Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

காமகோடி ராமகோடி - ரா. கணபதி - Kamakodi Raamakodi - Ra Ganapati - Kaamakodi Ramakodi - Kamakoti Ramakoti - Kaamakoti Raamakoti

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 295
₹36.00

ஆன்மீகம் நூல்.

காகித உறை;

152 பக்கங்கள்;

மொழி: தமிழ்; 

முதற்பதிப்பு: ஜூன் 1976; 

மூன்றாம் பதிப்பு: மார்ச் 2007.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி 
ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள் மடம்
காஞ்சிபுரம் 
 
முகாம்: காஞ்சிபுரம்   தேதி: 11.6.76.
ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் 
ஸ்ரீமுகம் 
 
சென்னை வானதி பதிப்பகத்தார் மக்கள் சமய உணர்ச்சியுடன் வாழ்க்கை நடத்த உறுதுணையாக எளிய நடையில் பல நூல்களை வெளியிட்டு வருவது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இந்த வரிசையில் பகவந்நாம சித்தாந்தத்தை அனுசரித்து ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த ஸ்ரீ போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் வரலாற்றையும் உபதேசங்களையும் ஸ்ரீ.ரா.கணபதி அவர்கள் தொகுத்து எழுதிய "காமகோடி ராமகோடி" என்னும் நூலை வெளியிடவிருப்பதை அறிந்து ஸ்ரீ மஹாஸந்நிதானத்தில் சந்தோஷிக்கிறார்கள்.
 
பக்த கோடிகள் அனைவரும் இந்நூலைப் படித்து எல்லாவித நன்மைகளையும் அடையுமாறு ஆசீர்வதிக்கிறார்கள்.
 
ஸ்ரீ நாராயணஸ்ம்ருதி.
--------------------------------------------------------------------------------------
 
முன்னுரை:
 
இதை நான் எழுதினேன் என்று சொல்வதைவிட, இதை என்னால் எழுதாமலிருக்க முடியவில்லை என்பதே உண்மை. எதுவோ ஒன்று இதிலே என் கழுத்தைப் பிடித்துத் தள்ளியது சென்ற (1975) மார்ச் மாதத்தில்.
 
அப்போது ஸ்ரீ ராம நவமிச் சிறப்பு மலர் வெளியிடும் ஒரு சமாஜத்தினர் என்னிடம் விஷயதானம் கேட்டனர். :"என்னால் இப்போது போதேந்திராளைப் பற்றித்தான் எழுத முடியும். அது எவ்வளவு நீளம் போகுமோ எனக்கே தெரியாது. நான் எழுதுகிறபடி எழுதித் தருகிறேன். உங்கள் ஸஞ்சிகையில் எவ்வளவுக்கு இடம் கொடுக்க முடிகிறதோ, அவ்வளவை மட்டும் பிரசுரித்துக் கொள்ளுங்கள்" என்றேன். எனக்கே நான் சொன்னது விசித்திரமாக இருந்தது! ஆனால் ஸமாஜத்தினருக்கு விசித்திரமாக இல்லை. "அப்படியே செய்கிறோம்" என்றனர்.
 
எழுதத் தொடங்கினேன். அது பாட்டுக்குப் போய்க் கொண்டேயிருந்தது. ஆம், பரம அநுகூலமான காற்றிலே பாய் மரத்தை விரித்துக் கொண்டு ஹாய்யாக எழுதினேன். கலவையிலிருந்துதான் (ஸ்ரீ மஹா பெரியவாள் அக் காலத்தில் தங்கியிருந்த இடம்) இப்பேற்பட்டதொரு தென்றல் வீசமுடியும்! அதன் காரணமற்ற ஸௌக்கிய வீச்சை முன்பும் உணர்ந்திருக்கிறேன். ஆனால் இப்போது போல் அதன் இடைவிடா இயக்கத்தை என்றுமே கண்டதில்லை.
 
நான் எழுதிப் போட்ட கத்தையில் ஏறத்தாழ ஐந்திலொரு பகுதியை மட்டும் ஸமாஜத்தினர் சிறப்பு மலரில் வெளியிட்டனர். இதை அரை குறை வேலை என்று எவரும் சிரிக்காமல், அந்தப் பகுதிக்குள்ளேயே ஒரு தன்னிறைவு இருந்ததாகக் கூறியது இன்னொரு விசித்திரம்.
 
--------------------------------------------------------------------------------------
 
ஒரு வருஷத்துக்கு மேல் ஓடி விட்டது.
 
இவ்வாண்டு சங்கர ஜயந்தியை அடுத்து (1976 மே மத்தியில்) மறுபடி ஓர் ஆவேசம் வந்தது. 
 
முன்பு எழுதாமலிருக்க முடியவில்லை என்று ஆனாற்போலவே, இப்போது இவ்வரலாற்றை முழுதுமாகப் பிரசுரிக்காமலிருப்பதற்கில்லைஎன்ற வேகம் கிளம்பிற்று. இது நூலுருவம் பெற்று, ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு ஜயந்தி காணிக்கையாகிவிட வேண்டுமென்ற ஆர்வம் மூண்டது. 
 
முன்பு எழுதிப்போட்டதில் மேலும் பல பகுதிகள் சேர்ந்தன. ஸ்ரீ மடத்தின் வம்சாவளிக் குறிப்புக்களும், செவி வழிச் செய்திகளும் 'காந்தா ஸம்மிதை' என்பதற்கிசைந்த இலக்கிய சுதந்திரத்துடன் புதிய தாளிப்பைப் பெற்றன. மீண்டும் சொல்கிறேன்: அநேக இடங்களில், நான் தாளித்தேன் என்பதைவிட அதுவேதான் தாளித்துக் கொண்டது. இப்படி உருவான உயிர் கொண்ட வாழ்வோடு, இப்போது ஸித்தாந்தச் சிறப்புக்களையும் சேர்த்தேன். இயல்பான படகோட்டத்துக்கு இது சற்று இடையூறாகத்தான் இருந்தது. எனினும் அநுபவ மயமானதை அப்படியே கிரகித்துக் கொள்ள முடியாதவர்களுக்காக இந்த அறிவு விளக்கமும் சேர்க்கும்படி ஆயிற்று. 'ஸிரப்'பை அப்படியே கொடுத்தால் போதமாட்டேன் என்கிறதே! பாட்டில்மேல் நீள நெடுக ஃபார்முலாவும் கொடுக்கத்தானே வேண்டியிருக்கிறது? நூல் நூறு பக்கங்களுக்கு மேல் ஓடும் என்று தோன்றியது. நான்கே வார இடைவெளியில் எப்படி இதை அச்சிட்டு நூலை உருவாக்குவது? சமயம் பார்த்து வானதி பதிப்பாளர் ஸ்ரீ திருநாவுக்கரசு அவர்களும் ஊரில் இல்லையே!
 
மறுவாரம் சென்னைக்குத் திரும்பிய திருநாவுக்கரசுவிடம், "மூன்றே வார இடைவெளியில் ஒரு சிறிய புஸ்தகம் தயாரிக்க இயலுமா?" என்றேன், ஏமாறத்  தயாராக.
 
அந்த அசகாயசூரரோ, "மூன்று வாரம் எதற்கு? இரண்டே வாரத்தில் புஸ்தகம் கொண்டு வந்துவிடலாம். பெரியவாள் இருக்கிறார்!" என்று ஒரு போடு போட்டார்! நிஜமாக நம்பினார். நம்பினோர் கெடுவதில்லைதான்!
 
என்னுடைய அவசரத்துக்கு, அவரது ஆர்வத்துக்கும் மெட்ரோபாலிடன் அச்சகத்தார் அற்புதமாக ஈடுகொடுத்து புத்தகத்தைக் கொண்டு வந்து விட்டனர்; ஓவியர் வினுவும் வண்ண மேலட்டையை நாலே  நாளில் கொடுத்து விட்டார். ஏதோ ஒரு சங்கற்பத்தில் வேளையும் காலமும் நிர்மிக்கப்பட்டு விட்டால் பணி நிறைவுறக் கேட்பானேன்?
 
அன்பர் ஸ்ரீ மீனாக்ஷிசுந்தரத்தின் நன்முயற்சியில் ஹிந்து தர்ம மன்றத்தினர் கொண்டாடும் ஸ்ரீ பெரியவர்கள் ஜயந்தி விழாவில் இந்நூல் ஆஸ்திகப் பெருமக்களுக்கு அர்ப்பணமாகிறது. ஸ்ரீ சந்திரசேகரேந்திரருக்கு ஸமர்ப்பணமாகும் நூல், ரஸிக சிரேஷ்டரும் என்னோடு இழையும் இதயத்தவருமான ஸ்ரீ. கி,சந்திரசேகரன் அவர்களால் அறிமுகப்படுத்தப் பெறுவதும் அரிய பொருத்தந்தான். அவருக்கும், இந்நூலில் விரியும் அநேக விஷயங்களை ஆராய்ந்து வெளியிட்ட ஸ்ரீ நா.ரகுநாத அய்யரவர்களுக்கும், டாக்டர் வே.ராகவன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொல்கிறேன்.
 
--------------------------------------------------------------------------------------
கருணையின் உந்தலில் எழுதியது என்கிற பிரம்மாஸ்திரத்தைப் போட்டு, இந்த நூலில் யாரும் எந்தக் குறையும் காணக்கூடாது என்று நிர்ப்பந்திக்கிறேனா?
 
இல்லை. கருணை உட்புகுந்து ஊக்கியும் இதிலே என் ப்ரத்யேகக் குறைகள் இல்லாமற் போகவில்லை என நன்கு உணர்கிறேன்.
 
மழையில்லாததால் ஒரு பெங்களூரா மாமரத்தின் பழங்கள் பக்குவம் பெறாது வாடுகின்றன. மழை அடித்துப் பெய்கிறது; மரத்தில் ஜீவ சாரமாக உட் புகுந்து, அதனை இயக்கிப் பழத்திலே புஷ்டியை, மதுரத்தை ஊட்டுகிறது. வாஸ்தவந்தான். ஆனாலும் என்னதான் செம்மையாகக் கனிந்தாலும் பெங்களூரா பெங்களூராவாகத்தான் இருக்க முடியுமே தவிர, மல்கோவாவாகி விடுமா?
 
ரா.கணபதி 
சென்னை - 53
10.06.1976.
 
பொருளடக்கம்: 
1.கங்கை;  
2.நர்மதை;  
3.மஹோததி;  
4.சந்தன தடாகம்;  
5.ஸர்வ தீர்த்தம்;  
6.கோடி தீர்த்தம்;  
7.காவேரி. 
 
எழுத்தாளர் பற்றி: ரா. கணபதி (செப்டம்பர்1, 1935 – பிப்ரவரி 20, 2012) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆன்மிக எழுத்தாளரும் தமிழறிஞரும் ஆவார்.5 வருடங்களுக்குப் பின்னர், 'கல்கி' குழுமத்திலிருந்து வெளியேறி பல நூல்களை எழுதியுள்ளார். இவர் காஞ்சி சங்கர மடத்தின் பக்தராகத் திகழ்ந்தவர். காஞ்சிப் பெரியவர் சொல்லச் சொல்ல அவருடைய கருத்துகள் மற்றும் உபந்நியாசங்களைத் தொகுத்து "தெய்வத்தின் குரல்” என்ற தலைப்பில் நூல் எழுதியுள்ளார். இது 7 பாகங்களாக வெளிவந்தது. மேலும் 'சத்ய சாய் பாபா', 'சுவாமி விவேகானந்தர்', 'ரமண மகரிஷி' மற்றும் 'யோகி ராம்சுரத்குமார்' போன்ற துறவிகள் குறித்து நூல்கள் எழுதியுள்ளார்.
More Information
SKU Code VAN B 295
Weight in Kg 0.410000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name ரா. கணபதி - Ra Ganapati - R. Ganapathy
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:காமகோடி ராமகோடி - ரா. கணபதி - Kamakodi Raamakodi - Ra Ganapati - Kaamakodi Ramakodi - Kamakoti Ramakoti - Kaamakoti Raamakoti

Similar Category Products