Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

NO EXCUSES - Tamil - சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள். சுயஒழுங்கின் வியத்தகு சக்தி - பிரையன் டிரேசி - Suyaozhungin Viyathagu Sakthi - Brian Tracy

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 4297
Regular Price ₹399.00 Special Price ₹375.00

Save: 24.00 Discount: 6.02%

சுயமுன்னேற்ற நூல்.
நூல்:  சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள் - தமிழ்; 
பதிப்பு: ஐந்தாம் பதிப்பு - ஆண்டு 2019; 
பக்கங்கள்: 356 பக்கம்; 
படிக்கக்கூடிய எழுத்துரு (Readable Font);  
நூலாசிரியர்:  பிரையன் டிரேசி; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-13:  9788183223768; 
பிணைப்பு:  சாதா அட்டை; 
பதிப்பகம்:   மஞ்சுள் பதிப்பகம் ; 
மொழி:  தமிழ் 

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

நிரந்தர மகிழ்ச்சியையும் வெற்றியையும் அடைய 21 வழிகள். 
 
அதிர்ஷ்டத்தாலோ அல்லது அசாதாரணமான திறமையாலோ மட்டுமே வெற்றியை அடைய முடியுமென்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பெரும் சாதனையாளர்கள் பலர் வெற்றியை அடைவதற்கு மிகச் சாதாரணமான ஒரு கருவியைத்தான் உபயோகித்துள்ளனர். சுயஒழுங்குதான் அது.
 
பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு ஒரு கூலித் தொழிலாளியாகத் தன் வாழ்வை துவக்கிய பிரையன் ட்ரேசி, சுயஒழுங்கின் வியத்தகு சக்தியைத் தன் சொந்த வாழ்வில் நேரடியாகப் பயன்படுத்தி, படிப்படியாக முன்னேறிப் பல கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியானார்?
 
உங்களுடைய வாழ்வின் மூன்று முக்கியப் பகுதிகளில் எப்படி மகத்தான வெற்றியைப் பெறுவது என்பது உத்வேகமூட்டும் விதத்தில் பிரையன் ட்ரேசி இப்புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். அவை:
 
உங்களுடைய தனிப்பட்ட இலக்குகள் 
உங்களுடைய தொழில் மற்றும் பணம் தொடர்பான இலக்குகள் 
உங்களுடைய ஒட்டுமொத்த மகிழ்ச்சி         
 
நீங்கள் உங்கள் அன்றாட வாழ்வில் சுயஒழுங்கை மிகச் சிறிய அளவில் கடைபிடித்து வந்தால்கூட அது பெரும் வித்தியாசத்தை  ஏற்படுத்தும். சாக்குபோக்குகள் கூறுவதை நிறுத்திவிட்டு, இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள எளிய பயிற்சிகளை சுயஒழுங்குடன் நீங்கள் கடைபிடித்து வந்தால் வெற்றிச் சிகரத்தை நோக்கிய உங்கள் பயணத்தை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. 
 
                                             உள்ளடக்கம்:
 
அறிமுகம்: சுயஒழுங்கு எனும் அதிசயம் 
 
                                       பகுதி 1: சுயஒழுங்கும் தனிப்பட்ட வெற்றியும் 
அத்தியாயம்   1: சுயஒழுங்கும் வெற்றியும் 
அத்தியாயம்   2: சுயஒழுங்கும் குணநலனும் 
அத்தியாயம்   3: சுயஒழுங்கும் பொறுப்பும் 
அத்தியாயம்   4: சுயஒழுங்கும் இலக்குகளும் 
அத்தியாயம்   5: சுயஒழுங்கும் தனிநபர் உன்னதமும் 
அத்தியாயம்   6: சுயஒழுங்கும் துணிச்சலும் 
அத்தியாயம்   7: சுயஒழுங்கும் விடாமுயற்சியும் 
 
                                       பகுதி 2: சுயஒழுங்கும் தொழில் வெற்றியும் 
அத்தியாயம்   8: சுயஒழுங்கும் வேலையும் 
அத்தியாயம்   9: சுயஒழுங்கும் தலைமைத்துவமும் 
அத்தியாயம் 10: சுயஒழுங்கும் வியாபாரமும் 
அத்தியாயம் 11: சுயஒழுங்கும் விற்பனையும் 
அத்தியாயம் 12: சுயஒழுங்கும் பணமும் 
அத்தியாயம் 13: சுயஒழுங்கும் நேர நிர்வாகமும் 
அத்தியாயம் 14: சுயஒழுங்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் 
 
                                       பகுதி 3: சுயஒழுங்கும் சிறப்பான வாழ்க்கையும்   
அத்தியாயம் 15: சுயஒழுங்கும் மகிழ்ச்சியும்  
அத்தியாயம் 16: சுயஒழுங்கும் ஆரோக்கியமும் 
அத்தியாயம் 17: சுயஒழுங்கும் கட்டுக்கோப்பான உடலும் 
அத்தியாயம் 18: சுயஒழுங்கும் திருமணமும் 
அத்தியாயம் 19: சுயஒழுங்கும் குழந்தைகளும் 
அத்தியாயம் 20: சுயஒழுங்கும் நட்புறவும் 
அத்தியாயம் 21: சுயஒழுங்கும்மனஅமைதியும் 
 
ஆசிரியர் : 1944-ம் ஆண்டு பிறந்த பிரையன் டிரேசி கனடிய அமெரிக்க மனிதவள மேம்பாட்டு நிபுணர், ஊக்கமூட்டும் பேச்சாளர் மற்றும் சுய முன்னேற்ற எழுத்தாளர். தலைமைத்துவம், விற்பனை, சுயமதிப்பு, இலக்குகள், வியூகம், படைப்பாற்றல் மற்றும் உளவியல் தொடர்பான இவரது கருத்துக்கள் புகழ்பெற்றவை. தனது உரைகள் மற்றும் கருத்தரங்குகள் வாயிலாக உலகம் முழுவதும் எண்ணற்ற சாதனையாளர்களை உருவாக்கியவர். தமிழ் உட்பட பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட எழுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களின் ஆசிரியர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை, பல்வேறு நாடுகளில் ஐந்தாயிரம் பயிலரங்குகள், ஐம்பது லட்சம் பேரிடம் கலந்துரையாடல் என பெரும் சாதனைகளுக்கு சொந்தக்காரர்.               
 
மொழிபெயர்ப்பாளர் - நாகலட்சுமி சண்முகம்.      நாகலட்சுமி மிகச் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். மக்களிடம் பரிபூரண மாற்றம் கொண்டுவரும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு. முத்துசாமி அவர்களின் பேத்தியான நாகலட்சுமியிடம் இருக்கும் இயல்பான தமிழ் ஆர்வம், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரை இழுத்து வந்துள்ளது.
 
கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 35 புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார்.
More Information
SKU Code PRK B 4297
Weight in Kg 0.380000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788183223768
Author Name BRIAN TRACY - பிரையன் டிரேசி. தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
Publisher Name MANJUL PUBLISHING HOUSE / மஞ்சுள் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:NO EXCUSES - Tamil - சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள். சுயஒழுங்கின் வியத்தகு சக்தி - பிரையன் டிரேசி - Suyaozhungin Viyathagu Sakthi - Brian Tracy

Similar Category Products





Other Books by BRIAN TRACY - பிரையன் டிரேசி. தமிழில்: நாகலட்சுமி சண்முகம்