பந்தயப் புறா நாவலில் 'வாழ்வில் தந்திரம் மிகும்போது நேர்மை விட்டு விலகிவிடுகின்றது'
Book Review :
பிற்பட்ட வகுப்பு, கட்டுப்பாடான குடும்பத்துப் பெண் ஒருத்தி - மற்றவர்களின் வாழ்க்கை முறைகளையும், பறந்து திரிபவர்களையும் பார்த்து தானும் - மேலே மேலே பற பற எனத் துடிப்பது - மீன் குழம்பும், மிளகு ரசமும் மட்டும் வழக்கை அல்ல எனப் புரிந்து எழுவது? ஓர் அற்புதமான படைப்பு/
ஒரு கதாசிரியரின் கதைகளை படித்துவிட்டு ஆண்களுக்குள் சிவசுவைபோல - ஒருவன் இருப்பானா எனத் தேடுகிறாள்.
அவள் பறக்கத் துடிக்கும் புறா, வீட்டில்தான் எதிர்ப்பு, பஸ்ஸில் கேலி, வேலைக்குப் போன இடத்திலுமா அவமதிப்பு, கிண்டல், கேலி, எத்தனை இடங்களில் ஜெயிக்க வேண்டும்?
அப்பாடா, இது போல எத்தனை அடிகள், ஏச்சுப் பேச்சுகள். எதிர்ப்புகள். ஒவ்வோரிடத்திலும். ஒவ்வோர் ஆதி முன் வைக்கும் போதும் செல்வி பறந்தாள். பயப்படாமல் வேகமாய் பறந்தாள். பறக்கிறாள். பாலகுமாரா, ஒரு காலத்தில் ஐம்பது வருஷத்து முன் நானும் பறக்க ஆசைப்பட்டேன், கட்டு இருந்தது. பெரியவர்கள் தடுக்கவில்லை. சின்னவர்கள் சிறகுகளை வெட்டிவிட்டார்கள்.
நானா, வீடா என யோசித்து, பரப்பதா கூட்டிலடைவதா என நினைத்துக் கீழே விழுந்தேன்.
- மனம் கனிந்த அன்புடன், ஆசிகளுடன் அம்மா.