Details
காதல் புறகண்ணில் பார்ப்பதில்லை அதற்க்கு அகக்கண் மட்டுமே பிரதானம் அந்த கண்ணுக்கு அழகியல் மட்டுமே தெரிகிறது காதல் வயப்படும் ஆண் பெண் நல்லவர்களா? கெட்டவர்களா? தீவிரவாதியா, கொலையாளியா எதுவும் தெரிய வேண்டாம் பார்த்த உடனே பட்டாம்பூச்சி சிறகு விரிக்கிறதா? பறக்க முடிகிறதா? அது போதும் வேறு எந்த தகுதியும் தேவையில்லை. "சினிமாப் பாடல்களைத் தகுந்த இடங்களில் புகுத்தி, தூள் கிளப்பி விட்டார் பாலா.
'காதல் வெண்ணிலா' வில், கடைசியாகத் 'திருநா பாடுகையில், 'காதல் வெண்ணிலாவிற்கு வேறு அர்த்தம் தொனிப்பதாக அவன் உணர்வதாகக் காட்டியிருப்பது அருமை.
அதிகம் படிக்காவிட்டாலும் கூட பிறர் துன்பம் காணச்சகியாமல், தன் தங்கையை மணம் செய்து வைப்பதாகக் கூறும் மனோன்மணி பாத்திரப் படைப்பு உயர்வானது.
மொத்தத்தில் பாலாவிற்கு நிகர் ஏது?"