Details
ஆனந்த விகடனில் தனி இணைப்பாக மணியன் செல்வனின் படத்தோடு வெளிவந்த அவரது 'பச்சை வயல் மனது' என்ற குறுநாவல் எனது நெஞ்சுக்கு மிக நெருக்கமானது. அதில் வரும் அந்த மூன்று சகோதரிகள் ஆகட்டும், அதில் வரும் ஒரு கவிதாயினி சகோதரியின் தொலைக்காட்சி கவியரங்கக் கவிதைகளாகட்டும், அதில் அவளைப் பெண் கேட்க வரும் அந்த ஆணாகட்டும், அத்தனையும் அசாத்தியமான எழுத்துக்கள்.
அதில் இடம் பெற்ற 'எனக்குள்ளேயும் எப்போதாவது இடியிடித்து மழை பெய்யும்' என்ற ஒரு கவிதை இன்றும் என் இதயத்தை உலுக்கிக் கொண்டே இருக்கிறது.
காதல் என்ற உணர்வை அதன் அடி ஆழம் வரை சென்று பெயர்த்து எழுதினார் பாலா...
சில சமயங்களில் அவரது எழுத்து நம்மை அறியாமல் நமது அந்தரங்கத்தை ஆழமாக அலசியதாகவே தோன்றும்.
ஒரு பெண்ணை ஒரு ஆண் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு ஆணாக இருந்து ஒரு பெண்ணின் போக்கில் சொல்வது என்பது மிகக் கடினம். அந்த வித்தை அவருக்கு லாவகமாக கைவந்தது. - ssrblogs