Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

பஜகோவிந்தம் - மூதறிஞர் ராஜாஜி - Bhajagovindham - Bajagovindam

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 336
₹40.00
ஆன்மீகம் நூல்.

பேப்பர்பேக்; 
88 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
வானதி முதற் பதிப்பு: ஆகஸ்ட், 1975; 
பதிமூன்றாம் பதிப்பு: ஜனவரி, 2019.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்த நூல் பஜகோவிந்தம், ராஜாஜி அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.   

வயலில் சிறு வாய்க்காலைத் தாண்டுவதுபோல் பெரும் மயக்கடலைத் தாண்டினார் ஸ்ரீ சங்கரர். ஆன்ம ஞானம் வளர்வதற்காகப் பல வேதாந்த நூல்களை அவர் இயற்றினார். அதற்கும் மேலாக, உலகத்தார் உள்ளத்தில் பக்தியை வளர்ப்பதெற்கென்று பல பாடல்களைப் பாடினார். அவற்றில் ஒன்று மிகப் பிரசித்தி பெற்ற "பஜ கோவிந்தம்" பாட்டு.

பக்தி மார்க்கம் வேறு, ஞான மார்க்கம் வேறு என்று பக்குவமடையாத சிலர் பேசுவதுண்டு. எடுத்து விவரிக்கும் விஷயத்தைத் தனிப்படுத்திக் குறிப்பதற்காக இதைப்போன்ற சொற்றொடர்களைப் பண்டிதர்கள் ஆங்காங்கு பிரயோகப்படுத்துவார்கள். அதனால் நாம் குழப்பிக்கொண்டு பொருளைத் தவறாக உணரலாகாது. அறிவு நன்றாக முற்றி இதயத்தில் பதிந்தால் அது ஞானமாகும். அந்த ஞானமானது வாழ்க்கையுடன் கலந்து ஒன்றாகச் சென்று செயலுருவ மடைந்தால் அதுவே பக்தியாகும். முற்றிய அறிவு பக்தி என்று சொல்லப்படும். நன்றாகப் பதிந்து பக்தியாக உருக்கொள்ளாத அறிவு பயன்படாத ஒரு பண்டம். பொன் வேறு பித்தளை வேறு என்பதைப்போல், ஞானம் என்பது ஒரு தனி மார்க்கம், பக்தி என்பது வேறொரு தனி மார்க்கம் என்று எண்ணுவதும் பேசுவதும் அறியாமை. புலன்களை அடக்கினாலன்றி அடைந்த அறிவு முற்றி இதயத்தில் பதியாது; ஞானம் தோன்றாது. புலன்களின் இயற்கை வேகத்தை எப்படி அடக்கி ஆள்வது? மோகத்தையும் பற்றுக்களையும் நீக்கினாலொழிய உள்ளத்தைத் திருத்த முடியாது. உபதேசிக்கும் பொருளைச் செயல் முறையில் ஏற்றும் வழி அறிந்து மக்களுக்கு உபதேசித்த பெரியோர்களில் சிறந்தவர் திருவள்ளுவனார்.              

எழுத்தாளர் பற்றி : முறைசாரா முறையில் ராஜாஜி அல்லது சி.ஆர் என்று அழைக்கப்படும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஒரு இந்திய அரசியல்வாதி, சுதந்திர ஆர்வலர், வழக்கறிஞர், எழுத்தாளர், வரலாற்றாசிரியர் மற்றும் அரசியல்வாதி ஆவார். 1950 ல் இந்தியா விரைவில் குடியரசாக மாறியதால், ராஜகோபாலாச்சாரி இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தார்.
More Information
SKU Code VAN B 336
Weight in Kg 0.480000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name மூதறிஞர் ராஜாஜி - Rajaji
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:பஜகோவிந்தம் - மூதறிஞர் ராஜாஜி - Bhajagovindham - Bajagovindam

Similar Category Products





Other Books by மூதறிஞர் ராஜாஜி - Rajaji