்கள், வரலாறுகள் எனப் பல்வேறு துறைகளில் பரந்து விரிந்து சென்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு தமிழிலக்கியத் திறனாய்வுத் துறைக்கும் ஒப்புமை நோக்கிற்கும், வழிவகுத்து தந்து, பி.ஸ்ரீ. தொண்ணூற்று நான்கு ஆண்டுகள் வாழ்ந்தார். மூன்று தலைமுரையினரைப் பார்த்துப் பேசிப் பழகியவர். தமது இலக்கிய உரைநடை மறுமலர்ச்சியில் சிறப்பாகத் திறனாய்வுத்துறையில் ஒரு புதிய சகாப்தத்தை நிறுவ உதவி செய்தார். நூற்றுக்கு மேற்பட்ட நூல்களையும் பல நூறு கட்டுரைகளையும் எழுதித் தமிழுக்கு அருந்தொண்டாற்றினார். 

இவர் தமது கடைசி நாட்கள் வரையிலும் தரமான நூல்களையே எழுதினார். இவர் 28.10.1981 அன்று அமரத்துவம் எய்தினார்.  

சுதாங்கன், மூத்த பத்திரிகையாளர், ஆனந்த விகடனில் பி. ஸ்ரீயை பற்றிய கட்டுரை அவரின் வாழ்வை படம் பிடித்து காட்டுகிறது. அவரின் கட்டுரையிலிருந்து:-  

எஸ்.எஸ். வாசன் கண் டெடுத்த இலக்கிய பொக்கிஷம் பி.ஸ்ரீ. ஆனந்த விகடனில் ‘சித்திர ராமாயணம்’, ‘கிளைவ் முதல் ராஜாஜி வரை’, ‘தென்னாட்டுத் திருக்கோயில்கள்’, ‘துள்ளித் திரிகின்ற காலத்திலே’, ‘சிவநேசச் செல்வர்கள்’ என்றெல்லாம் பல கட்டுரைகளையும் தொடர்களையும் அவர் ஆனந்த விகடனில் எழுதினார். `குமரன்’ என்ற பத்திரிகையிலும் பி. ஸ்ரீ பல கட்டுரைகளை எழுதினார்.   

பி.ஸ்ரீ. பிறந்த ஊர் தென்திருப்பேரை. நெல்லை மாவட்டத்தின் தாமிரபரணி கரையிலிருக்கும் நவதிருப்பதிகளில் ஒன்று. ‘அகத்தியர் முதல் அனந்தகிருஷ்ணய்யங்கார் வரையில் தமிழ் தாகத்தைத் தீர்த்தது தாமிரபரணிக் கரைதான்’ என்பார் தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதய்யர். பி.ஸ்ரீ, உ.வே.சா.வுடன் அறிமுகம் ஆனார். தமிழ்த் தாத்தாவின் பழக்கத்தால் அவருக்குத் தமிழ் ஆர்வம் வர ஆரம்பித்தது. சின்ன வயதிலேயே தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வல்லவராக இருந்தவர் பி.ஸ்ரீ. இவருக்கு தேசிய ஞானத்தைப் பக்குவமாகவும் இனிமையாகவும் கலந்து ஊட்டியது பாரதியாரின் பத்திரிகையும் எழுத்துக்களுமே! நாளடைவில் பாரதியாரின் பாடல்கள் அனைத்துமே பி.ஸ்ரீ.க்கு மனப்பாடமாகின.

பின்னாளில் சப்-இன்ஸ்பெக்டராக தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியின் ஆலத்தம்பாடியில் பி.ஸ்ரீ. வேலை பார்த்தார். மூன்றரை வருட போலீஸ் உத்தியோகத்துக்கு முழுக்கு போட்டார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

வ.உ.சி., பாரதி ஆகியோரின் நெருங்கிய நண்பர்.
More Information
SKU Code Alnce B 264
Weight in Kg 0.480000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பி.ஸ்ரீ. @ பி.ஸ்ரீ.ஆச்சாரியார் - P.Sri. @ P. Sri Acharya
Publisher Name தி அலையன்ஸ் கம்பனி - The Alliance Company
Write Your Own Review
You're reviewing:அறுபடை வீடுகள் - 5 - Arupadai Veedukal - 5

Similar Category Products





Other Books by பி.ஸ்ரீ. @ பி.ஸ்ரீ.ஆச்சாரியார் - P.Sri. @ P. Sri Acharya