Details
"உலகம் உய்ய ஏதேனும் வழி சொல்லக்கூடாதா? உலகம் நன்றாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த உலகம் உய்யவில்லை என்று சொல்லுபவர்கள்தான் உய்யாமல் இருக்கிறார்கள். "
"என்ன சொல்கிறீர்கள். பத்திரிகையைப் பிரித்தால் கொலை, கொள்ளை என்று பல்வேறு விஷயங்கள் ஓடுகின்றன. அடிதடி, ரகளை, லஞ்ச லாவண்யம், பொய், திருட்டு என்றெல்லாம் நடக்கின்றன. ஒரு தர்மமான ஆட்சி, ஒரு அமைதியான போக்கு இருக்கக்கூடாதா"
"காசும், பிறப்பும் என்கிற இந்நாவல் எனது நண்பர் திரு. பொன். சந்திரசேகர் அவர்கள் வெளியிடும் பல்சுவை நாவலில் இரண்டு பாகமாக வெளிவந்தது. மாதநாவலுக்கு எவரோ கற்பித்த சிறுமையை உடைத்தெறிந்தது. ஒரு நாவலை இரண்டு மாதம், இரண்டு பாகமாக வெளியிட்டால் சரியாகப் போகாது என்கிற நியதியைத் தூள்தூளாக்கியது. மாதநாவல் என்பது நாற்பது பக்கச்சிறுகதை என்பதும் நகர்ந்தும் நூற்று எண்பது பக்கத்திற்கு கனமாய்க் கொண்டு வந்து கொடுக்க வாசகர்கள் ஆவலாக வாங்கினார்கள்.