Details
"எனக்கு உள்ளே வந்துவிட்டாய் கிருஷ்ணா. என் மனம் முழுவதும் நிரம்பி விட்டாய் கிருஷ்ணா. நீ நாணாகிவிட்டாய். நான் நீயாகிவிட்டோம். இந்த கலத்தில் புரிகிறது கிருஷ்ணா. தயவு செய்து ஒரே ஒரு விண்ணப்பம் சொல்கிறேன் கேள்."
"என்னால் இனி பிரிவினையை தாங்க முடியாது. எனக்குள்ளே திடமாக மாறாது நீங்காது இருக்க வேண்டும். என்னை விட்டு ஒரு கணமும் அகலாது இருக்க வேண்டும்."
"ஆமாம் நான் இருப்பேன். நேசிப்பது என்பது மனதினுடைய செயல். மனதை நேசிப்புக்கு தூண்ட உடம்பு முயற்சிக்கிறது. வெறும் உடம்பை மட்டும் நினைத்துக் கொண்டிருந்தால் உடம்பினுடைய செயல் முடிந்ததம் நேசிப்பது காணாது போய்விடும்."
"யார்யாரெல்லாம் கிருஷ்ணரை தன்னுள் வரிக்கிறார்களோ, யாரெல்லாம் கிருஷ்ணரை தன்னுடைய பிராண ஸ்நேகிதனாக நினைக்கின்றார்களோ, யாரெல்லாம் கிருஷ்ணரை தன்னுடைய எஜமானனாக நினைக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் கிருஷ்ண ப்ரேமை வரும். கிருஷ்ணருடைய ஞானம் புரியும். அவர் சொல்வது விளங்கும்.
"மணி விடியற்காலை 3.30. என் வீடு உறங்கிக் கொண்டிருக்கிறது. நான் கிருஷ்ணாவதாரம் எழுதிக் கொண்டிருக்கிறேன். சுதாமா கிருஷ்ணர் உரையாடல். என்னை மீறி எழுதுகிறேன். நான் சுதாமாவாய் ஶ்ரீ கிருஷணராய் மாறி மாறி சிந்திக்கிறேன். சத்யம் நோக்கி நகர்கிறேன்.
ஜனம் அழும். படித்து விட்டு கதறும். இங்கு பாலகுமாரன் இல்லை. சத்யம் தாக்கும். தாங்காது கதறல் வரும். நான் கருவி. சத்யம் மிக பிரம்மாண்டம். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. வார்த்தைகள் வெறும் வாசனை காட்டும்.
நான் கருவி.
அழுதும் சிரித்தும் ஒரு பித்தான நிலையில் இருக்கிறேன். பாம்பின் கால் பாம்பறியும்.
-April 9 ,2014 பாலகுமாரன்
ஶ்ரீ கிருஷ்ண அவதாரம் படியுங்கள்.. அருள் பெறுங்கள் ."