Thamizh Ezhuthu Seeramaippu (Urainadai Prose) by Dr.V C Kuzhanthaisamy தமிழ் எழுத்துச் சீரமைப்பு (உரைநடை) - Dr. வா.செ. குழந்தைசாமி
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: In stock
SKU:
Bharti B 64
₹15.00
முதல் பதிப்பு: மார்ச் 1990;
மூன்றாம் பதிப்பு: ஜூலை 2000;
76 பக்கங்கள்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are Inclusive of Tax.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
முன்னுரை :
திரு. சி. சுப்ரமணியம்
தமிழ் எழுத்துச் சீரமைப்பு தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் டாக்டர் வா. செ. குழந்தைசாமி அவர்கள் விளக்கமாக இந்நூலைத் தமிழ் மக்களுக்குச் சமர்ப்பிக்க முன்வந்துள்ளார்.
இன்றைய எழுத்துச் சீரமைப்பு இயக்கத்தின் நோக்கம் புரட்சிகரமான மாறுதல்களைத் தமிழ் எழுத்தில் ஏற்படுத்த வேண்டுமென்பதன்று. எல்லோரும் ஒப்புக் கொள்ளக்கூடிய சில மாறுதல்களைச் செய்து, தமிழில் கற்க வேண்டிய வரிவடிவங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அதன் மூலம் தமிழ் கற்பவர்களின் சுமையை குறைப்பதே இயக்கத்தின் நோக்கம் என்பதை நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
இந்த மாற்றங்களைப் பற்றிப் போதிய காலம், போதிய அளவில் விவாதித்தாகி விட்டது. இந்நூலிற் கூறியிருக்கும் சிறிய மாற்றங்களைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை வெகுவாக உருவாகியுள்ளது. ஆகவே இந்த மாற்றங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்குத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனத் தமிழ் மக்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலம் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய பெருமை இன்றைய தமிழக அரசைச் சாரும்.
- சி. சுப்ரமணியம்.
தலைவர்
தமிழ் வளர்ச்சி கழகம்.
இதனுள்:-
I.சீரமைப்பின் பின்னணி
1.1 இந்நூலின் தேவை
1.2 எழுத்துக்களைக் குறைப்பதன்று
1.3 புதிய ஒலிகளைப் புகுத்துவதன்று
1.4 நீண்ட வரலாறு உடையது
1.5 ஒருவர் கண்டுபிடிப்பன்று
1.6 தமிழறிஞர் பரிந்துரைத்தது
1.7 கற்பதை எளிதாக்குவது
II.அறிஞர்கள் கருத்து
2.1 பொது
2.2 பேராசிரியர் தெ. பொ. மீ
2.3 பேராசிரியர் மு. வ
2.4 தமிழறிஞர் கி.வா. ஜ
2.5 பேராசிரியர் வ. சுப. மாணிக்கம்
2.6 சிலம்புச் செல்வர்
2.7 டாக்டர் கலைஞர்
2.8 தமிழகப் புலவர் குழு
2.9 கருத்தொருமை
III.செயத்தக்கது
3.1 குறியீடுகள் குறையலாம்
3.2 வாழ்வு காலத்தால் ஆனது
3.3 அண்ணா பல்கலைக்கழகக் கருத்தரங்கின் பரிந்துரை
3.4 எழுத்துச் சீரமைப்பிக் குழுவின் பரிந்துரை
3.5 நன்மைகள்
IV.வரிவடிவ மாற்றம் புதிதன்று
4.1 மாற்றங்கள் தொடர்வன
4.2 வீரமாமுனிவர் பங்களிப்பு
4.3 கருவிகட்காக அன்று; கருவியும் முக்கியம்
V.சீரமைத்த வரிவடிவம்
5.1 நான்கு புதிய குறியீடுகள்
5.2குறைந்தபட்ச மாற்றமே
VI.முடிவுரை
6.1 பிற மொழியினர் செய்துளர்
6.2 செயற்படுத்துதல்
6.3 அவசரத் தேவை
இணைப்பு 1
இணைப்பு 2
ஆசிரியரை பற்றி: 1947ஆம் ஆண்டிலிருந்து கவிதை படைக்கத் தொடங்கி, 1948ஆம் ஆண்டில் 'பொன்னி' இதழின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பாவலர் குலோத்துங்கன் (வா.செ. குழந்தைசாமி) கடந்த அறுபத்து மூன்றாண்டாண்டுகளாக இடைவிடாமல் தம் கவிதைப் பணியை ஆற்றிவருகிறார்.
டாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தியாவிலும், பின்னர் ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும் உயர்கல்வி பயின்றவர். நீர் வளத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
இவர் பொறியியல் துறையில், ஆசிரியராக, ஆராய்ச்சியாளராக, நிர்வாகியாகப் பணி புரிந்து வந்தவர் எனினும், பொதுவாக இலக்கியத்தில், குறிப்பாகத் தமிழில் ஆர்வமும், ஈடுபாடும் உடையவர். `குலோத்துங்கன்` என்ற புனை பெயரில் கவிதைகள் எழுதுபவர். இதுவரை இவரது தமிழ்ப் படைப்புகள் பத்து கவிதைத் தொகுப்புகளாகவும், தமிழில் பன்னிரெண்டு உரைநடை நூல்களாகவும் ஆங்கிலத்தில் ஆறு உரைநடை நூல்களாகவும் ஒரு கவிதை நூலாகவும் வெளிவந்துள்ளன. மேலும் நீரியல், நீர்வளம் தமிழிலும் ஆங்கிலத்திலும் கல்வி தொடர்பாக மேலும் பொதுத் தலைப்புகளிலும் நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அறிவியலுக்கும், கல்விக்கும் இவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டி, குடியரசுத் தலைவர் 1992-இல் இவருக்கு, தேசிய கௌரவமான `பத்மஸ்ரீ` விருதும் அறிவியல் - தொழில் நுட்பம் ஆகிய இரண்டு துறைகளிலும் இவர் செய்த சேவை படைத்த சாதனை களுக்காக 2002-இல் தேசிய கௌரவமான `பத்ம பூஷண்` விருதும் அளித்துச் சிறப்பித்தார்.
'குலோத்துங்கன் கவிதைகள்', 'வளர்க தமிழ்', 'வாயில் திறக்கட்டும்', 'விண் சமைப்போர் வருக', 'கதவுகள் காப்பதில்லை', 'விதியே விதியே தமிழச் சாதியை...?', 'அணையாத் தீபம்' என்னும் ஏழு தொகுப் புகளாக வெவ்வேறு காலப்பகுதிகளில் வெளிவந்த இத்தொகுப்புகளில் அடங்கிய கவிதைகளும், இதழ் களில் அவ்வப்போது வெளிவந்த கவிதைகளும் ஒரே தொகுப்பாக (2002) வெளியிடப்பட்டன. 1947ஆம் ஆண்டிலிருந்து கவிதை படைக்கத் தொடங்கி, 1948ஆம் ஆண்டில் 'பொன்னி' இதழின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பாவலர் குலோத் துங்கன் (வா.செ. குழந்தைசாமி) இவருடைய கவிதைகள் அனைத்தும் கொண்ட தொகுப்பு ஒன்று. 'குலோத்துங்கன் கவிதைகள்' என்ற தலைப்பில் 704 பக்கங்களில் 2002-இல் வெளிவந்துள்ளது.
| SKU Code | Bharti B 64 |
|---|---|
| Weight in Kg | 0.100000 |
| Dispatch Period in Days | 3 |
| Brand | Bookwomb |
| Author Name | Kulothungan @ Dr.Kuzhanthaisamy குலோத்துங்கன் @ Dr. வா.செ. குழந்தைசாமி |
| Publisher Name | Bharathi Pathippagam பாரதி பதிப்பகம் |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%



























