Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

நீலாம்பரி - Neelambari

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: Out of stock
SKU:
Alnce B 470
₹80.00
சிறுகதைகள் தொகுப்பு. 

மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் நீலாம்பரி, த.நா. குமாரசாமி அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.  அம்மாவையே போய் கேட்டுவிடலாம் என்று ரமணிக்குத் தோன்றியது...

கணவன் மனைவியிடம் ஏற்பட்டுள்ள விரிசல் எந்த அளவுக்கு குழந்தை உள்ளத்தை பாதிக்கிறது என்பதை சித்தரித்துள்ளார் த.நா.கு. இந்த கதையில்.

"மூளைக்கு ஒன்றாக விளையாட்டுச் சாமான்கள்  சிதறிக் கிடந்தன. ரமணிக்கு எந்த விளையாட்டிலும் மனம் செல்லவில்லை. வேண்டிய விளையாட்டுச் சாமான்களை அப்பா வாங்கி வைத்திருந்தார். சேணம் பூட்டிய மரக் குதிரை குப்புற விழுந்துகிடந்தது.... மேஜை மீது ரயில் வண்டி சரிந்திருப்பதைக்கூட லட்சியம் செய்யவில்லை அவன். 'ஸெல்லுலாய்ட்' சிப்பாய் கைகால் மடங்கி சோபாவின் கீழே படுத்திருந்த கண்ணராவியான காட்சி. அவனைத் தூக்கிவிட ரமணி போகவே இல்லை. உதடு அடிக்கடி வளைந்து துடித்தது. அப்பாவை ஏன் காணோம்?

பெரியவர்களின் நிஜ உலகில் தடுமாற்றம் ஏற்படும்போது, மெய் என்று நினைத்து, குழந்தைகள் ஆசைகொள்ளும், அவர்களின் பொம்மை உலகையும்கூட அது பாதிக்கும் என்பதை தனக்கே உரிய நடையில் ஒரு சொல் ஓவியமாக புனைந்து காட்டுகிறார்... குமாரஸ்வாமி.           

கதையைச் சொல்லிவிட்டு போக வேண்டியதுதானே, நடைக்காகவும் சொற்களுக்காகவும் அனாவசியமாக சிரமப்படுவானேன்? என்று எண்ணுகிற எழுத்தாளர் அல்ல அவர். ஜீவனுள்ள பழந்தமிழ் சொற்களைத் தேடிப் பிடித்து, சின்னஞ்சிறு வாக்கியங்களில் அவர் அதை அமைத்துத் தரும்போது, "கதை எப்படியோ போகட்டும் தமிழனின் அழகை ரசிப்போம்" என்றே எண்ணத் தோன்றுகிறது. நடையழகுக்காக கதையம்சத்தையும் பலிகொடுத்து விடவில்லை, குமாரசாமி," என்று வருணித்துள்ளார் குமுதம் ஆசிரியர் காலம் சென்ற எஸ்.ஏ.பி அவர்கள்.    

எழுத்தாளர் பற்றி : தண்டலம் நாராயண சாசுதிரி குமாரசாமி என்னும் த. நா. குமாரசாமி (T N Kumarasamay) வங்க மொழியைப் பயின்று அம்மொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்தவர். எழுத்தாளர். இதழாளர். தன் அண்ணன் த. நா. சேனாதிபதியின் தாக்கத்தால் இளம்பருவத்திலே இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டார். கலைமகள், மணிக்கொடி, ஆனந்த விகடன் ஆகியவை உள்ளிட்ட இதழ்களில் கதைகள் எழுதினார். கலைமகள் இதழில் கி. வா. சகந்நாதன், கா. ஸ்ரீ. ஸ்ரீ ஆகியோரோடு பணியாற்றினார்.1940ஆம் ஆண்டில் உலகம் சுற்றும் தமிழன் எனப் புகழப்பட்ட அ. கருப்பண் செட்டியார் (ஏ. கே. செட்டியார்) எடுத்த மகாத்மாகாந்தி என்னும் ஆவணப்படத்திற்கு இவர் உரையாடல் எழுதினார்.
More Information
SKU Code Alnce B 470
Weight in Kg 0.480000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name த.நா.குமாரசாமி - T.N. Kumarasamy
Publisher Name அல்லயன்ஸ் - Alliance
Write Your Own Review
You're reviewing:நீலாம்பரி - Neelambari

Similar Category Products





Other Books by த.நா.குமாரசாமி - T.N. Kumarasamy