சேய்த் தொண்டர்கள் - முருகன் அடியார்கள் வரலாறு - பனையபுரம் அதியமான் - Sei Thondargal
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
Availability: In stock
SKU:
VAN B 484
₹350.00
ஆன்மீகம் நூல்.
பேப்பர்பேக்;
446 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதல் பதிப்பு: திருவள்ளுவர் ஆண்டு 2018, செப்டம்பர் 2017
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are Inclusive of Tax.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் சேய்த் தொண்டர்கள் - முருகன் அடியார்கள் வரலாறு, பனையபுரம் அதியமான் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
என்னுரை:
இந்நூல் தினத்தந்தி நாளிதழின் ஆன்மிக மலரில் 77 வாரங்கள் வெற்றிகரமாக வெளிவந்து, ஆன்மிக உலகில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.
சிவபெருமானுக்கு தொண்டு செய்து பெருமை சேர்க்கும் நாயன்மார்களைப் போல, முருகப்பெருமானுக்கும் எண்ணற்ற அடியார்கள் தொண்டு செய்து பெருமை சேர்த்துள்ளனர். இவர்கள் அனைவருக்குமே முருகப்பெருமான் காட்சிதந்து, அருள்புரிந்துள்ளான். இவர்கள் கடந்த காலத்திலும் இருந்தார்கள், நிகழ் காலத்திலும் இருக்கிறார்கள், இனி எதிர்காலத்திலும் இருப்பார்கள்.
என்றாலும், நடுநிலையோடு மிகைப்படுத்தாமல் எழுதும் நோக்கில் கடந்த கால அடியார்களை மட்டுமே நான் தேர்வு செய்து தொகுத்துள்ளேன். இதில் அகத்தியர், அருணகிரிநாதர், வடலூர் இராமலிங்க சுவாமிகள் என வெளிச்சத்திற்கு வந்தவர்கள் மட்டுமன்றி, முருகப் பெருமானின் பேரருள் பெற்று, குடத்தில் இட்ட விளக்காக மறைந்திருந்த மேலும் அருளாளர்கள் பலரைக் குன்றிலிட்ட விளக்காக ஒளிவீச என் எழுத்து உதவியிருக்கும் என்றே நம்புகின்றேன்.
இந்தத் தொடருக்கு அடித்தளமாக அமைந்தது சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு செய்யுள் நூலாக வெளிவந்த தேனூர் வரகவி சொக்கலிங்கனார் அவர்கள் எழுதிய சேய்த்தொண்டர் புராணமாகும்.
இந்நூலில் விவரங்கள் மிகச் சுருக்கமாக இருந்தன. என்றாலும், அதையே கருவாகக் கொண்டு உ.வே.சா. நூலகம், மறைமலை அடிகள் நூலகம், கன்னிமரா நூலகம், கீழ்த்திசை நாடுகள் ஓலைச்சுவடிகள் நூலகம், மயிலம் பொம்மபுர ஆதீனப் புலவர் கல்லூரி நூலகம் எனப் பல்வேரு நூலகங்களில் இருந்த பழைமையான நூல்களை எல்லாம் கண்டறிந்து, சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் ஆய்வு மாணவனைப் போல செயல்பட்டு, சேய்த்தொண்டர்கள் விவரத்தினை ஆதார பூர்வமாகச் சேகரித்து இயன்றவரை கட்டுரையாக வழங்கியுள்ளேன்.
உள்ளே
01.அகத்தியர் - புராணகாலம்;
02.முசுகுந்தன் - புராணகாலம்;
03.போகர் - புராணகாலம்;
04.சிகண்டி முனிவர் - புராணகாலம்;
05.நாகனார் - கடைச்சங்ககாலம்;
06.நக்கீரர் - சங்ககாலம்;
07.ஒளவையார் - சங்ககாலம்;
08.சேந்தனார் - பத்தாம் நூற்றாண்டு;
09.முருகம்மையார் - 15ஆம் நூற்றாண்டு;
10.பொய்யாமொழிப்புலவர் - சங்ககாலம்;
11.கச்சியப்ப சிவாச்சாரியார் - 12ஆம் நூற்றாண்டு;
12.அருணகிரிநாதர் - 14, 15ஆம் நூற்றாண்டு;
13.குமரகுருபரர் - 17ஆம் நூற்றாண்டு;
14.நல்லியக்கோடன் - கடைச்சங்ககாலம்;
15.சேறைக் கவிராயர் - 16ஆம் நூற்றாண்டு;
16.பகழிக்கூத்தர் - 18ஆம் நூற்றாண்டு;
17.சுவனகுத்தன் - புராணகாலம்;
18.சம்பந்த சரணாலயர் - 17ஆம் நூற்றாண்டு;
19.கந்தப்ப முனிவர் - 18ஆம் நூற்றாண்டு;
20.கச்சியப்ப முனிவர் - 18ஆம் நூற்றாண்டு;
21.குணசீலர் - 18ஆம் நூற்றாண்டு;
22.மயிலம் பாலசித்தர் - புராணகாலம்;
23.சிவஞான பாலய சுவாமிகள் - 17ஆம் நூற்றாண்டு;
24.கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள் - 17ஆம் நூற்றாண்டு;
25.ஞானவரோதயர் - 14, 15ஆம் நூற்றாண்டு;
26.வென்றிமாலை ஐயர் - 18ஆம் நூற்றாண்டு;
27.திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் - 17ஆம் நூற்றாண்டு;
28.கோனேரியப்பர் - 12ஆம் நூற்றாண்டு;
29.மாதவ சுப்ரமணியர் - 18ஆம் நூற்றாண்டு;
30.நிரம்ப அழகிய தேசிகர் - 16ஆம் நூற்றாண்டு;
31.முத்தாலங்குறிச்சி கந்தசாமிப்புலவர் - 19ஆம் நூற்றாண்டு;
32.பாலசுப்பிரமணியக் கவிராயர் - 17ஆம் நூற்றாண்டு;
33.சாமிநாத தேசிகர் - 17ஆம் நூற்றாண்டு;
34.வைத்தியநாத தேசிகர் - 17ஆம் நூற்றாண்டு;
35.சிற்றம்பல நாடிகள் - 18ஆம் நூற்றாண்டு;
36.அழகு முத்துப்புலவர் - 18ஆம் நூற்றாண்டு;
37.கந்தசஷ்டிக் கவசம் பாலதேவராய சுவாமிகள் - 17, 18ஆம் நூற்றாண்டு;
38.வடலூர் இராமலிங்க சுவாமிகள் - 19ஆம் நூற்றாண்டு;
39.கவிகுஞ்சர பாரதி - 19ஆம் நூற்றாண்டு;
40.மாம்பழக் கவிராயர் - 19ஆம் நூற்றாண்டு;
41.வண்ணச்சரம் தண்டபாணி சுவாமிகள் - 19ஆம் நூற்றாண்டு;
42.பாம்பன் சுவாமிகள் - 19, 20ஆம் நூற்றாண்டு;
43.காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்டியார் - 19ஆம் நூற்றாண்டு;
44.அந்தகக்கவி வீரராகவ முதலியார் - 17ஆம் நூற்றாண்டு;
45.திருஞானசம்பந்த தேசிகர் - 17ஆம் நூற்றாண்டு;
46.சின்னப்பர் - 18ஆம் நூற்றாண்டு;
47.கலிசை சேவகனார் - 15ஆம் நூற்றாண்டு;
48.முத்தப்பர் - 19ஆம் நூற்றாண்டு;
49.செல்லப்பர் - 19, 20ஆம் நூற்றாண்டு;
50.தேனூர் சொக்கலிங்கம் பிள்ளை - 20ஆம் நூற்றாண்டு;
51.திருபுகழ்ச் சுப்பிரமணியர் - 19, 20ஆம் நூற்றாண்டு;
52.வடபழநிச் சித்தர்கள் - 19, 20ஆம் நூற்றாண்டு;
53.வள்ளிமலை சுவாமிகள் - 19, 20ஆம் நூற்றாண்டு;
54.கந்தகோட்டம் மாரிச்செட்டியார் - 17ஆம் நூற்றாண்டு;
55.வடமலையப்பப் பிள்ளையன் - 17ஆம் நூற்றாண்டு;
56.ஆழ்வார் திருநகரி இருவைணவர் - 18ஆம் நூற்றாண்டு;
57.குலசை ஞானியார் - 18ஆம் நூற்றாண்டு;
58.காஞ்சிபுரம் சிதம்பர முனிவர் - 19ஆம் நூற்றாண்டு;
59.மதுரை திருப்புகழ் சாமி ஐயர் - 19, 20ஆம் நூற்றாண்டு;
60.முத்துசுவாமி தீட்சிதர் - 18ஆம் நூற்றாண்டு;
61.கட்டபொம்மு மன்னர்கள் - 18ஆம் நூற்றாண்டு;
62.குமரகிரி கருப்பண்ண சுவாமிகள் - 20ஆம் நூற்றாண்டு;
63.சிரவை ஆதீன இராமானந்த சுவாமிகள் - 20ஆம் நூற்றாண்டு;
64.குறிஞ்சிப்பாடி சுப்புராய சுவாமிகள் - 19ஆம் நூற்றாண்டு;
65.விராலிமலை கருப்ப முத்துப்பிள்ளை - 19ஆம் நூற்றாண்டு;
66.சீர்காழி கதிர்காம சுவாமிகள் - 19, 20ஆம் நூற்றாண்டு;
67.குமரமலை அய்யாசாமித் தேவர் - 20ஆம் நூற்றாண்டு;
68.பண்பொழி சிவகாமி அம்மையார் - 18, 19ஆம் நூற்றாண்டு;
69.மீராக்கண்ணுப் புலவர் - 18ஆம் நூற்றாண்டு;
70.கல்லாடர் - சங்ககாலம்;
71.பரிபாடல் ஆசிரியர்கள் - சங்ககாலம்;
72.வளவனூர் குமரபுரி முத்தைய தேசிக சுவாமிகள் - 19ஆம் நூற்றாண்டு;
73.திருமுருக கிருபானந்த வாரியார் - 20ஆம் நூற்றாண்டு;
74.வர வேண்டிய அடியார்கள்;
75.நூலாசிரியர் பற்றி.
புத்தக விமர்சனம்:
முருகனடியார்களின் வாழ்வில் முருகப்பெருமானால் நடத்தப்பற்ற பல சுவையான நிகழ்வுகளையும் முருகனின் பல பெருமைகளையும் சுவையாக தருகிறது இந்நூல்.
'சேய்தொண்டர்கள்' எனும் இந்த நூலில் முருகன் அடியார்கள் வரலாற்றை, தீஞ்சுவை தமிழில் அழகுபட வடித்திருக்கிறார் ஆசிரியர். அகத்தியர், போகர் என புராண காலம் தொடங்கி, நக்கீரர், ஒவ்வையார் என சங்க காலம் நோக்கி நகர்ந்து, சேந்தனார், கச்சியப்ப சிவாச்சாரியார், திருப்போரூர் சிதம்பரம் ஸ்வாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள், கிருபானந்த வாரியார் என பல முருக அடியார்களின் காலம், வாழ்க்கை, ஆன்மமிகத் தொண்டு, அவர்கள் பெற்ற முருகனின் பேரருள் ஆகியவற்றை சுவைபட விளக்கியிருப்பது அருமையிலும் அருமை!
- தினமணி
ஆசிரியர் குறித்து :- ஆன்மீக எழுத்தாளர் பனையபுரம் அதியமான், கலை, இலக்கியம், நேர்காணல் என அமுதசுரபியில் தொடங்கிய எழுத்துப் பயணம் தினமணி, தினத்தந்தி, தினகரன் எனப் பல்வேறு முன்னணி இதழ்களிலும் சுமார் 30 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கின்றது. தினத்தந்தியில் வெளிவந்த சேய்த்தொண்டர்கள் தொடர் இவரின் எழுத்துப் பயணத்தில் ஒரு மைல்கல்.
வானொலி, தொலைக்காட்சிகளில் பல்வேறு பிரிவுகளிலும் எண்ணற்ற நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.
வெளியுலகிற்கு தெரியாத மற்றும் பழுதடைந்த பழம்பெரும் ஆலயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து அவற்றிற்குத் திருப்பணி நடைபெற தன் எழுத்தினைக் கருவியாகப் பயன்படுத்தி வருபவர்.புகழ்ப்பெற்ற பனையபுரத்தின் பனங்காட்டீசுவரர்க் கோயிலின் ஒருபகுதி, தேசிய நெடுஞ்சாலைத்துறையால், சாலை விரிவாக்கத்துக்காகக் கையகப்படுத்தும் நடவடிக்கை 2011இல் எடுக்கப்பட்டபொழுது கிராம மக்களுடன் இணைந்து செய்த முயற்சியால் பனையபுரம் கோயில் காப்பாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
கடினமான செய்திகளையும் எளிய நடையில் எழுதி, அதில் கல்வெட்டுகள், வரலாறு, புவியியல், கட்டடவியல், சிற்பவியல் என அனைத்தையும் உள்ளடக்கி கட்டுரை படைப்பது இவரது தனித்தன்மை. சிறுவயதில் முருகப்பெருமான் மற்றும் வடலூர் இராமலிங்க சுவாமிகளின் அருள் காட்சிகளைக் காணும் பேரு \பெற்ற அருளாளர்.
ஜெர்மனியில் புகழ்பெற்ற ஹம் ஸ்ரீகாமாட்சி அம்பாள் ஆலய பிரம்மோற்சவ வெள்ளி விழாவில் ஆன்மிகப் பணிக்காகக் கௌரவிக்கப்பட்டவர்.
புதுச்சேரியில் பிறந்து, பனையபுரத்தில் வளர்ந்து, சென்னையில் வாழ்ந்து வருகின்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். வங்கியின் பொதுமேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அவர் எழுதிய புத்தகங்கள் - தெய்வமணம் கமழும் திருத்தலங்கள், திருப்பம் தரும் திருக்கோயில்கள், ஒப்பற்ற வாழ்வு தரும் உன்னத ஆலயங்கள், சேய்த் தொண்டர்கள் வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.
SKU Code | VAN B 484 |
---|---|
Weight in Kg | 0.690000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
ISBN No. | 9788193295878 |
Author Name | பனையபுரம் அதியமான் - Panaiyapuram Adhiyamaan |
Publisher Name | வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹190.00
Special Price
₹170.00
Save: 20.00 Discount: 10.53%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹140.00
Save: 20.00 Discount: 12.50%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%