Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

சுந்தரகாண்டம் - Suntharakaandam - Sundarakandam

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 156
₹85.00
ஆன்மீக புத்தகம்/ இராமாயணம்;  
பக்கம் : 80; 
முதற் பதிப்பு வெளியீட்டு ஆண்டு : 2002; 
மூன்றாம் பதிப்பு வெளியீட்டு ஆண்டு : 2019.
 

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

வாயுமைந்தன் மலையின் உச்சி ஏறி சீதையை தேட கிளம்புகிறார். அவர் வழியில் சந்திக்கும் சிக்கல்களும், அதை முறியடிக்கும் அவரது சமயோசித புத்தியும், அவர் இலங்கைக்குள் சென்று சீதையை சந்தித்து ராமனின் வேதனையை சொல்லி அன்னையின் இலச்சினையை பெற்று ராமனிடம் விரைந்து கண்டேன் சீதையை என்று சொல்லும்வரை இருக்கும் படலம்.
 
என்னுரை: 
உலகம் தன்னுள் பிறந்த உத்தமர்களைப் பற்றி இடையறாது விதம் விதமாய் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த உத்தமர்களின் பின்னால் உலக மக்கள் போக வேண்டும் என்பது மட்டும் காரணமல்ல. அந்த உத்தமர்களை பார்த்து இன்னும் உத்தமர்கள் வர வேண்டும் என்பதும் காரணம். ஆலமரம் விழுது விட்டு தோன்றுவது போலவாம் இது. இது கருணையைக் கொண்டு கருணையை ஊற வைத்தல்.
 
ஸ்ரீ ராமன் உத்தமன். ஸ்ரீராம காவியம் உத்தமமானது. உங்களுக்குள் உத்தம குணங்களை தோற்றுவிக்கக்கூடியது. உத்தமர்களுக்கு வழி காட்டக்கூடியது. உருவாக்கக் கூடியது.
 
தன்னைப் பற்றி தெளிவாகச் சிந்தித்து தன் குறைகளை தெரிந்து, புரிந்து யோசிப்பவர்கள் ஸ்ரீராமனைக் கொண்டாடுவார்கள் என்பதில் ஐயமேயில்லை. 
 
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமான பெரும் சக்தி தர்மத்திலிருந்து பிறழவில்லை. இன்னா செய்தாரையும் கருணையோடு நினைக்கின்ற ஒரு மனப்பக்குவம் ஸ்ரீராமன் என்கிற மானுடனுக்கு இருந்தது.
 
அந்த மானுடன் கதையின் ஒரு பகுதி சுந்தரகாண்டம்.
 
மனைவியை இழந்து தனிமையில் இருந்த ஸ்ரீராமனுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்த கால கட்டம் இது. நிச்சயம் ஜெயிப்போம். இந்தத் துயரம் தற்காலிகம் என்று தெள்ளத் தெளிவாக உணர்ந்த நேரம் இது.
 
வீர பராக்கிரமம் இருப்பினும் அரசகுலத்து அந்தஸ்துகள் இருப்பினும், புத்தி விசாலம் இருப்பினும், ஒரு படையை நிகர்த்த பலமுள்ள உடன்பிறப்பு கூடவே இருப்பினும், விதியின் வலியால் மனைவியை ஸ்ரீராமன் பிரிய நேரிட்டது.
 
மாதர்களை மனதளவிலும் தீண்டாத பிரம்மச்சாரி கடும் ஒழுக்க சிந்தனை உடையவரும், புலன்களை அடக்கி ஆண்டு அதன்மீது ஆட்சி செலுத்த வல்லவரும், இணையில்லாத பலம் மிக்கவரும் அதே நேரம் பணிவும், பக்தியும் மிகுந்தவரும், இனிமையாகப் பேசுபவரும், பேச்சில் வல்லமை உடையவரும், சோர்வே இல்லாதவரும், தர்மத்தின் பக்கம் நிற்பவருமான ஸ்ரீ ஆஞ்சநேயரின் துணை ஸ்ரீராமனுக்குத் தேவைப்பட்டது.
 
ஒழுக்கமும், தர்மமும்தான் பொய்மையை வெல்ல மிக உதவி செய்யும் என்பதற்கு இது ஒரு மறைமுக உதாரணம்.
 
வெறும் புஜ வலிமை போதாது.
 
கல்வியும், செல்வமும் கைகொடுக்காது. உங்களுக்கு விதி செய்த விஷயத்திலிருந்து மாற்ற வேண்டுமெனில், அதனால் ஏற்பட்ட சங்கடங்களை தகர்த்து ஜெயிக்க வேண்டுமெனில் ஸ்ரீ ஆஞ்சநேயரின் குணங்கள் உங்களுக்குத் தேவை என்பதை இந்த சுந்தரகாண்டம் மறைமுகமாக உணர்த்துகிறது.
 
மனித மனம் ஒரு வானரம். அதை அடக்கி ஆண்டு ஆட்சி செய்கிற விஷயம் ஹனுமன். அப்படி அடக்கி ஆண்டதை அலட்டாது மிக வினயமாக எங்கு பார்த்தாலும் கைகூப்பி அமைதியாக புன்சிரிப்போடு நிற்கின்ற அமைதி ஹனுமன். தன்னைப் பாராட்டிக் கொள்ளாமல் தன் பலம் எத்தகையது என்று தானே ஆராய்ச்சி செய்யாமல் பலம் இருக்கிறதா, இருந்து விட்டுப் போகட்டும் என்று மிக மிக வினயமாக எங்கு பார்த்தாலும் கைகூப்பி அமைதியாக புன்சிரிப்போடு நிற்கின்ற அமைதி ஹனுமன். தன்னைப் பாராட்டிக் கொள்ளாமல் தன் பலம் எத்தகையது என்று தானே ஆராய்ச்சி செய்யாமல் பலம் இருக்கிறதா, இருந்து விட்டுப் போகட்டும் என்று மிக மிக வினயமாக நின்ற நிறைகுடம் ஹனுமன்.
 
இன்றைய காலகட்டத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அமைதி ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் இருக்கிறது.
 
அலட்டலும், அகம்பாவமுமே வாழ்க்கையாகிப் போன இந்தக் காலத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரின் பராக்கிரமத்தை படிக்கிற பொழுது அந்தப் பிரகிராமத்துக்கு நடுவே தான் எதுவுமில்லை என்று மென்மையாய் உலா வருகிறபொழுது நம் மனம் நெகிழ்ந்து போகும்.
 
சுந்தரகாண்டம் ஒரு மனுடனுக்கு ஏற்பட்ட துக்கத்தை மட்டும் சொல்லித் தரவில்லை. அதற்கு ஏற்பட்ட விடிவு நேரத்தையும் விவரிக்கிறது. மிகப்பெரிய நம்பிக்கை ஊட்டுகிறது. திரும்பத் திரும்ப படிக்கிறபொழுது ஸ்ரீ ஆஞ்சநேயரின் குணாதிசயங்கள் உங்கள் உள்ளுக்குள்ள தைத்து உங்களை இன்னும் அமைதிப்படுத்தும். நீங்கள் வெற்றி பெற்றாலும் புன்சிரிப்போடு நன்றி என்று சொல்லி அமைதியாக இருக்க உங்களுக்கு வழிகாட்டும்.
 
இவ்வுலகில் வெற்றி பெறுவது எளிது. அது கடவுள் அருள். அதை தக்கவைத்துக் கொள்ளத்தான் அமைதி தேவை. உங்கள் எல்லோருக்குள்ளும் அமைதி பரவட்டும் என்று ஸ்ரீராமகாவியத்தின் ஒரு பகுதியான சுந்தர காண்டத்தை இங்கு துவங்குகிறேன்.
 
ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய் ஜெய் ராம் !
 
ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.
 
பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.
More Information
SKU Code TMN B 156
Weight in Kg 0.010000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:சுந்தரகாண்டம் - Suntharakaandam - Sundarakandam

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran