Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Thamizh Valarchi (Membaadu + Payanpaadu = Valarchi) Oru Thamizh Valarchi Panuval by Dr.V C Kuzhanthaisamy தமிழ் வளர்ச்சி (மேம்பாடு + பயன்பாடு = வளர்ச்சி) - ஒரு தமிழ் வளர்ச்சிப் பனுவல் - Dr. வா.செ. குழந்தைசாமி

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 59
₹190.00
465 பக்கங்கள்.  

FREE SHIPPING ON ALL ORDERS. 
Prices are Inclusive of Tax.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

எவ்வாறு மேலை நாட்டினரின் கலை, இலக்கியம், தத்துவம், பாரம்பரியம் ஆகியவற்றிற்கு கிரேக்கமும், இலத்தீனும் அடிப்படைகளோ, அதைப் போல இந்திய நாகரிகத்திற்கு, பண்பாட்டிற்கு, வடமொழியும் திராவிடத்தின் கொள்கலமான (Container) தமிழும் அடிப்படைகளாகும். அறிஞர் உலகம் ஒப்பிய உண்மை இவ்வாறிருக்க, வடமொழி மட்டுமே இந்த நாட்டின் பண்பாட்டு மொழி என்ற தோற்றம், ஒரு விதமான மாயை, பரவலாக இருந்து வருகிறது. 

இந்திய நாகரிகத்தை, பண்பாட்டை, வடமொழி, தமிழ் என்ற இரு கண்கள் கொண்டு தான் முழுமையாகக் காண முடியும். இன்று பெரும்பாலும் வடமொழி என்ற ஒரு கண் கொண்டுதான் பார்க்கப் படுகிறது. எனவே நமது பார்வையில் முழுமை இல்லை. நமது பார்வையில் பூரணத்துவம் இல்லை. இதை வரலாற்றறிஞர்கள் உணர்ந்திருக்கின்றனர். முறையாகப் பதிவு செய்திருக்கின்றனர்.

புகழ்பெற்ற வரலாற்றறிஞரான டாக்டர் வின்சென்ட் ஸ்மித் இந்திய வரலாறு பற்றிய நமது புரிதலில் இருக்கும் அடிப்படைக் குறைபாடு பற்றி பின்வருமாறு கூறுகிறார்:  
"Some day, perhaps, the history of Dravidian Civilization may be written by a competent scholar skilled in all the lore and language required for the study of the subject: but at present the literature concerned with it is too fragmentary, defective and controversial to permit of condensation. Early Indian History, as a whole, cannot be viewed in true perspective until the non-aryan institutions of the South receive adequate treatment. Hiterto, most historians of ancient India have written as if the South did not exist." 

ஆசிரியரை பற்றி: 1947ஆம் ஆண்டிலிருந்து கவிதை படைக்கத் தொடங்கி, 1948ஆம் ஆண்டில் 'பொன்னி' இதழின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பாவலர் குலோத்துங்கன் (வா.செ. குழந்தைசாமி) கடந்த அறுபத்து மூன்றாண்டாண்டுகளாக இடைவிடாமல் தம் கவிதைப் பணியை ஆற்றிவருகிறார்.

டாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தியாவிலும், பின்னர் ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும் உயர்கல்வி பயின்றவர். நீர் வளத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர்.     இவர் பொறியியல் துறையில், ஆசிரியராக, ஆராய்ச்சியாளராக, நிர்வாகியாகப் பணி புரிந்து வந்தவர் எனினும், பொதுவாக இலக்கியத்தில், குறிப்பாகத் தமிழில் ஆர்வமும், ஈடுபாடும் உடையவர். `குலோத்துங்கன்` என்ற புனை பெயரில் கவிதைகள் எழுதுபவர். இதுவரை இவரது தமிழ்ப் படைப்புகள் பத்து கவிதைத் தொகுப்புகளாகவும், தமிழில் பன்னிரெண்டு உரைநடை நூல்களாகவும் ஆங்கிலத்தில் ஆறு உரைநடை நூல்களாகவும் ஒரு கவிதை நூலாகவும் வெளிவந்துள்ளன. 

மேலும் நீரியல், நீர்வளம் தமிழிலும் ஆங்கிலத்திலும் கல்வி தொடர்பாக மேலும் பொதுத் தலைப்புகளிலும் நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அறிவியலுக்கும், கல்விக்கும் இவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டி, குடியரசுத் தலைவர் 1992-இல் இவருக்கு, தேசிய கௌரவமான `பத்மஸ்ரீ` விருதும் அறிவியல் - தொழில் நுட்பம் ஆகிய இரண்டு துறைகளிலும் இவர் செய்த சேவை படைத்த சாதனைகளுக்காக 2002-இல் தேசிய கௌரவமான `பத்ம பூஷண்` விருதும் அளித்துச் சிறப்பித்தார்.

'குலோத்துங்கன் கவிதைகள்', 'வளர்க தமிழ்', 'வாயில் திறக்கட்டும்', 'விண் சமைப்போர் வருக', 'கதவுகள் காப்பதில்லை', 'விதியே விதியே தமிழச் சாதியை...?', 'அணையாத் தீபம்' என்னும் ஏழு தொகுப்புகளாக வெவ்வேறு காலப்பகுதிகளில் வெளிவந்த இத்தொகுப்புகளில் அடங்கிய கவிதைகளும், இதழ்களில் அவ்வப்போது வெளிவந்த கவிதைகளும் ஒரே தொகுப்பாக (2002) வெளியிடப்பட்டன. 1947ஆம் ஆண்டிலிருந்து கவிதை படைக்கத் தொடங்கி, 1948ஆம் ஆண்டில் 'பொன்னி' இதழின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பாவலர் குலோத்துங்கன் (வா.செ. குழந்தைசாமி) இவருடைய கவிதைகள் அனைத்தும் கொண்ட தொகுப்பு ஒன்று. 'குலோத்துங்கன் கவிதைகள்' என்ற தலைப்பில் 704 பக்கங்களில் 2002-இல் வெளிவந்துள்ளது.        
More Information
SKU Code Bharti B 59
Weight in Kg 0.200000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Kulothungan @ Dr.Kuzhanthaisamy குலோத்துங்கன் @ Dr. வா.செ. குழந்தைசாமி
Publisher Name Bharathi Pathippagam பாரதி பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Thamizh Valarchi (Membaadu + Payanpaadu = Valarchi) Oru Thamizh Valarchi Panuval by Dr.V C Kuzhanthaisamy தமிழ் வளர்ச்சி (மேம்பாடு + பயன்பாடு = வளர்ச்சி) - ஒரு தமிழ் வளர்ச்சிப் பனுவல் - Dr. வா.செ. குழந்தைசாமி

Similar Category Products





Other Books by Kulothungan @ Dr.Kuzhanthaisamy குலோத்துங்கன் @ Dr. வா.செ. குழந்தைசாமி