Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: Out of stock
SKU:
Alnce B 450
₹65.00
நாடகங்கள்.
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் தாகூரின் நகைச்சுவை நாடகங்கள், த.நா.குமாரசாமி அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
எழுத்தாளர் பற்றி : இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவர் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரேயாவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும். தாகூரின் படைப்புகள் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. இருந்த போதிலும் இவரின் படைப்புகளில் இருந்த நேர்த்தியான உரைநடையும், கவிதையின் மாயத் தன்மையும் வங்காளத்திற்கு மட்டுமல்லாது அனைத்துத் தரப்பிற்கும் பொருந்தக் கூடியதாக இருந்தது. சில நேரங்களில் இவர் வங்காளக் கவி எனவும் அறியப்படுகிறார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன என்ற பாடலை இயற்றியவரும் இவரேயாவார். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவரது நூல்களில் சிலவற்றை த. நா. குமாரசாமி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
மொழிபெயர்ப்பாளர் பற்றி: தண்டலம் நாராயண சாசுதிரி குமாரசாமி என்னும் த.நா.குமாரசாமி (T.N.Kumarasamay) வங்க மொழியைப் பயின்று அம்மொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்தவர். எழுத்தாளர். இதழாளர். தன் அண்ணன் த. நா. சேனாதிபதியின் தாக்கத்தால் இளம்பருவத்திலே இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டார். கலைமகள், மணிக்கொடி, ஆனந்த விகடன் ஆகியவை உள்ளிட்ட இதழ்களில் கதைகள் எழுதினார். கலைமகள் இதழில் கி.வா.ஜகந்நாதன், கா.ஸ்ரீ.ஸ்ரீ ஆகியோரோடு பணியாற்றினார். 1940ஆம் ஆண்டில் உலகம் சுற்றும் தமிழன் எனப் புகழப்பட்ட அ. கருப்பண் செட்டியார் (ஏ. கே. செட்டியார்) எடுத்த மகாத்மாகாந்தி என்னும் ஆவணப்படத்திற்கு இவர் உரையாடல் எழுதினார். பங்கிம் சந்திர சட்டர்ஜி, இரவீந்திரநாத் தாகூர், சரத் சந்திரர், தாராசங்கர் பந்தோபாத்தியாய், நேதாசி சுபாசு சந்திர போசு உட்பட பல வங்க மொழி எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
இவருடைய படைப்புகளைத் தமிழக அரசு 2006-07ஆம் நிதியாண்டில் நாட்டுடைமை ஆக்கியிருக்கிறது.
நூல்கள்:-
இவருடைய படைப்புகளும் மொழிபெயர்ப்புகளும் பல நூல்களாக வெளிவந்துள்ளன. அவற்றுள் சில:
சிறுகதைத் தொகுதிகள்:-
கன்யாகுமாரி;
குழந்தை மனம்;
சக்தி வேல்;
தேவகி;
மோகினி;
பிள்ளைவரம்;
போகும் வழியில்;
வஸந்தா;
கதைக்கொடி;
அன்னபூரணி;
கதைக் கோவை-3;
கதைக் கோவை-4;
இக்கரையும் அக்கரையும்;
நீலாம்பரி;
சந்திரகிரகணம்;
நாவல்கள்;
ராஜகுமாரி விபா;
சந்திரிகா;
இல்லொளி;
மனைவி;
உடைந்தவளையல்;
ஶ்ரீகண்டனின் புனர்ஜன்மம்;
தீனதயாளு;
மிருணாளினி;
இந்திரா;
தேவதாஸ்;
ஸெளதாமினி;
லலிதா;
கானல் நீர்;
அன்பின் எல்லை;
ஒட்டுச்செடி;
வீட்டுப்புறா.
மொழிபெயர்ப்பு நூல்கள்:-
ஜாவா – ரவீந்திரநாத் தாகூர்;
விஷவிருஷம் – பக்கிம் சந்திரர்;
இளைஞனின் கனவு – நேதாஜி சுபாஸ்சந்திர போசு;
ஆரோக்கிய நிகேதனம் - தாராசங்கர் பந்தோபாத்தியாய்;
பொம்மலாடம் (புதுல் நாச்சார் கி இதிகதா வங்காளி . மாணிக் பந்தோபாத்யாய)
வினோதினி (இரபீந்திரநாத் தாகூர்).
த.நா. குமாரசுவாமியின் இலக்கியப் பணிகளில் மிகவும் முக்கிய இடத்தை வகிப்பது அவருடைய மொழிப்பெயர்ப்பு பணியாகும். 1930களில் தொடங்கிய அவரது மொழிபெயர்ப்புப் பணி 1980 வரை 50 ஆண்டு காலம் தொடர்ந்தது. இவரது தம்பி த. நா. சேனாபதியும் இவரைப் போன்றே வங்க மொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்தவர் ஆவார்.
வங்க இலக்கியத்தில் முன்னோடிகளாக விளங்கிய சரத் சந்திரர், பங்கிம் சந்திர சட்டர்ஜி, இரவீந்திரநாத் தாகூர், தாராசங்கர் பானர்ஜி முதலியவர்களின் நாவல்களையும், சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
இரவீந்திரநாத் தாகூரின் புயல், சதுரங்கம், ராஜகுமாரி விபா, ராஜரிஷி, கோரா, பூந்தோட்டம், இரு சகோதரிகள், லாவண்யா, சிதைந்த கூடு, மூவர், விநோதினி முதலிய புதினங்களையும், காரும் கதிரும், கல்லின் வேட்கை, மானபங்கம், போஸ்ட் மாஸ்டர், பத்தினிப் பெண், நெற்றிப் பொட்டு, வெற்றி முதலிய சிறுகதைகளையும், மகுடம், புலைச்சி முதலிய நாடகங்களையும், தாகூர் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளையும், தாகூர் கவிதைகளையும், பயணக் கட்டுரைகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
பங்கிம் சந்திரரின் விஷ விருட்சம், ஆனந்தமடம், கிருஷ்ண காந்தன் உயில், மாதங்கினி, கபால குண்டலா முதலிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
சரத் சந்திரரின் பைரவி, அமூல்யன், சௌதாமினி, மருமகள் முதலிய நூல்களையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
கிழக்கோடும் நதி எனும் சீன மொழி நாவலை ஆங்கிலத்திலிருந்தும், துர்லக் எனும் செக்கோஸ்லோவாகிய மொழிக் கதையை ஆங்கிலத்திலிருந்தும், காதலர் எனும் பர்மிய மொழிக் கதையையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 1962ஆம் ஆண்டில் தாகூர் அறிஞர் எனச் சிறப்பிக்கப்பட்டார். அதனால் சோவியத் ரஷ்யாவிற்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றார். நாட்டுப்பற்றுடன், சமுதாயத்தின் மீதும் பற்று கொண்ட குமாரசுவாமி, சென்னை அருகே பாடி எனும் கிராமத்தில் நலிந்தவர்களுக்காக, தனது சொந்த நிலத்திலிருந்து ஒரு ஏக்கர் நிலத்தை சாதி கலவரத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த ஆதிதிராவிட மக்களுக்கு இலவசமாக வழங்கினார். பாடி கிராம மக்கள் த.நா. குமாரசுவாமியை காந்தி ஐயர் என்று போற்றினர்.
| SKU Code | Alnce B 450 |
|---|---|
| Weight in Kg | 0.460000 |
| Dispatch Period in Days | 3 |
| Brand | Bookwomb |
| Author Name | இரவீந்திரநாத் தாகூர் Rabindranath Tagore. தமிழ் மொழியாக்கம் த.நா.குமாரசாமி - T.N.Kumarasamy |
| Publisher Name | அல்லயன்ஸ் - The Alliance Company |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%


























