பகவத்கீதை கைவிளக்கு - மூதறிஞர் ராஜாஜி - Kaivilakku - Rajaji - Kaivilaku - Bagavat Geethai Kai Vilakku - Bhagavad Gita
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: In stock
SKU:
VAN B 337
₹120.00
ஆன்மீகம் நூல்.
காகித உறை/ பேப்பர்பேக்;
208 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதற் பதிப்பு: நவம்பர், 1958;
பன்னிரண்டாம் பதிப்பு: செப்டம்பர், 2021.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் கைவிளக்கு, ராஜாஜி அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
பகவத்கீதை கைவிளக்கு - முழு பகவத்கீதையின் தமிழாக்கமும் விளக்கமும்.
***
முதற் பதிப்பின் முன்னுரை:
சில நாட்களுக்கு முன் 'ஜகன் மோஹினி' பத்திரிகைக்காகப் பகவத் கீதைக்குச் சில குறிப்புகள் சுருக்கமாக எழுதினேன். அவற்றை ஒன்று சேர்த்துப் புஸ்தகமாக வெளியிட எண்ணம் தோன்றிற்று. அந்த எண்ணத்தை நிறைவேற்ற ஆரம்பித்த பொழுது, கீதை சுலோகங்களைத் தமிழில் முற்றிலும் மொழி பெயர்த்துச் சுலோகங்களின் கீழ், என்னுடைய குறிப்புகளை அச்சிட்டு வழங்கினால்தான், புஸ்தகம் பயன்படும் என்று தோன்றிற்று.
இப்பொழுதுதான் மொழி பெயர்ப்புகளைப் படித்தேன். நான் வெளியிடப்போகும் நூலில் மொழி பெயர்ப்பும் நானே செய்து தருவது பொருத்தம் என்று தோன்றிற்று. என்னுடைய மொழி பெயர்ப்புக்கும், ஏற்கெனவே வெளிவந்திருக்கும் மொழி பெயர்ப்புகளுக்கும் அதிக பேதம் இருக்காது. என்றாலும், சில இடங்களில் வேறுபட்டிருப்பதையும் காணலாம்.
சாஸ்திர நிபுணர்களுக்கு என் நூலில் புதியது ஒன்றும் இல்லை. சாதாரண மக்களுக்கு ஒரு கை விளக்காகப் பயன்படலாம்.
சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி.
10.11.58.
***
மூன்றாம் பதிப்பின் முன்னுரை:
கிருஷ்ண பகவான் நேரில் உபதேசித்ததாக வியாசர் தந்திருக்கும் சாஸ்திரம் பகவத் கீதை. இது சாஸ்திரம் மட்டுமல்ல; உலக வாழ்க்கைக்கு உதவும் புத்திமதிகளடங்கிய உயர்ந்த நூலுமாகும். சில குறிப்புகளும் எழுதித் தந்திருக்கிறேன். இது என் பாக்கியம்.
இதற்குக் 'கை விளக்கு' என்கிற பெயரைத் தந்திருக்கிறேன். கஷ்டமும், இருட்டும் மலிந்து நிற்கும், உலக வாழ்க்கையில், இது ஒரு கை விளக்காக, காற்றில் அணையாத விளக்காக, உதவும் என்கிற நம்பிக்கையுடன், இந்த மூன்றாவது பதிப்பைக் குறைந்த விலையில் பாரதி பதிப்பகம் வெளியிடுகிறது.
தமிழ் மக்கள் அனைவரும் ஆதரிப்பார்களாக.
இராஜகோபாலாச்சாரி
26-1-67.
பொருளடக்கம்:
முதல் அத்தியாயம்;
இரண்டாம் அத்தியாயம்;
மூன்றாம் அத்தியாயம்;
நான்காம் அத்தியாயம்;
ஐந்தாம் அத்தியாயம்;
ஆறாம் அத்தியாயம்;
ஏழாம் அத்தியாயம்;
எட்டாம் அத்தியாயம்;
ஒன்பதாம் அத்தியாயம்;
பத்தாம் அத்தியாயம்;
பதினோராம் அத்தியாயம்;
பன்னிரண்டாம் அத்தியாயம்;
பதின்மூன்றாம் அத்தியாயம்;
பதினான்காம் அத்தியாயம்;
பதினைந்தாம் அத்தியாயம்;
பதினாறாம் அத்தியாயம்;
பதினேழாம் அத்தியாயம்;
பதினெட்டாம் அத்தியாயம்.
***
முதல் அத்தியாயம்
திருதராஷ்டிரன் சொல்லுகிறான்:
சுலோகம் : 1
சஞ்ஜயனே ! தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் யுத்தம் நடத்த வேண்டும் என்று கூடின நம்மவர்களும் பாண்டு புத்திரர்களும் என்ன செய்தார்கள் ?
''நம்முடையவர்கள்' என்றும் 'பாண்டவர்கள்' என்றும் பேத உணர்ச்சியுடன் கேட்கும் கேள்வி, திருதராஷ்டிரனுடைய பட்சபாத மனப்பாண்மையைக் காட்டுகிறது.
ஸஞ்ஜயன் சொன்னான் :
சுலோகம் : 2
பாண்டவர்களுடைய சேனை அணி வகுக்கப்பட்டு நிற்பதைப் பார்த்து, ஆசாரியரை அணுகித் துரியோதனன் சொன்னான் :
எழுத்தாளர் பற்றி : முறைசாரா முறையில் ராஜாஜி அல்லது சி.ஆர் என்று அழைக்கப்படும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஒரு இந்திய அரசியல்வாதி, சுதந்திர ஆர்வலர், வழக்கறிஞர், எழுத்தாளர், வரலாற்றாசிரியர் மற்றும் அரசியல்வாதி ஆவார். 1950 ல் இந்தியா விரைவில் குடியரசாக மாறியதால், ராஜகோபாலாச்சாரி இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தார்.
SKU Code | VAN B 337 |
---|---|
Weight in Kg | 0.500000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | மூதறிஞர் ராஜாஜி @ சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி- Rajaji |
Publisher Name | வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%