- Home /
- கூண்டுக்கு வெளியே - Koondukku Veliye
- Description
-
Details
தரமான வாசகர்களின் உள்ளங்கையில் ஆசிரியைக்கு நிலையான இடம் உண்டு. அவருடைய எழுத்தில் குடும்பப் பாங்கு, கட்டுக்கோப்பு, கடமை, தியாகம், சிறப்பு ஆகியவை மேலோங்கிருக்கும். அக்கிரமம், அநீதி, அதர்மம் ஆகியவற்றைக் காணவே முடியாது. கதாபாத்திரங்கள் வாசகர்களின் அபிமானத்தையும் அனுதாபத்தையும் பெற்று விடுவார்கள். சிறுவர் முதல் பெரியோர் வரை எளிதாக ரசித்துப் படிக்கத்தக்க இனிய தமிழ் நடை. கூண்டுக்கு வெளியே என்னும் இந்த நாவல் ராணி வார இதழில் தொடராக வெளி வந்து பல்லாயிரம் வாசகர்களைக் கவர்ந்தது.லக்ஷ்மி அல்லது லட்சுமி (மார்ச் 23, 1921 - சனவரி 7, 1987) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சமூகச் சிறுகதைகள், புதினங்கள் பெருமளவு எழுதியவர். லக்ஷ்மி திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற ஊரில் பிறந்தவர். இவருடைய தந்தையார் மருத்துவர் சீனிவாசன். தாயார் பட்டம்மாள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் திரிபுரசுந்தரி. மருத்துவராகவும் தமிழ் இலக்கிய உலகில் தனி இடம் பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்த இவர் தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவிலும் பல ஆண்டுகள் வாழ்ந்தவர்.ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், சுமார் நூற்று ஐம்பது நாவல்கள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், ஆறு மருத்துவ நூல்கள் இவர் எழுதியவையாகும்.
தமிழக அரசின் பரிசு உள்பட ஏராளமான இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் விருதுகளையும் வாங்கிக் குவித்த இவருடைய “ஒரு காவிரியைப் போல” என்கிற நாவல் சாகித்ய அகாதமி விருதினை வென்றது.
- Specification
-
Specification
SKU Code TMN B 299 Weight in Kg 0.0100 Brand Bookwomb Dispatch Period in Days 3 ISBN No. Author Name Lakshmi - லக்ஷ்மி Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம் - Reviews