Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

இராமாயணம் (சக்கரவர்த்தித் திருமகன்) - ராஜாஜி Ramayanam (Chakravarthi Thirumagan) -Rajaji

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 001
₹250.00
ஆன்மிகம்; பக்தி இலக்கியம்.
 
காகித உறை;
614 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: ஜனவரி 1973
ஐம்பத்தி மூன்றாம் பதிப்பு : டிசம்பர் 2020.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

சக்கரவர்த்தித் திருமகன் என்ற தலைப்பில் ஆசிரியரின் முதற்பதிப்பு முன்னுரை: 
 
சக்கரவர்த்தித் திருமகன் எழுதி முடித்ததும் புஸ்தமாகத் தொகுத்து நன்றாக அச்சடித்துக் குறைந்த விலைக்கு மக்களுக்குத் தரவேண்டிய பணியை பாரி நிலையத்தார் எடுத்துக் கொண்டார்கல். அவர்களுக்கு என்னுடைய நன்றி!
 
சீதை, ராமன், ஹனுமான், பரதன் இவர்களை விட்டால் நமக்கு வேறு என்ன செல்வமோ நிம்மதியோ இருக்கிறது. இந்தப் பழஞ்செல்வத்தை எடுத்து, வாசகத் தமிழ்நாட்டில் அனைவரும் நான் எழுதியதைக் 'கல்கி' பத்திரிக்கையில் படித்துச் சந்தோஷித்து எனக்கு உற்சாகம் ஊட்டினார்கள். கங்கையும் காவேரியும் ஓடும் வரையில், சீதா ராம சரிதம் பாரத நாட்டில் ஆண் பெண் குழந்தைகளனைவரையும் தாய்போல் பக்கத்திலிருந்து காக்கும். தமிழ் மக்களே ! இராமாயணம் படிப்பதும் கேட்பதும் நல்லதா என்கிற கேள்விக்கு வெகு நாட்களுக்கு முன் தமிழன் கம்பன் பதில் சொல்லி விட்டான்.வழி காட்டி விட்டான். கம்பனை விட அறிவாளியோ, நமக்கு நண்பனோ வேறு இல்லை.
 
நாட்டுக்கு நான் பல பணிகள் செய்ததாக நண்பர்கள் போற்றுவதுண்டு. அவற்றிலெல்லாம் 'வியாசர் விருந்தும்' 'சக்கரவர்த்தித் திருமகனும்' எழுதி முடித்ததுதான் மேலான பணி என்பது என் கருத்து. எல்லாவற்றையும்விட அதுவே என் உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் தந்தது. 
 
பிராட்டியைத் தியானிப்போமாக. நம்முடைய பிழைகள் அதிகம். அவளுடைய கருணையின்றி நமக்குக் கதியில்லை. "குற்றம் செய்யாதார் எவர்தாம்" என்று கேட்ட அவள் நம்மையும் காப்பாள். குறையும் பிழையும் நிரம்பிய இந்த நூலை அவள் பாதத்தில் வைத்து வணங்குகிறேன். என் பணி பயன்படுவதாக.
 
தியாகராய நகரம்,
3-3-1956 
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி.
 
இந்திய அரசின் சாகித்ய அகாதமிப் பரிசு பெற்ற நூல். ராமாயணம் இந்திய இலக்கியத்தின் ஒரு முக்கியமான பகுதியாகும், இது ராமரின் பயணத்தின் கதை. ராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வுகள் நம் வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும், மேலும் உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் அதனுடன் வரும் கடமைகள் பற்றி நமக்குக் கூறுகின்றன. இரண்டு பெரிய இந்து காவியங்களில் ராமாயணம் ஒன்றாகும். இது ராமர் மற்றும் அவரது அன்புக்குரியவர்களின் வாழ்க்கையை சுற்றி வருகிறது. ராமாயணத்தைப் படிக்கும்போது, ​​இலட்சிய மனைவி, இலட்சிய சகோதரர், இலட்சிய வேலைக்காரன், இலட்சிய ராஜா, இலட்சிய தந்தை போன்ற பல சிறந்த கதாபாத்திரங்களை இது சித்தரிக்கிறது என்பதை ஒருவர் புரிந்துகொள்வார். கதையில், ராமரின் அழகான மனைவி சீதா, லங்கா மன்னர் ராவணனால் கடத்தப்படுகிறார். இந்த இடத்திலிருந்தே மிக முக்கியமான நிகழ்வுகள் வெளிவருகின்றன. 
 
உரை மொத்தம் ஏழு புத்தகங்கள் மற்றும் 500 கான்டோக்களில் 24, 000 வசனங்களைக் கொண்டுள்ளது. தர்மத்தைப் பற்றிய அறிவைப் பரப்புவது மிகவும் பிரபலமானது மற்றும் கருத்தை ஒரு பெரிய நீளத்திற்கு ஆராய்கிறது. ராமாயணம் சமஸ்கிருத கவிதை மற்றும் இந்திய கலாச்சாரத்தை பாதித்துள்ளது. ஒவ்வொரு இந்து குழந்தைக்கும் அவர்களின் வளர்ந்து வரும் ஆண்டுகளில் அவர்களின் மத வேர்கள் மற்றும் அதன் வலுவான மதிப்புகள் குறித்து அவர்களுக்குத் தெரியப்படுத்தப்படும் ஒரு கதை இது.                                                                                                                                                                                              
இந்த நூலைப் பற்றி மீ.ப.சோமசுந்தரம்:  
இராயப்பேட்டை, லாயிட் சாலையில் நான் குடியிருந்த மாடியின் கீழ் வீட்டிற்கு, மலேயாவில் இருந்து என் நண்பர் விருந்தாளியாக வந்திருந்தார். எங்கள் வீட்டுக்கு ராஜாஜி அடிக்கடி வந்து போவதைப் பார்த்த அந்த மலேயா நண்பர் ஒரு நாள் ராஜாஜியிடம் இராமாயணத்தைப் பற்றி ஒரு கருத்தை விவாதிக்க வேண்டும் என்று விரும்பி மாடிக்கு வந்தார்.
 
ஆங்கில நூல்கள் பலவற்றை ஆழ்ந்து படித்து நன்கு தேறியிருந்தவர் அந்த நண்பர். 'இராமனையும் சீதையையும் ஒரு கதையில் வரும் முக்கிய பாத்திரங்கள் என்று கருதிப் பார்க்காமல், தெய்வங்களை வணங்குவது போலக் கும்பிட்டு, அந்தக் கதையின் நிகழ்ச்சிச் சுவையை அனுபவிக்க முடியாமல் நம் நாட்டு மக்கள் தங்கள் கண்களை மூடிக்கொள்கிறார்களே' என்று. ராஜாஜியிடம் வருத்தத்தோடு பேசத் தொடங்கினார். அவர் மேனாட்டு இலக்கிய விமரிசனப் பாங்கிலே அழகாகப் பேசினார். ராஜாஜி புன்முறுவலோடு கேட்டுக் கொண்டே வந்தார். பிறகு பேச ஆரம்பித்தார்.
 
 "நம்முடைய புனிதமான புராணக் கதைகளையெல்லாம் வெறும் உருவகங்களாகவும், ஈசாப் கதைகளாகவும் ஆக்கிவிடுவது எனக்குச் சம்மதம் இல்லை..."
 
இவ்வாறு தொடங்கினர் ராஜாஜி.
 
"உருவகங்களைக் கொண்டு நாம் வாழ முடியுமா? கண்ணனும், பார்த்தனும், சீதையும், அநுமனும், பரதனும் பூஜைக்கு உரிய மூர்த்திகள்; வெறும் கதாபாத்திரங்கள் அல்ல. பெரியோர்களையும், வீர புருஷர்களையும் பார்த்து அவர்களைப் பின்பற்றுவது ஒரு விதம். கதைகளைப் படித்து அந்தக் கதாபாத்திரங்களைப் பின்பற்றுவது மற்றொரு விதம். பரதனையும் சீதையையும் பீமனையும் பின்பற்றுவது உயிர் கொண்ட நம் முன்னோர்களைப் பின்பற்றுவது போல்.
 
"கங்கையிலும் காவேரியிலும் தாகத்துக்குத் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த ஆறுகள் குடி தண்ணீர் சாதனங்கள் மட்டும் அல்ல; அவை சுழற்றித் துடைத்துக் கொண்டே என்னைப் பார்த்தார்'
 
"இந்த விளக்கத்தை எழுத்திலே போடவேண்டும். மலிவுப் பதிப்புக்கு முன்னுரையாகவே போட்டுவிடலாம்! 
 
சரி, இப்போதே எழுதிவிடலாம்!" என்றார் ராஜாஜி.
 
இது நடந்தது 1956-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி. இன்று இந்த வானதிப் பதிப்பு வெளிவரும்போது ராமன், சீதை, பரதன் முதலிய வணக்கத்துக்கு உரிய மூர்த்திகளின் வரிசையிலே ராஜாஜியும் சேர்ந்துவிட்டார். "பரதனையும் சீதையையும் பின்பற்றுவது, உயிர்கொண்ட முன்னோர்களைப் பின்பற்றுவதுபோல்!" ஏன்னு சொன்ன ராஜாஜி, இன்று நம்மிடையே இல்லாமல் "முன்னோரில்" ஒருவராக ஆகிவிட்டார். அவருடைய அறிவுரைகளைப் பின்பற்றுவதற்கு இன்று நமக்கு உறுதுணையாக நிற்பன அவருடைய நூல்களே ! அந்த நூல்களிலும் ராஜாஜியின் உள்ளத்துக்கு மிகவும் உவப்பாக இருந்த ஒரு முக்கிய நூல் இராமாயணம்.
 
வானதியார் மிகுந்த முயற்சி எடுத்துப் பயபக்தியோடு இந்த நூலை வெளியிடுகிறார். ராஜாஜி அடிக்கடி வற்புறுத்தி வந்த ஆர்வத்தோடும் பக்தியோடும் நாம் இந்த இலக்கியக் கோயிலுக்குள் செல்வோமாக!
 
சென்னை 
16-1-78
மீ.ப.சோமசுந்தரம். 
 
பொருளடக்கம்: 
01.சந்தத்தைக் கண்டார்;  
02.குறை தீர்ந்தது;  
03.விசுவாமித்திரர்;  
04.பிரம்ம தண்டம்;  
05.திரிசங்கு;  
06.வசிஷ்டர் வாயால்;  
07.ராமனைத் தருவீர்;  
08.தாடகை;  
09.வேள்வி காத்தது;  
10.கொழுமுகத்துக் குழந்தை;  
11.சகரன்;  
12.பகீரதன்;  
13.அகலிகை;  
14.சீதா கல்யாணம்;  
15.பரசுராமர்;  
16.சுகவாழ்வு;  
17.யுவராஜ்யம்;  
18.கைகேயி;  
19.கூனியின் போதனை;  
20.சத்தியம் தவறாதீர்!; 
21.மனைவியா? பிசாசா?; 
22.கைகேயி வியந்தாள்!; 
23.கோபமும், சமாதானமும்;  
24.சீதையின் தீர்மானம்;  
25.மரவுரி தரித்தார்கள்;  
26.வனம் சென்றனர்;  
27.கங்கையைத் தாண்டினர்;  
28.சித்திரகூடம்;  
29.பெற்ற தாயின் துக்கம்;  
30.முன்னாள் நிகழ்ச்சி;  
31.உயிர் நீத்தான்;  
32.பரதனுக்குச் செய்தி;  
33.களங்கமற்ற உள்ளம்;  
34.சூழ்ச்சியும் வீணாயிற்று!; 
35.பரதனுடைய உறுதி;  
36.குகனுடைய சந்தேகம்;  
37.பரத்வாஜ ஆசிரமம்;  
38.அதோ ராமனுடைய ஆசிரமம்;  
39.இளையவனுடைய ஆத்திரம்;  
40.ராம பரத சந்திப்பு;  
41.பரதன் திரும்பினான்;  
42.விராதன் தீர்ந்தான்;  
43.பத்து ஆண்டுகள் கழிந்தன;  
44.ஜடாயு;  
45.சூர்ப்பனகை;  
46.கம்ப சித்திரம்;  
47.கரனும் ஒழிந்தான்;  
48.லங்கேசன் மதியிழந்தான்;  
49.மாரீச மான்;  
50.கழுகின் வீரம்;  
51.சிறைவாசம்;  
52.துக்க சாகரம்;  
53.மற்றொரு தகப்பன்;  
54.இடக்கண் துடித்தது;  
55.ஆபரணங்களைக் கண்டான்;  
56.சுக்ரீவன் கதை;  
57.சுக்ரீவன் சந்தேகம்;  
58.வாலி வதம்;  
59.தாரையின் துயரம்;  
60.கோபம் தணிந்தது;  
61.வானரர்கள் தேடிச் சென்றார்கள்;  
62.சம்பாதி;  
63.வாயுபுத்திரன்;  
64.கடலைத் தாண்டினான்;  
65.எங்கும் தேடினான்;  
66.அசோகவனத்தில் சீதை;  
67.ராவணன் பிரார்த்தனையும் சீதையின் பதிலும்;  
68.புத்திமதாம் வரிஷ்டம்;  
69.ஜானகி ஆறுதல் அடைந்தாள்;  
70.பிராட்டியும் மாருதியும்;  
71.சண்டைக்கு இழுக்கிறான்;  
72.ராமதூதன்;  
73.கட்டுண்டான்;  
74.லங்கா தகனம்;  
75.வானரர்களின் களியாட்டம்;  
76.கண்டேன் சீதையை;  
77.படை புறப்பட்டது;  
78.இலங்கையில் கவலை;  
79.மந்திராலோசனை;  
80.விபீஷணன்;  
81.வானரர்களின் சந்தேகம்;  
82.சரணாகதி;  
83.சேது பந்தனம்;  
84.யுத்தம் ஆரம்பித்தது;  
85.சீதை மகிழ்ந்தாள்;  
86.நாக பாணங்கள்;  
87.'இன்று போய் நாளை வா'; 
88.கும்பகர்ணன் எழுந்தான்;  
89."நாராயணன் தானோ!"; 
90.இந்திரஜித்து மாண்டான்;  
91.ராவணன் முடிந்தான்; 
92.மங்களம்;  
93.முடிவுரை. 
 
எழுத்தாளர் பற்றி : சி.ராஜகோபாலாச்சாரி ஒரு இந்திய வழக்கறிஞர், சுதந்திர ஆர்வலர்கள், அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி. இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த அவர் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும், மெட்ராஸ் பிரசிடென்சியின் பிரதமராகவும், மேற்கு வங்க ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.
More Information
SKU Code VAN B 001
Weight in Kg 0.400000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name ராஜாஜி - Rajaji
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippagam
Write Your Own Review
You're reviewing:இராமாயணம் (சக்கரவர்த்தித் திருமகன்) - ராஜாஜி Ramayanam (Chakravarthi Thirumagan) -Rajaji

Similar Category Products