Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

மத்யமர் - Mathyamar - சுஜாதா

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 163
Regular Price ₹105.00 Special Price ₹85.00

Save: 20.00 Discount: 19.05%

எழுத்தாளர் : சுஜாதா;  
பக்கங்கள் : 160; 
பதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ்

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இங்கேயும் இல்லாமல் அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது.  ஏறக்குறைய நல்லவர்.

மத்யமர்.

இவர்களை பற்றிய பன்னிரண்டு கதைகள் இவை.

1.ஒரு கல்யாண ஏற்பாடு 
2.புதுமோதிரம் 
3.'தர்ட்டி ஃபார்ட்டி' 
4.அறிவுரை 
5.ஜாதி இரண்டொழிய...
6.சாட்சி 
7.நீலப் புடவை, ரோஜாப் பூ 
8.மற்றொருத்தி தேவை 
9.பரிசு 
10.தாய் - 1
11.தாய் - 2
12.தியாகம் 

இக்கதைகளைச் சிறப்பாக வெளியிடும் விசா பதிப்பகத்தாருக்கு நன்றி.
- சுஜாதா. 

விமர்சனங்கள் தரமான அலசல் திறமைகள் 
பின்னுரை : சுஜாதா 

முத்தரசநல்லூர் பொன் ராஜேந்திரன் எனக்கு எழுதிய கடிதம்: "ஜாதி இரண்டொழிய ரமேஷ் பாத்திரம் கண்களில் நீரை வரவழைத்துவிட்டது. காரணம், நானும் ஒரு வேலையில்லாத - 28 வயதான பட்டதாரி. ஒவ்வொரு முறை அப்ளிகேஷன் போடும்போதும் ஒவ்வொரு இண்டர்வியூவின் போதும் நமக்கு இந்த வேலை நிச்சயம் கிடைக்கும் என மகிழ்சியில் மிதந்தே 'கோட்டா'வின் மூலம் அடிப்பட்டவன். எங்கள் குடும்பம் இக்கதையில் வரும் ரமேஷினுடையதைப் போன்றதுதான்...." 

இந்த உருக்கமான கடிதம் எனக்குக் கிடைத்த அதே சமயம் திருநெல்வேலி பாண்டியன் என்னைத் தேர்ந்த தமிழ் வார்த்தைகளில் திட்டி எழுதியிருந்தார்: "அம்பி! வசை பாடாதே! பாடினா நாக்கை அறுத்து நடுவீதியில் வீசிடுவோம், ஜாக்கிரதை. யோவ்! பிராமணத்திக்கெல்லாம் தாலிகட்டி எங்க ஆள் சோறு போடறான்யா! காலம் மாறிப் போச்சுடா. உன் மகளைக் கூட ஒரு எஸ்.சி. தான் கல்யாணம் பண்ணப் போறான். எதிர்காலம் பதில் சொல்லும்."

துரதிர்ஷ்டவசமாக எனக்கு மகள் இல்லை.

இந்தக் கடிதத்தில் பொதிந்துள்ள கோபம் ... உண்மையைச் சொல்லும் போது வரும் கோபம் - ஒரு விதத்தில் என் கதையின் யோக்கியத்தைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால் 'ஜாதி இரண்டொழிய' கதையில் நான் பிற்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யும் திட்டத்தை எதிர்க்கவில்லை. திட்டம் துஷ்ப்ரயோகம் செய்யப்பட்டுச் சலுகைகள் நிஜமாகவே பிற்பட்டவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதையே குறிப்பிட்டேன்.

இந்தக் கதையில் பிரச்னைகள் 'மத்யமர்' என்னும் வர்க்கத்தினருக்கு மட்டும் உரியனவா என்று சிலர் கேட்டிருந்தார்கள். இல்லை. இந்தப் பிரச்சினைகள் எல்லா வர்க்கத்தினருக்கும் ஏற்படுகின்றன. மத்யமர் அவர்களுக்குத் தீர்வு காணும் விதம் வேறாக இருக்கும்.

முதல் இரண்டு கதைகளும் பிராமணர்கள் கதாபாத்திரங்களாக இருப்பது உறுத்தியது என்று சிலர் எழுதியிருந்தனர். பிராமணர்களை பற்றி எழுதுவதில் எனக்கு ஒரு பரிச்சயமும் தெளிவும் இருப்பதால் அந்தச் சௌகரியத்துக்குத்தான் எழுதினேன். அந்த மாதிரிச் சம்பவங்கள் மற்ற இனங்களின் மத்யமர் குடும்பங்களில் நடக்காது என்றில்லை. பெண்ணுக்கு அமெரிக்காவில் மாப்பிள்ளை பார்ப்பதும் சினிமா சந்தர்ப்பத்திற்காக அலைவதும் ஜாதிக்கு ஜாதிக்கு அப்பாற்பட்டவை. அதேபோல் பொய் சொல்வதும் சோரம் போவதும்.

விமர்சனக் கடிதங்கள் அனைத்தும் அதை எழுதியவர்களின் பண்பட்ட தரமான அலசல் திறமைகளைக் காட்டின. ஒரு கதை எழுதும்போது அதன் பற்பல சாத்தியக் கூறுகளை, மறைபொருட்களை யோசித்து யாரும் எழுதுவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் கதைக்கரு உதித்துவிட்டால் என் கணிப்பொறியின் முன்னிலையில் உட்கார்ந்தால் என்னை யாரோ செலுத்துவது போலத்தான் உணர்கிறேன். ஆதாரக் கருத்து தோன்றுவதில்தான் சற்றுத் தடுமாறுவேன்.

மத்யமர் கதைகளில் பன்னிரண்டு கதைகளில் பதினொன்று என்னைச் சுற்றுப்பட்ட என் நண்பர்களுக்குத் தெரிந்த மத்யமவர்க்கக் குடும்பங்களில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளே. முற்றிலும் கற்பனை என்று சொன்னால் ஒரே ஒரு கதைதான்: 'நீலப்  புடவை ரோஜாப்பூ', இந்தக் கதையில் ஒருசிறப்பை வாசகர்கள் கவனிக்காததில் எனக்கு வருத்தம். கதை முழுவதும் ஓர் ஆங்கில வார்த்தைகூடப் பயன்படுத்தவில்லை! 

பிரசுரமான அனைத்துக் கடிதங்களையும் நான் ரசித்தேன். இந்தக் கதைகள் புத்தகமாக வரும்போது வாசகர்களின் கடிதங்களையும் தொகுத்துப் பிரசுரிக்க அவர்கள் அனுமதி கோருகிறேன்.

- சுஜாதா - 31.8.90

எழுத்தாளர் சுஜாதா:  சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.
More Information
SKU Code TMN B 163
Weight in Kg 0.040000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Sujatha சுஜாதா
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:மத்யமர் - Mathyamar - சுஜாதா

Similar Category Products





Other Books by Sujatha சுஜாதா