Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Pavazha Malli - பவழ மல்லி

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 008
₹125.00

குடும்ப நாவல்/ குடும்ப புதினம். 

பேப்பர்பேக்/ காகித அட்டை;

216 பக்கங்கள்; 

மொழி: தமிழ்; 

முதற் பதிப்பு: ஜூலை 1996; 

மூன்றாம் பதிப்பு: நவம்பர் 2010.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இன்னும் ஒரு படம் கிடைத்தால் நிச்சயமாக செய்துவிடலாம். எளிதாக காசு கட்டலாம். முடியும் தருவாயில் ஒரு படமும், பாதி தருவாயில் ஒரு படமும் இரண்டு படங்கள் தான் இருக்கின்றன.

படம் முடியும் தருவாயில் இருக்கும்போது காசு கேட்பது மரியாதையே இல்லை. தொட்டுத் தொட்டு ஏகப்பட்ட செலவுகள் இருக்கிற போது ஒரு தயாரிப்பாளரை தொந்தரவு செய்ய முடியாது. படம் வெளி வந்த பிறகு அதன் வெற்றியை பொறுத்து காசு செட்டிலாகும். பாதி முடிந்த படத்துக்கு மூன்றாவது ஷெட்யுல் போக வேண்டும். செட்டு போடும் செலவுக்கு பயந்து அந்த டைரக்டர் வெளியூர் போகிறார். நிஜமான தெரு வேண்டுமென்று கல்லிடைக்குறிச்சி போகிறார். ஆனாலும் ஆர்ட் டைரக்டர் கூட போக வேண்டும். எல்லா வீட்டு வாசலுக்கும் வெள்ளை சுண்ணாம்பு அடித்து, காவி பட்டை தீட்டி சில இடங்களில் மூங்கில் தட்டி வைத்து அலங்காரம் செய்ய வேண்டும் டான்ஸ் பெண்கள் உதைத்து ஆட விதவிதமாய் கலர் பொடிகள் கொண்டு போக வேண்டும். திடீரென்று தாழங்குடையோ கோணிப்படுதாவோ கேட்பார்கள். இதிலெல்லாம் எந்த வருமானமும் வராது மாறாய் 

"ஒரு கோணிப்படுதாவுக்கு இருநூறு ரூபாயா, ஆர்ட் டைரக்டர் மாதிரி கொள்ளை அடிக்கிறவன் உலகத்தில் எவனும் இல்லை" 

"ஒரு கோணி இருபத்து ஏழு ரூபாய் பன்னிரண்டு கோணியில தைச்சிருக்கேன். எப்படி அநியாயம்றீங்க."

"ஒரு பழைய கோணி இருபத்து ஏழு ரூபாயா."

"அது பழைய கோணியில்லீங்க, புது கோணி."

புதுசா தைச்சு அதை பழசா பண்ணாங்க"

சும்மா பொய் சொல்லாத."

பேச்சு வளருமே தவிர காசு பெயராது.

ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.

 

பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

More Information
SKU Code TMN B 008
Weight in Kg 0.040000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:Pavazha Malli - பவழ மல்லி

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran