Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

புரட்சித் துறவி - Puratchi Thuravi - Purachi Turavi

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Alnce B 386
₹60.00

மொழிபெயர்க்கப்பட்ட புதினம் / நாவல். 

140 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: 2004; 
மூன்றாம் பதிப்பு: 2013.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் புரட்சித் துறவி, ரா.கி.ரங்கராஜன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 
 
முன்னுரை:
 
கையில் ஒரு புத்தகம் இல்லாமல் அறிஞர் அண்ணாவைப் பார்க்க முடியாது என்று சொல்வார்கள். அது உண்மைதான் . எழுதாத நேரங்களில், மேடை ஏறாத நேரங்களில் ஏதாவது ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருப்பது அவர் வழக்கம். 
 
உயிருக்குப் போராடிக்கொண்டு, மருத்துவமனையில் பருத்திருந்த சமயம்கூட, ஏதோ ஒரு நாவல் படித்துக் கொண்டிருக்கிறார் என்று க.ராசாராம் சொன்னதாக நிருபர் பால்யூ ஒருமுறை தெரிவித்ததும், அது என்ன புத்தகம் என்று தெரிந்து வரும்படி சொன்னார் குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.
 
மேரி கொரெல்லி என்ற நாவலாசிரியை எழுதிய Master Christian என்பதுதான் அந்த நாவல் எனத் தெரிந்தது. அண்ணா காலமான சமயம் அந்தப் புத்தகத்தைக் கடையில் வாங்கினார் எஸ்.ஏ.பி. தானும் படித்துவிட்டு, என்னையும் படிக்கச் சொன்னார். பெரிய நாவலாக இருந்த அதை அப்படியே மொழி பெயர்க்க வேண்டாமென்றும் சுருக்கமாக எழுதுமாறும் என்னைப் பணித்தார். 'அண்ணா கடைசியாகப் படித்த புத்தகம்' என்ற குறிப்புடன், 'புரட்சித் துறவி' என்ற இந்த நாவலை சுருக்கி, சுமார் 25 வாரங்களுக்கு நான் எழுதினேன்.
 
இதை எழுதிய மேரி கொரெல்லியின் உண்மைப் பெயர் மெரி பெக்கே. விக்டோரியா மகாராணி உட்பட இங்கிலாந்தில் பெரிய மனிதர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் முதலான பலரின் நட்பையும், பாராட்டையும் பெற்றவர். ஷேக்ஸ்பியரின் பிறந்த ஊரை அழகு படுத்தியவர். கத்தோலிக்க மதத்தில் இருந்த சில குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுவதையே தன் எழுத்தின் லட்சியமாக கொண்டிருந்தார். 'புரட்சித் துறவி'யும் அவரது கருத்தை வரையுறுத்துவதாகவே அமைந்துள்ளது. கதை தெரிஞ்சும் வருகிற சிறுவன் மானுவேல் உண்மையில் ஏசுநாதர்தான் என்பதுபோல அவர் எழுதியிருந்ததைப் பலர் ஆட்சேபித்தார்கள், எதிர்த்தார்கள். பொதுவாகவே ஆண்களை வெறுக்கும் மனோபாவம் கொண்டவர் இவர். எந்த ஆணாவது தொட்டால் சீறிவிடுவார்.
 
இந்த நாவலைச் சுருக்கமாக எழுதியதாலும், அப்போது மொழிபெயர்ப்பு விஷயத்தில் எனக்கு அனுபவம் போதாமல் இருந்ததாலும் 'புரட்சித் துறவி'யைச் சிறப்பாகச் செய்திருக்கிறேன் என்று கூற முடியாது. பாத்திரங்களும் அவர்களின் பெயர்களும் அதிகம். எனினும் வாசகர்கள் இதை ஆர்வத்துடன் படித்துப் பாராட்டினார்கள்.
 
நல்ல முறையில் இதைப்  புத்தகமாகக் கொண்டு வந்துள்ள அல்லயன்ஸ் நிறுவனத்தாருக்கு நன்றி.
 
ரா.கி.ரங்கராஜன்.
 
எழுத்தாளர் பற்றி : ரா. கி. ரங்கராஜன் (அக்டோபர், 5, 1927 - ஆகஸ்ட் 18, 2012) ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் இதழாளர். வரலாற்றுப் புதினங்கள், குற்றக் கதைகள், கட்டுரைகள், வேடிக்கை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், குறும்புக் கதைகள், நையாண்டிக் கவிதைகள் எனப் பல பாணிகளில் எழுதியுள்ளார். இவர் 1500-க்கும் மேற்பட்ட கதைகளையும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவற்றுள் பல குமுதம் ஆனந்த விகடன் முதலான இதழ்களில் தொடர்களாக வெளிவந்தன. இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படங்களாக வெளிவந்தன. பல படைப்புகள் சின்னத் திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் அண்ணா நகர் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைத்தொடர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை “நாலு மூலை” என்ற பெயரில் நூலாக வெளியாகியுள்ளன. ”அவன்” என்ற பெயரில் தன் வரலாற்றையும் எழுதியுள்ளார். இளம் எழுத்தாளர்களுக்குக் கதை எழுதும் நுணுக்கங்களைக் கற்றுத் தரும் எப்படிக் கதை எழுதுவது? என்ற வகுப்பினையும் தான் ஒருவராகவே நடத்தி வந்தார்.
More Information
SKU Code Alnce B 386
Weight in Kg 0.460000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name ரா.கி.ரங்கராஜன் - R.K.Rangarajan
Publisher Name அல்லயன்ஸ் - The Alliance Company
Write Your Own Review
You're reviewing:புரட்சித் துறவி - Puratchi Thuravi - Purachi Turavi

Similar Category Products





Other Books by ரா.கி.ரங்கராஜன் - R.K.Rangarajan