சனிப் பெயர்ச்சியும் கைரேகை விஞ்ஞானமும் - காஞ்சி எஸ். சண்முகம்.
சனி பகவானுக்கு காணிக்கை:-
மனித வாழ்க்கை..
இன்பமும் துன்பமும், நன்மையும் தீமையும்
இருளும் ஒளியும், உயர்வும் தாழ்வும்
கொண்டது என்பதை உணர்த்த
நம்மை அறிந்து வாழ
நீதி மானாய் சஞ்சரிக்கும்
சனி பகவானின் பாத கமலங்களுக்கு
காணிக்கையாக...
என்னுரை :-
குரு வாழ்க! குருவே துணை!!
பேரன்புடையீர் வணக்கம்.
'சனிப் பெயர்ச்சியும் கைரேகை விஞ்ஞானமும்' என்ற இந்த நூலை எழுத எண்ணத்தை அளித்த சனி பகவானுக்கும், இறைவனுக்கும் முதற்கண் நன்றி கூறி, இந்நூலை எழுதியதற்கான நோக்கத்தையும் கூற விரும்புகிறேன்.
என்னிடம் ஜாதகம் பார்க்க வருபவர்கள் பெரும்பாலானோர் கேட்கும் முக்கிய கேள்விகளில் ஒன்றாக இருப்பது, ' எனக்கு இப்போ ஏழரை சனியா? கண்ட சனியா? அஷ்டமத்து சனியா? இதனால் தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பாதிப்பு ஏற்படுமா? திருமணம், குழந்தை பாக்கியம், இல்லற வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுமா? உடல் நலம் பாதிக்குமா?' என்று அதிர்ச்சியடைந்து அச்சமடைகின்றனர். சிலர் ஒருவித மனச்சோர்வு அடைந்து விடுகின்றனர்.
இன்னும் சிலரோ, ' ஏற்கனவே என் மகளுக்கு திருமணம் தாமதம். இப்ப சனி சஞ்சாரம் சரியில்லை. 7ல் சஞ்சாரம் செய்கிறார். இன்னும் இரண்டரை ஆண்டுகள் திருமணம் தள்ளி போகும் என்கிறார்கள். எப்போதுதான் நடைபெறும்? ஜாதகத்துடன் கைரேகையும் பார்த்து திருமண காலத்தைச் சொல்லுங்கள்' என்கிறார்கள்.
இக்காலத்தில் ஏற்படுகின்ற அனைத்தும் துன்பங்களுக்கும் சனி பகவானே காரணம் என்பது போன்ற எண்ணத்துடனே வாழ்கின்றனர்.
இவ்வாறு மக்களிடையே எழும் சனி பாகவனின் சஞ்சாரம் குறித்த அச்சத்தை என்னால் இயன்ற அளவு குறைக்க வேண்டும். அவரவர் ராசிக்கு சஞ்சாரம் செய்யும் சனி பகவான் அர்த்தாஷ்டம சனியாகவோ, ஏழரை சனியாகவோ, கண்ட சனியாகவோ, அஷ்டமத்து சனி என எதுவாக இருந்தாலும் இந்த சனி பகவானின் சஞ்சார காலத்திலும் கடுமையாக உழைத்து உயர்வினை அடைய இயலும். சாதனைகள் பல செய்ய முடியும்.
நோயின்றி ஆரோக்கியமாக இருக்க இயலும். குடும்பத்திலும், அலுவலகத்திலும், உற்றார் உறவினருடன் சமுதாயத்திலும் இயல்பாக மகிழ்ச்சியுடன் இருக்க இயலும் என்பதைக் தெளிவு படுத்த கைரேகையுடன் ஒப்பீடு செய்து ஒரு நிரந்தர ஆய்வு நூலினை எழுத வேண்டும் என்ற எண்ணம் நீண்ட காலம் என்னுள் இருந்தது. அந்த உயர்ந்த நோக்கில் எழுதப்பட்டதுதான் இந்த 'சனிப் பெயர்ச்சியும் கைரேகை விஞ்ஞானமும்' என்ற நூல்.
இந்த நூலினை எழுத எண்ணத்தை தூண்டிய சனி பகவானுக்கும், இறைவனுக்கும் மீண்டும் நன்றியைக் கூறி கொள்கிறேன். இந்த நூல் தற்போது மாற இருக்கும் சனிப்பெயர்ச்சிக்கு மட்டும் பார்த்து வைத்து விடுகின்ற தற்காலிக நூல் அல்ல. சனிப் பெயர்ச்சினை கைரேகையுடன் ஒப்பீடு செய்து சனிப்பெயர்ச்சியினால் ஏற்படும் நன்மை தீமைகளைத் தெளிவுபடுத்திக் கொள்கிற நிரந்தர நூல். இந்நூலினை படித்து நீங்கள் பயன் பெறுவதுடன் உங்களை சார்ந்திருப்போரும் பயன் அடைந்து மகிழ்ச்சியுடனும், மன அமைதியுடனும் வாழ வேண்டும் என்று கூறி நிறைவு செய்கிறேன்.
இந்நூல் வெளியாவதற்கு உதவியாக இருந்த அனைத்து அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும், அச்சிட்டு வழங்கிய சிவகாமி பிரின்டோக்ராபிக்ஸ் உரிமையாளருக்கும் எனது நன்றி.
வாழ்க ஜோதிடக்கலை ! வாழ்க வளமுடன் !!
- காஞ்சி எஸ். சண்முகம்.
பொருளடக்கம்:-
1. சனிப் பெயர்ச்சியும் கைரேகை விஞ்ஞானமும்
(i) சாதனை நாயகன் சனி பகவான் - 11
(ii) சனி பகவான் ஆதிக்கம் பெற்றவர் யார்? - 13
(iii) சனி பகவானின் சஞ்சார காலம் - 16
2. முக்கிய ரேகைகளும் சனி பகவான் சஞ்சாரமும்
(i) ஆயுள் ரேகையும் சனி சஞ்சாரமும் - 18
உண்மைச் சம்பவம் - 1
(ii) புத்தி ரேகையும் சனி சஞ்சாரமும் - 31
உண்மைச் சம்பவம் - 2
(iii) இருதய ரேகையும் சனி சஞ்சாரமும் - 42
உண்மைச் சம்பவம் - 3
(iv) விதி ரேகையும் சனி சஞ்சாரமும் - 50
உண்மைச் சம்பவம் - 4,5
(v) சூரிய ரேகையும் சனி சஞ்சாரமும் - 64
உண்மைச் சம்பவம் - 6
3. 12 ராசிகளுக்கான சனி சஞ்சாரகால பொதுப் பலன்கள்
(i) மேஷ ராசி பொதுப்பலன்கள் - 77
(ii) ரிஷப ராசி பொதுப்பலன்கள் - 82
(iii) மிதுன ராசி பொதுப்பலன்கள் - 87
(iv) கடக ராசி பொதுப்பலன்கள் - 93
(v) சிம்ம ராசி பொதுப்பலன்கள் - 98
உண்மைச் சம்பவம் : 7,8
(vi) கன்னி ராசி பொதுப்பலன்கள் - 113
உண்மைச் சம்பவம் : 9
(vii) துலா ராசி பொதுப்பலன்கள் - 121
உண்மைச் சம்பவம் : 10
(viii) விருச்சிக ராசி பொதுப்பலன்கள் - 132
(ix) தனுசு ராசி பொதுப்பலன்கள் - 136
(x) மகர ராசி பொதுப்பலன்கள் - 141
(xi) கும்ப ராசி பொதுப்பலன்கள் - 145
(xii) மீன ராசி பொதுப்பலன்கள் - 149
4. அஷ்டமத்து சனி சஞ்சார காலம் பாதிப்பை ஏற்படுத்துமா ? - 152
உண்மைச் சம்பவம் : 11