Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

கனவும் விடியும் - Kanavum Vidiyum

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Akani B 033
₹200.00
கவிதைகள். 

மொழி: தமிழ்; 
அகநி வெளியீடு.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

சங்க காலத்திற்குப் பிறகு, பெரும் எண்ணிக்கையிலான பெண் கவிகள் தற்காலத்தில்தான் இருக்கிறார்கள். தன்னை எழுதுவதின் மூலம் சமூகத்தை எழுதுதல் என்ற புதிய போக்கைப் பெண் கவிகள் இப்பொழுது கைக்கொண்டிருக்கிறார்கள். கவிதை எழுதுவது தனிநபர் செயல்பாடாக இல்லாமல் களச் செயல்பாடாகவும் இருக்கிறது.  நவீன அடையாளம் கொண்ட பெண்கவிகளின் கவிதைகள் இத்தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி, இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கக் காலம் வரையான தமிழர் வாழ்வை இவர்களின் கவிதைகள் அடையாளப்படுத்துகின்றன. தனக்கான சுதந்திர வெளியை வளர்த்தெடுக்க எழுதத் தொடங்கிய பெண் கவிஞர்கள், இன்றைக்குத் தங்கள் கவிதைகளின் வழியே பெண் மொழியை அழுத்தமாக நிறுவியுள்ளனர்.  உலகின் திசையெங்கும் பரவியிருக்கும் தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைகளை ஒரே தொகுப்பாக்கிப் பார்க்கும் முயற்சியில் விளைந்துள்ளது இந்நூல்.                                                                                                                                                                                                                                  எழுத்தாளர் குறிப்பு : அ. வெண்ணிலா என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பிறந்த இவர் “ஆதியில் சொற்கள் இருந்தன”, “நீரிலலையும் முகம்”, “கனவிருந்த கூடு” உள்ளிட்ட ஏழு நூல்களை எழுதியுள்ளார். சென்னை புத்தகக் கண்காட்சி, நெய்வேலி புத்தகக் கண்காட்சிகளில் சிறந்த படைப்பாளி விருது, சிற்பி அறக்கட்டளை விருது, கவிப்பேரரசு - கவிஞர் தின விருது, ஏலாதி இலக்கிய விருது, தமுசெ விருது, சக்தி -2005 விருது போன்றவற்றைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய “கனவைப் போல மரணம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
More Information
SKU Code Akani B 033
Weight in Kg 0.630000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name அ.வெண்ணிலா - A.Vennilaa
Publisher Name அகநி வெளியீடு - Akani Veliyeedu
Write Your Own Review
You're reviewing:கனவும் விடியும் - Kanavum Vidiyum

Similar Category Products





Other Books by அ.வெண்ணிலா - A.Vennilaa