Details
வாழ்க்கை என்பது மெல்ல மெல்ல அவிழும் புதிர். வாழ்க்கை பற்றி தான் நிறைய யோசித்திருக்கிறேன். பிறந்த குழந்தைகள் எல்லாமே தெய்வ வடிவம் என்பார்கள். அதற்கு எந்த பேதமும் இல்லை¸ தெய்வத்தைப் போலவே. எனவே இந்த முதல் நிலையில் தெய்வம் தெய்வமாகவே பிறக்கிறது எனலாம். பிறந்த சிசுவிற்கு முன்னே நீண்டு கிடக்கும் வாழ்க்கை என்ன தெரியும் அதற்கு? எதையும் ஆரம்பிப்பதற்கு முன்னால் பிரம்மிப்புதான். ஆனால்¸ அதனைக் கடந்து நின்று பார்க்கும் போது ச்சட்... இவ்வளவுதானா... இதற்கா பிரம்மித்தோம் என்று தோன்றும். ஆனால்¸ஆத்ம தரிசனம் என்பது அவ்வளவு சுலபமல்ல என்று தோன்றுகிறது. இதற்கு தகுந்த கேள்விகளும்¸ பதில்களும்¸ மனோபலமும் இருக்க வேண்டும். .....
திரு பாலகுமாரன் அவர்களின் நாவல் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் ஒரு கேள்வியை எழுப்பி படிப்பவரை எதற்கோ தயார் செய்து வருகிறது என்பது நிஜம். அப்படித்தான் ஆலமரமும். வீடு¸ அலுவலகம்¸ குழந்தைகள்¸ எழுத்து என்று ஓயாத பணிகளுக்கிடையில் இந்த ஆலமரத்தின் கீழ் சற்று இளைப்பாறலாம்.... "இந்த நாவல் படித்து முடித்ததும் எனக்குள் ஓரு அமைதி குடிகொண்டது. எனக்குள் நான் ஆழமாக போய் கொண்டிருந்தேன். இந்த பிறவியில் நான் செய்த குற்றங்கள் என்ன என்று பட்டியல் போட்டு பார்த்ததில் பெரிதாக ஏதுவும் இல்லை என்று பெரு மூச்சு வெளிப்பட்டது. அப்பாடா இனி தெரியாமல் கூட தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்ற ஆவல் குடிகொண்டது. அடுத்த ஜென்மத்தில் நாயாக பிறந்து மிச்ச கடனை தீர்க்க வேண்டும் என்று நினைத்துகொண்டேன்" என்று வாசகர் கூறுவதில் இருந்து இந்த நாவல் நம்மை முழுமை அடைய செய்யும் என்ற நம்மிக்கை உருக்கொள்கிறது.