Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

ஆச்சி - கவிஞர் கண்ணதாசன் - Aachi - Kannadhasan

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: Out of stock
SKU:
KP B 056
₹100.00

கதைகள்/ செட்டிநாட்டு மரபு.

காகித அட்டை/ பேப்பர்பேக்;

207 பக்கங்கள்;

மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

பழமையை விரும்பும் ஒரு தலைமுறை, நாளாக நாளாக குறைந்துகொண்டே வருகிறது. அற்புதமான தமிழ் வழக்குகள், தமிழ்ச் சடங்குகள் மறைந்து கொண்டு வருகின்றன. நவீன யுகத்தில் விஞ்ஞான வசதிகள் எவ்வளவு முன்னேறி இருந்தாலும் பழமையிலிருந்த மேன்மையை விட்டுவிடுவது சரித்திரம் படைத்த சாபக்கேடாகும். ஒரு பெருமைமிக்க தாய்ப் பரம்பரையை நாம் இழந்துவருகிறோம். நம் தாய்மார்கள் ஒவ்வொருவரும் கவிஞர்கள், அவர்கள் விடைபெற்றுக் போய்க் கொண்டிருக்கிறார்கள். திருப்பங்கள்... விறுவிறுப்பு என்று இந்த கதையை எழுதவில்லை. செட்டிநாட்டு மரபுகளைக்  காட்டவே இதனை எழுதுகிறேன். - கண்ணதாசன்.  
 
அந்த மூதாட்டியை அடிக்கடி கோவிலில் பார்க்க முடிகிறது. குறைந்தது எழுபது வயது இருக்கும். வெளிப்பிரகாரத்தில் ஒரு கேள்விக்குறியின் வளைவுகளோடு முதுகு வளைந்து சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாள். கைய்யில் ஒரு பழைய பை. அருகில் யாரும் இல்லை. எப்பொழுதும் வாய் ஏதோ ஸ்லோகத்தை முணுமுணுத்து கொண்டிருக்கிறது. கண் நிலைகுத்தி வானத்தை நோக்குகிறது. ஒவ்வொரு தடவை பார்க்கும்போதெல்லாம் எனது ஆச்சியை(பாட்டி) ஞாபகப்படுத்துகிறாள். நான் பிறந்த பிறகு பார்த்த ஒரே ஆச்சி- மூக்கம்மாள் ஆச்சி. அப்பா வழி பாட்டி மற்றும் தாத்தா கல்யாணத்திற்கு முன்பே கிடையாது. தாத்தா வின் ஒரே ஒரு போட்டோ பல குழந்தைகள் சூழ ஒரு பெஞ்சியில் அமர்ந்து எடுத்த போட்டோ.கிளாசிக். அதை தவிர அந்த தலைமுறையை எடுத்து சொல்ல வேறு எதுவும் பாதுகாக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை. படிக்க கேட்க கேட்க இனிமையாக இருக்கும் இந்த நூல். 
 
எழுத்தாளர் பற்றி : கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது.
More Information
SKU Code KP B 056
Weight in Kg 0.050000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788184026887; 8184026889
Author Name கவிஞர் கண்ணதாசன் - Kavignar Kannadhasan
Publisher Name கண்ணதாசன் பதிப்பகம் - Kannadasan Pathippagam
Write Your Own Review
You're reviewing:ஆச்சி - கவிஞர் கண்ணதாசன் - Aachi - Kannadhasan

Similar Category Products





Other Books by கவிஞர் கண்ணதாசன் - Kavignar Kannadhasan