Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

இது சத்தியம் - ரா.கி.ரங்கராஜன் - Ithu Sathyam - R.K.Rangarajan - Ra.Ki.Rangarajan - Idhu Sathiyam - Satyam Satiyam

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Alnce B 397
₹530.00

புதினம்/ நாவல். 

காகித உறை/ பேப்பர்பேக்; 
704 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: 1995; 
இரண்டாம் பதிப்பு: 2016.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

முன்னுரை: 
இந்த நாவலை எழுதத் தொடங்கியது பற்றி 'எடிட்டர் எஸ்.ஏ.பி.' என்ற புத்தகத்தில் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.
 
திடீரென்று ஒரு நாள் வேறு ஏதோ வேலையாக இருந்தபோது ‘இது சத்தியம்’ என்று ஒரு தலைப்புத் தோன்றியது. ஒரு காகிதத்தில் அதை எழுதி எடிட்டரிடம் காட்டினேன். ‘நன்றாக இருக்கிறது.’ தொடர் கதை எழுதுங்கள் இந்த தலைப்பில், என்று கூறினார். பல கட்டங்களில் அவருடைய யோசனைகளைக் கேட்டே இதைப் படைத்தேன். 
 
என் இளம் பிராயத்தில் கும்பகோணம் பெரிய பெருமாள் சன்னதித் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு என் தந்தை என்னை அழைத்துச் சென்றிருந்தார். அந்த வீட்டுத் தலைவி கம்பீரமான நெடிய தோற்றத்துடன் மிடுக்கும் அதிகார தோரணையுமாக இருந்தார். அவர்கள் வீட்டில் கூண்டில் ஒரு பச்சைக் கிளி வளர்த்து வந்தார்கள்.
 
என்னவோ தெரியவில்லை, அந்தப் பெண்மணி என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டார். அவரை வைத்துத்தான் ராஜலக்ஷ்மி அம்மாள் பாத்திரத்தைக் கற்பனை செய்தேன்.
 
தொடர்கதையாக இது பாதி வந்து கொண்டிருந்த போது 20, 30 அத்தியாயம்தான் வந்திருக்கும். ஒரு நாள் பட அதிபர் ஜி.என்.வேலுமணி எங்கள் அலுவலகத்திற்கு வந்து எடிட்டரையும் என்னையும் பார்த்து, இதைப் படமாக்க விரும்புவதாகக் கூறினார். 'கதை இன்னும் முடியவில்லையே?' என்று நான் சொன்னதற்கு, 'எப்படி முடிந்தாலும் பரவாயில்லை. ராஜலக்ஷ்மி அம்மாள் பாத்திரம் நன்றாயிருக்கிறது. அது போதும்' என்றார். எடிட்டரும் சம்மதித்து அனுமதி கொடுத்தார். சில நாள் கழித்து கதையின் மீதிப் பகுதியைச் சுருக்கமாக எழுதி திரு.வேலுமணியிடம் தந்தேன்.
 
'இது சத்தியம்' படம் வெற்றிபெறவில்லை. ஆனால் ராஜலக்ஷ்மி அம்மாவாக நடித்த கண்ணாம்பா அந்தப் பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் என்று எல்லோரும் பாராட்டினார்கள். 
 
என் பால்ய நண்பனான கே.எம்.குருசாமி என்கிற குரு சென்னை ஜார்ஜ் டவுனில் ஒரு லாரி கம்பெனி நடத்தி வந்தான். லாரி, போக்குவரத்துசம்பந்தமான பல தகவல்களையும், சென்னை ஊட்டி சாலை பற்றிய விவரங்களையும் அவன் மூலமாக தெரிந்து கொண்டேன். அந்த அன்பு நண்பனின் இனிய நினைவிற்கு இப் புத்தகத்தை வெளியிட்டுள்ள அல்லயன்ஸ் புத்தக நிறுவனத்திற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
ரா.கி.ரங்கராஜன்.
 
எழுத்தாளர் பற்றி : ரா. கி. ரங்கராஜன் (அக்டோபர், 5, 1927 - ஆகஸ்ட் 18, 2012) ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் இதழாளர். வரலாற்றுப் புதினங்கள், குற்றக் கதைகள், கட்டுரைகள், வேடிக்கை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், குறும்புக் கதைகள், நையாண்டிக் கவிதைகள் எனப் பல பாணிகளில் எழுதியுள்ளார். இவர் 1500-க்கும் மேற்பட்ட கதைகளையும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவற்றுள் பல குமுதம் ஆனந்த விகடன் முதலான இதழ்களில் தொடர்களாக வெளிவந்தன. இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படங்களாக வெளிவந்தன. பல படைப்புகள் சின்னத் திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் அண்ணா நகர் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைத்தொடர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை “நாலு மூலை” என்ற பெயரில் நூலாக வெளியாகியுள்ளன. ”அவன்” என்ற பெயரில் தன் வரலாற்றையும் எழுதியுள்ளார். இளம் எழுத்தாளர்களுக்குக் கதை எழுதும் நுணுக்கங்களைக் கற்றுத் தரும் எப்படிக் கதை எழுதுவது? என்ற வகுப்பினையும் தான் ஒருவராகவே நடத்தி வந்தார்.
More Information
SKU Code Alnce B 397
Weight in Kg 1.210000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name ரா.கி.ரங்கராஜன் - R.K.Rangarajan - Ra.Ki.Rangarajan
Publisher Name அல்லயன்ஸ் - The Alliance Company
Write Your Own Review
You're reviewing:இது சத்தியம் - ரா.கி.ரங்கராஜன் - Ithu Sathyam - R.K.Rangarajan - Ra.Ki.Rangarajan - Idhu Sathiyam - Satyam Satiyam

Similar Category Products