குறளோவியம் (வண்ணப் படங்களுடன்) - கலைஞர் மு. கருணாநிதி - Kuraloviyam by Kalaignar M Karunanidhi - Kuraloviam
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: In stock
SKU:
Bharti B 26
Regular Price
₹1,500.00
Special Price
₹1,400.00
Save: 100.00 Discount: 6.67%
தடிமன் அட்டை;
648 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதற் பதிப்பு : பிப்ரவரி 1985;
பத்தாம் பதிப்பு: செப்டம்பர் 2018.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இலக்கிய மறுபடைப்புகள். ‘உரைநடையில் குறட்பாக்களை மலர் உரைத்தோர் உளர்! சுருக்கமாகச் சுவையாகக் குறளுக்குப் பொழிப்புரை புகன்றோர் உளர்! இசைத் தமிழால் இனிய குறளைச் செவி வழி பாயச் செய்து சிந்தை குளிர்விப்போர் உளர்! இவற்றுக்கிடையே என் பங்காக நிகழ்ச்சிகளைக் காட்சியாக்கி நிழல் தரும் குளிர் தருக்கள் அடர்ந்த நீரோடைத் தமிழிலும், நெஞ்சில் கனலேற்றும் முழவோசைத் தமிழிலும், நீள் விழியில் நதி தோன்றத் தூண்டும் உருக்கமிகு உணர்ச்சித் தமிழிலும் குறட்பாக்களை உங்கள் முன்னால் உலவவிட்டிருக்கிறேன்’’ என்று குறளோவியத்துக்குக் குறிப்பு வழங்கினார் கருணாநிதி.
குறள், ஒரு குறிப்பிட்ட மதத்தின் அல்லது மார்க்கத்தின் வழி காட்டும் நூலாக இல்லாமல், பொதுவான வாழ்க்கை நெறி வகுக்கும் நூலாகத் திகழ்கிறது.
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு உருவாகியிருந்த தமிழ் நிலத்துச் சமுதாயச் சூழலின் நடுவிலே எழுத்தாணி பிடித்து ஏடெழுதிய வள்ளுவப் பெருந்தகையார், அறம் எதுவென அறுதியிட்டுக் கூறினார். இல்வாழ்க்கையின் இனிய பயனையும் எப்படியிருந்தால் துறவறம் சிறப்புடையது என்பதையும் வாழ்க்கையில் கொள்ளுவன - தள்ளுவன எவை எவை எனப் பகுத்துக்காட்டியும் முடியரசு ஆட்சி நடத்த காலத்திற்குச் சொல்லப்பட்ட அறிவுரைகள் குடியரசு ஆட்சி நடக்கும் நாடுகளுக்கும் பொருந்துமெனக் கூறுமளவுக்கு அரசியல் கோட்பாடுகளை வகுத்தளித்தும் உயிர் இனத்தின் இயற்கை உணர்வான காம உணர்வு, ஆறாவது அறிவையும் பெற்றுள்ள மனித இனத்தினையும் ஆட்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது எனினும் அதற்கு அன்பினை அடிப்படையாகக் கொண்ட இலக்கண இலக்கியக் கவசம் அணிவித்தும் எப்பாலினும் சிறந்த முப்பாலினைப் பொழிந்து அதில் தேன் தமிழும் கலந்து நம் இதயத்தின் வாயிதழ் திறந்து ஊட்டுகின்ற அமிழ்தமே திருக்குறள்!
ஒன்றுக்கோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குறட்பாக்களுக்கோ பதவுரை, விரிவுரை என்று எழுதிக் கொண்டிராமல், பலரும் விரும்பிப் படிக்கத் தக்க வண்ணம் அவர்களைக் கவர்ந்திழுத்துக் கருத்துக்களை நெஞ்சத்தில் பதிய வைத்திட வேண்டுமென்ற ஆசைத் துடிப்பு, எனக்கு முப்பது ஆண்டுக் காலமாகவே உண்டு.
முதல் முயற்சியை 1956-ஆம் ஆண்டு தொடங்கினேன். 'முரசொலி' வார இதழில் 'குறளோவியம்' என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதிடத் துணிந்தேன்.
இந்த நூலில் முன்னூறு குறளோவியங்கள் இடம் பெற்றுள்ளன. பயன் படுத்தப்பட்டுள்ள குறட்பாக்கள் 354 ஆகும்.
அறத்துப்பாலில் 76 குறட்பாக்கள், பொருட்பாலில் 137 குறட்பாக்கள், இன்பத்துப் பாலில் 141 குறட்பாக்கள்.
இந்த 354 குறட்பாக்களுக்கும் சொல்லோவியம் இயற்றிட, செழிப்பு மிகுந்த செந்தமிழ் எனக்குத் துணை நின்றுள்ளது என்பதை நூலுக்குள் நுழைந்தவர்கள் புரிந்து கொள்ள முடியும்.
கவிதை நடையை உரைநடையிற் கலந்து, அதனைக் கரடுமுரடான கடுந்தமிழ்நடையாக்கிவிடாமல், எழில் கூட்டி எளிய நடையில் வழங்கிடும் புதிய நடையொன்றை 1945-ம் ஆண்டு நான் ஈரோடு "குடியரசு" அலுவலகத்தில் தந்தை பெரியார் அவர்களின் அரவணைப்பில் இருந்தபோதே அறிமுகப்படுத்தினேன்.
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து’
- என்கிற குறளுக்கு கருணாநிதி சொன்ன விளக்கம் நம்மை இன்னும் ஆச்சர்யமூட்டும். ‘‘களம்பட்டுத் தியாகியாக நான், மாண்டுக் கிடக்க... என் உடல்மீது என் தலைவர் அண்ணா, கண்ணீர் சிந்தும் பேறு பெறவேண்டும் என்ற அவா மிகுதியால் எழுதப்பட்ட முதல் குறளோவியம் இது. ஆனால் நான் நினைத்தற்கு மாறாக நடந்துவிட்டதே! என் அன்புத் தலைவர் எனக்கு முன் மறைந்துவிட்டாரே!’’ என்பதே அது. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே “பிறப்பொக்கும்' என்று வள்ளுவர் அழுத்தம் திருத்தமாகக் கூற வேண்டியிருந்திருக்கிறது. இன்று இருபதாம் நூற்றாண்டில், சமுதாயம் நூற்றுக்கணக்கான - ஆயிரக்கணக்கான சாதிப்பிரிவுகளால் சிதறுண்டு கிடப்பது போலவே அன்றும் வள்ளுவர் காலத்திலும் பிறப்பால் உயர்வு தாழ்வு மனப்பான்மை பாராட்டப்பட்டிருக்கிறது. அந்த வேதனையைத் தாங்க முடியாமல்தான் வள்ளுவர் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று குறள் தீட்டியுள்ளார்.
எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவர் குறித்தவுடன், விலங்கினங்களும், பறவையினங்களும், ஊர்ந்து சென்றிடும் புழு பூச்சி இனங்களும் - அவரைப் பார்த்துக் கேள்விகளை அடுக்கின.
"எங்களுக்குள் சாதிப் பூசல்களே என்றைக்கும் இருந்ததில்லை. சாதி உணர்வுகள் தலைதூக்கி அதன் காரணமாக நாங்கள் அமளிகளை உருவாக்கியதே இல்லை. அங்ஙனமிருக்க பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று எம்மையும் சேர்த்து இழிவுபடுத்துதல் முறைதானே?''
- இவ்வாறு மிருகங்கள் கேட்டன, பறவைகள் கேட்டன, ஊர்வன கேட்டன!
"உயிர்கள் என்று பொதுவாகச் சொன்னதால் எல்லா உயிர்களையும் குறிப்பிடுமெனினும் உங்களுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவு இல்லாத காரணத்தால் உங்களிடையே சாதிப்பூசல்கள் எழுவது இல்லை. பகுத்தறிவுள்ளவர்களாகக் கூறிக்கொள்ளும் மனிதர்களிடையேதான் பல்லாயிரம் சாதிகள், சண்டைகள்! உயர்வு தாழ்வு உணர்வுகள் குறளைப் படிக்கக் கூடியவர்களுக்காகத்தான் இதனை எழுதினேன். நீங்கள் படிக்க இயலாதவர்கள். உங்களுக்காக, இதனை நான் எதற்காக எழுதப்போகிறேன். எனவே நான் "உயிர்கள்' என்று குறிப்பிட்டிருப்பது இந்த குறளைப் பொறுத்தவரையில் மனிதர்களை எண்ணித்தான்'' வள்ளுவர் விளக்கமளித்துவிட்டு வேறு வழியாகப் பயணம் தொடர்ந்தார். அங்கே இருவர், விவாதித்துக் கொண்டிருந்தனர்.
ஒருவர்: பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லையென்று குறள் கூறினாலும் கூட அவரவர் செய்கின்ற தொழில்கள் வேற்றுமையால் சிறப்பு இயல்புதான் மாறுகின்றன என்று சுட்டிகாட்டியிருக்கிறது. அதனால் இசைவாணனாகிய நான், ஆசிரியத்தொழில் புரியும் உம்மைவிடச் சிறப்புடையவன்.
மற்றவன்: இல்லை மறுக்கிறேன். ஆசிரியர் தொழிலே சிறந்தது. அதற்கு ஒப்பிடக் கூடியது கூட அல்ல உமது இசைத் தொழில்.
இருவரின் உரையாடல் சூடேறுவதற்கு முன்பு வள்ளுவர் குறுக்கிடுகிறார்.
"சொற்போரை நிறுத்திடுக! நான் தொழிலுக்குத் தொழில் உயர்வு தாழ்வு இருப்பதாகவோ - சிறப்பு இயல்புகள் மாறுவதாகவோ கூறிடவில்லை. ஒவ்வொரு தொழிலுமே அதனைச் செய்வோரைப் பொறுத்து வேறுபடுகின்றன. இதோ உங்களையே எடுத்துக்கொள்வோம். ஓர் இசைவாணர், பாடினாலே ஊரார் காது கொடுத்துக் கேட்க மறுத்து வேறு அலுவல்களைக் கவனிப்பர். மற்றொரு இசைவாணரின் இனிய இசையை விடிய விடியக் கேட்டு மகிழ்வர். அது போலத்தான் ஓர் ஆசிரியர் மாணவரிடையே கேலிப் பொருளாக விளங்குவார். இன்னொரு ஆசிரியரேர மாணவரால் மதிக்கத்தக்க மாண்புடையவராகத் திகழ்வார். ஆகையால் தொழிலுக்குத் தொழில் வேறுபாடு காண நான் விழைந்திடவில்லை. செய்யுந் தொழில் எதுவாயினும் அதிலே எய்துகிற சிறப்புகள் வேறுபடுகின்றன. செய்பவரின் அறிவாற்றலைப் பொறுத்து. இப்படித்தான் என் கருத்துக்கு விளக்கம் பெற வேண்டுமேயல்லாமல் நீங்கள் மோதிக் கொள்வது முறையல்ல''.
குறள் தந்த கோமானின் விளக்கவுரை கேட்டு, இசை வாணரும், ஆசிரியரும் மகிழ்ந்து வணங்கினர்.
வள்ளுவர்:
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்''
என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார். குறளோவியம், ‘தினமணி கதிர்’, ‘குங்குமம்’ போன்ற இதழ்களில் வெளிவந்து பின்னர் நூலாக வெளியிடப்பட்டது.
‘‘கலைஞர், புதினங்களைப் படைத்தார்; நாடகங்களைப் படைத்தார்; கட்டுரைகளைப் படைத்தார் என்பது மட்டும் அவரது பங்களிப்பு அன்று. அவர், புதிய தமிழை... புதிய தமிழ் நடையைத் தமிழ் உலகுக்குப் படைத்துத் தந்தவர்’’ என்றார் டாக்டர் வா.செ.குழந்தைசாமி.
ஓவியம்: திரு.ஜெயராஜ் மற்றும் திரு.பத்மவாசன்.
ஆசிரியர் பற்றி: முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். 1969ல் முதன்முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். 15 நாவல்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும் 210 கவிதைகளையும் படைத்துள்ளார்.மேலும் "நண்பனுக்கு", "உடன்பிறப்பே" என்னும் தலைப்புகளில் 7000க்கும் மேற்பட்ட மடல்களை எழுதியிருக்கிறார். கரிகாலன் என்னும் பெயரில் கேள்வி-பதில் எழுதியிருக்கிறார். இவை தவிர தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். இவரின் படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன.
SKU Code | Bharti B 26 |
---|---|
Weight in Kg | 1.000000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | கலைஞர் மு. கருணாநிதி Kalaignar M Karunanidhi |
Publisher Name | பாரதி பதிப்பகம் Bharathi Pathippagam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%