Details
கானல் தாகம்.
'மணிமேகலை, வளர்மதி ஆகியோர் பற்றிய உங்கள் கவலைகளை வெறும் கதை படிக்கும் சுவாரஸ்யத்திலேயே நிறுத்திக் கொள்ளாமல், ஆழ்ந்த அக்கறையோடு பல வாசகர்கள் விவாதிப்பதைக் கேட்க முடிகிறது. கலையின் கவசங்களுக்குள் சமூக உணர்வு மூச்சுத் திணறி வியர்க்க வேண்டியதில்லை என்பதே என் அபிப்பிராயம்.
கணவன் செய்யும் கொடுமைகளை ஏற்று அதை மீறி வெளியேற முடியாமல் நரகத்தில் உழலுவதே, நம் சமூகத்தின் நியாதியாகிவிட்டது.
மீறும் மணிமேகலைகள் மீது கள்ளக்காதல் ' கறை படிவதும், வளர்மதிகளின் மனப்புழுக்கங்கள் சதைக் கொழுப்பு ' என தூற்றப்படுவதும் இங்கே புதியதல்ல.