Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Kalvanin Kadhali by Kalki கள்வனின் காதலி - கல்கி

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 8
₹110.00

FREE SHIPPING ON ALL ORDERS. 
Prices are Inclusive of Tax.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் பணியாற்றிய போது எழுதிய தொடர் நாவல் 'கள்வனின் காதலி'. இது ஒரு சமூக நாவலாகும்.   ஆனாலும் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அதோ சற்றுத் தூரத்தில் தெரியும் குளக்கரையை நோக்கிச் செல்வோம். ஒற்றையடிப் பாதை வழியாகச் செல்லும் போது கம்மென்ற வாசனை வருவதைக் கண்டு அண்ணாந்து பார்க்கிறோம். அது ஒரு நுணா மரந்தான். பார்ப்பதற்கு ஒன்றும் அவ்வளவு பிரமாதமாயில்லை. எனினும் அந்த மரத்தின் சின்னஞ்சிறு பூக்களிலிருந்து அவ்வளவு நறுமணம் எப்படித்தான் வீசுகின்றதோ?

இதோ தடாகத்துக்கு வந்து விட்டோ ம். குளத்தின் கரையிலே உள்ள நந்தவனத்திலே மட்டும் பிரவேசித்து விட்டோ மானால் திரும்ப வெளியே வருவதே பிரயாசையாகிவிடும். ஆகையால், வெளியிலிருந்தே அதை எட்டிப் பார்த்துவிட்டுப் போகலாம். அதோ நந்தியாவட்டைச் செடிகளில் கொத்துக் கொத்தாகப் பூத்திருக்கும் வெண்ணிறப் பூக்கள் கண்ணைப் பறிக்கின்றன. அந்தப் புறத்தில் செம்பருத்திச் செடிகளும், வேலி ஓரம் நெடுக கொக்கு மந்தாரையும் இந்தண்டைப் பக்கம் முழுதும் மல்லிகையும் முல்லையும் பூத்துக் குலுங்குகின்றன. அதோ அந்தப் பந்தலில் ஒரு புறம் ஜாதி முல்லையும், இன்னொரு புறம் சம்பங்கியும் பூத்து, நந்தவனம் முழுவதிலும் நறுமணத்தைப் பரப்புகின்றன. அந்த ஈசான்ய மூலையில் ஒரே ஒரு ரோஜாச் செடி, வீட்டுக்குப் புதிதாய் வந்த விருந்தாளியைப் போல் சங்கோஜத்துடன் தனித்து நிற்கிறது. அதிலே ஒரு கிளையில் கொத்தாகப் பூத்த இரண்டு அழகிய ரோஜாப் புஷ்பங்கள். 

ஆசிரியர் பற்றி: கல்கி புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. சமஸ்கிருதமும் தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகளும் பிரபலமாக இருந்து வந்த அக்காலகட்டத்தில் தமிழிசைக்காக கல்கி சதாசிவம் மற்றும் எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து பாடுபட்டார் கல்கி.  சங்கீத கலாசிகாமணி விருது, 1953, வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி (ஆளுனர் ஸ்ரீ பிரகாசா தலைமை).
More Information
SKU Code Bharti B 8
Weight in Kg 0.200000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Kalki கல்கி
Publisher Name Bharathi Pathippagam பாரதி பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Kalvanin Kadhali by Kalki கள்வனின் காதலி - கல்கி

Similar Category Products