Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

திருஅருட்பா ஆறாம் திருமுறை உட்பொருள் திரட்டு - பா.கமலக்கண்ணன் - Thiruarutpa Aaram Thirumurai Utporul Thirattu - Thiruvarutpa Aram Tirumurai Utporul Thiratu - Tiruarutpa Aaraam Thirumurai Utporul Tiratu - B Kamalakkannan

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 384
₹360.00

ஆன்மீகம் நூல். 

 
காகித அட்டை / பேப்பர்பேக்; 
360 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: மே, 2015.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் திருஅருட்பா ஆறாம் திருமுறை உட்பொருள் திரட்டு, பா. கமலக்கண்ணன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
 
அணிந்துரை: 
 
கடவுள் ஒருவரே. அவரை அன்பால், ஒளி வடிவில் வழிபட வேண்டும்; இறைவனை நோக்கிச் செல்ல பல வழிகள் இருப்பினும் ஆன்மீகமே மிகச் சிறந்த வழி;  இறைவனை ஆத்மார்த்தமாக உணர, சுத்த சன்மார்க்கமே மிகச் சிறந்த வழி; எல்லா உயிர்களும் இன்பத்துடன் வாழ வேண்டும்; ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்; என்று கூறிய திருஅருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும், இராமலிங்க அடிகளாரின் "திருவருட்பா"வின் ஆறாம் திருமுறையை, எளிய முறையிலும், அனைவருக்கும் புரியும் வகையிலும், 26 தலைப்புகளில் தொகுத்து வழங்கியுள்ள இந்நூலாசிரியருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
 
"திருஅருட்பா ஆறாம் திருமுறை உட்பொருள் திரட்டு" என்ற இந்நூலின் மூலம், ஆசிரியர் அவர்கள், மிகுந்த சிரமம் கொண்டு, பற்பல நூல்களை ஆராய்ந்து, பல ஆயிரம் பாடல்களை மேற்கோள்கட்டி, வருங்கால தலைமுறையினரும் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று வருந்தி பாடிய, இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா ஆறாம் திருமுறைக்கு விளக்கமளித்துள்ளார்.
 
இந்நூலின் மூலம் வள்ளலார் அவர்கள், விண்ணிலிருந்து மண்ணிற்கு இறைவனால் அனுப்பப்பட்டவர் என்றும், அவரிடம் சிவபெருமான் குடிகொண்டிருப்பதாகவும், அவருடைய அருட்பாடல்கள் மக்களிடையே, அன்பு, பாசம், நேசம், கருணை, ஒழுக்கம், ஆன்மிகம் போன்ற உயரிய பண்புகள் வளர்த்து, தங்கள் வாழ்வில் இறைவனின் அருள் பெற்று, மேன்மேலும் சிறந்து விளங்க வழிவகுக்கும், என்பதை ஆசிரியர் அவர்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
 
மேலும், திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமே, சிவபெருமான் இராமலிங்க அடிகளாருக்கு சன்மார்க்கத்தை கற்பித்தார் என்றும், இராமலிங்க அடிகளார் அவர்களின் "சிவசன்மார்க்கம்" என்பது. சிவ தத்துவத்தின் தோற்றமான ஜோதி சொரூபத்தைக் கண்டு, ஆங்காரத்தை அடக்கி, சித்தராய் தவம் செய்து, எமனை வெல்லும் மார்க்கமாகும்; அதாவது, மரணத்தை வென்று பேரின்பம் பெரும் சன்மார்க்கமாகும் என்பதை ஆசிரியர் எடுத்துக்காட்டுகளுடன் கூறுகிறார்.
 
வேதங்களின் அடிப்படையில் அமைந்ததுதான் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா என்றும், இல்லறத்தில் இருந்து கொண்டே பரம்பொருளை காணலாம் என்னும் வேதத்தின் கூற்றையே, இராமலிங்க அடிகளாரும் தன்வாழ்வில் பின்பற்றினார் என்றும், சிவபெருமானே இராமலிங்க அடிகளாருக்கு முக்தி பெற்று ஞானமார்க்கத்தை அடையும் கல்வியினை போதித்தார் என்றும், இந்நூலில் ஆசிரியர் ஆதாரத்தோடு எடுத்துரைக்கிறார்.
 
"ஆறாம் திருமுறை கூறும் இறை விளக்கம்" என்னும் தலைப்பில், இறைவன் ஒருவரே, அவரே அருட்பெருஞ்சோதி என்றும், இறைவனை சிந்திக்கும் முறை 'பக்தி' என்றும், உயிர்க்கொலையும், புலால் உண்ணலும் செய்பவர்களுக்கு ஞான மார்க்கத்தைப் பற்றிய விளக்கங்களை கூறலாகாது என்றும், வள்ளலார் உலக மக்களுக்கு உணர்த்திய பாடல்களில் குறிப்பிடத்தக்கது. "மரணம் இலாப் பெருவாழ்வு" என்றும், ஆசிரியர் தனக்கே உரிய முறையில் சான்றுடன் விளக்குகிறார்.
 
இவ்வாறாக, இராமலிங்க அடிகளார் பற்றியும் அவருடைய சீரிய கருத்துக்களையும், ஆசிரியர் அவர்கள் ஆராய்ந்து விளக்கியுள்ள இந்நூல் அனைத்து மக்களும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு அரிய படைப்பாகும். இப்படைப்பினை நமக்கு அளித்த ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஜீவகாருண்யம் வாழ்க !
 
- நீதியரசர் கே.பி.கே.வாசுகி.
 
முன்னுரையிலிருந்து: 
இராமலிங்கப் பெருமானார் அருளிய பாடல்களைத் தொகுத்து அச்சிடுவதற்கு அனுமதிகேட்டு, கருங்குழியில் வாசித்த இராமலிங்கருக்கு, சென்னையிலிருந்து இறுக்கம் இரத்தின முதலியாரும் சிவானந்தபுரம் செல்வராய முதலியாரும் கடிதம் எழுதினர். 
 
அக்கடிதத்திற்கு இராமலிங்கர் 18.11.1865ல் எழுதிய பதில் கடிதத்தில், இறைவன் தம்முள்ளிருந்து படுவித்தவைகளை மட்டும் தொகுக்குமாறு தெரிவித்தார். அதாவது பிறர் வேண்டுகோளுக்கிணங்க தாம் பாடிய ரேணுகாத்தம்மன், வீரராகவப் பெருமாள் முதலான தெய்வங்கள் மீது தாம் எழுதிய பாடல்களைச் சேர்க்கப் கூடாது என்று ஆணையிட்டார். இராமலிங்கரின் ஆணைப்படி, தொழுவூர் வேலாயுத முதலியார் நீக்க வேண்டியவற்றை நீக்கி, திரு அருட்பா என்ற தலைப்பில் ஆறு திருமுறைகளாகத் தொகுத்து இராமலிங்கரின் பார்வைக்கு வைத்தார். அவற்றைப் பரிசீலித்த இராமலிங்கர் ஆறாம் திருமுறையை மட்டும் பிற்காலத்தில் வெளியிடலாம் என்று கூறினார்.
 
இராமலிங்கப் பெருமானார் முதல் இந்து திருமுறைகளை அச்சிடுவதற்கு அனுமதி கொடுத்திருந்தும், என்ன காரணத்தாலோ முதல் நான்கு திருமுறைகள் மட்டும் 1867 பிப்ரவரி மாதம் ஒரே தொகுதியாக வெளியிடப்பட்டது. பின்னர் ஐந்தாம் திருமுறை 1880 ஆம் ஆண்டில் தொழுவூர் வேலாயுத முதலியாராலும், ஆறாம் திருமுறை 1885 ஆம் ஆண்டில் வேலூர் பத்மநாபராலும் வெளியிடப் பெற்றன. இவ்வாறு திரு அருட்பா முழுமையும் வெளிவந்து 130 ஆண்டுகள் கடந்த நிலையில் அவ்வை துரைசாமிப் பிள்ளையைத் தவிர வேறு யாரும் விளக்க உரை எழுதாதது பெருங்குறையாகும். ஆகவே ஆறு திருமுறைகளிலும் என்ன இருக்கிறது என்பது வெளிப்படாது போயிற்று. ஆறுமுக நாவலரும் அவருடைய நண்பர்களும் அன்று புனைந்துரைத்த பற்பல ஆதாரமற்ற கதைகளே மக்களிடையே பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருவது வேதனையான செய்தியாகும்.
 
கடந்த பத்து ஆண்டுகளாக அவனருளாலே அவன்தாள் வணங்கி நான் வெளியிட்டுள்ள ஆறு திருமுறைகளுக்கும் உரிய ஞான விளக்கத்தைக் கண்டு பலரும் திகைப்படைந்து நிற்கின்றனர். மேலும் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம் 5.10.2008ல் வெளியிட்ட ஆறாம் திருமுறையில் பாயிரம் பக்கம் 14ல் முதல் ஐந்து திருமுறைகளும் ELEMENTARY என்று அறிவித்துவிட்டதால் அவற்றை ஒதுக்கிக் தள்ளும் அவல நிலையும் உள்ளது. திரு அருட்பாவைக் காப்பதற்கும் இராமலிங்கருக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதற்கும் யாரும் முன்வரவில்லை. இது காலத்தின் கோலமாகும் .
 
திருஅருட்பாவிலுள்ள 6733 பாடல்களையும் ஞான விளக்க உரையையும் படித்துப் புரிந்து கொள்வதற்கு மிக்க கால அவகாசமும் சிரமமும் ஏற்படும் என்றும் அதனால் சுருக்கமாக உரைநடையில் தெரிவிக்க வேண்டுமென்றும் மலேசியா, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் எனக்குத் தெரிவித்துள்ளனர். ஆதலால் ELEMENTARY என்று இப்போதைக்கு ஒதுக்கப்படாமல் விட்டுவைக்கப்பட்டுள்ள ஆறாம் திருமுறையில் அடங்கிய 2541 பாடல்களில் இராமலிங்கர் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்களை ஒருங்கு திரட்டி "திருஅருட்பா ஆறாம் திருமுறை உட்பொருள் திரட்டு" என்ற இந்த நூலை 26 தலைப்புகளில் உருவாக்கி இராமலிங்கரின் திருவடிகளில் சமர்ப்பித்துள்ளேன். இன்றைய தலைமுறையினர் ஏற்காமல் புறந்தள்ளினாலும் வருங்கால சந்ததியினர் கருத்தூன்றிக் கற்கலாம் என்று கருதியே "அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்".
 
தற்காலத்தில் உலவிவரும் பற்பல கற்பனைக் கதைகளும் ஆதாரமற்றவை என்று நிரூபிப்பது எளிதான செயலன்று. ஆகவே பெருமுயற்சியுடன் திருஅருட்பா ஆறாம் திருமுறையிலிருந்து நூற்றுக்கணக்கான பாடல்களைத் தேடி எடுத்து ஆதாரம் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த நூலில் சுமார் 1500 பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளேன். ஆய்வு அறிஞர்கள் பலரும் திருஅருட்பாவை ஆராய்ந்து உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு இறைவன் அருளைப் பிரார்த்திக்கின்றேன்.
 
30.1.1874 அன்று, மேட்டுக் குப்பத்தில் கதவைச் சாத்துவதற்கு முன்னால் கூறிய கீழ்க்கண்ட சொற்களையும் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்:
 
"இனி இரண்டரைக் கடிகை நேரம் உங்கள் கண்களுக்குத் தோன்ற மாட்டோம். இவ்வுலகத்திலும் மற்றெங்கும் இருப்போம். பின்னர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் வருவார்; அப்போது இவ்வுருவுடன் சித்திகள் பல நிகழ்த்துவோம்."
 
மேற்கண்ட சொற்களுக்குக் குருமூலமாக அறிந்த உட்பொருளாவது: 
1.இரண்டரைக் கடிகை என்று பரிபாஷையில் கூறியது, 60+60+30 = 150 ஆண்டுகளைக் குறிக்கும். அதாவது கி.பி. 1874+150 - கி.பி.2024 வரை உங்கள் கண்களுக்குத் தோன்ற மாட்டோம்.
 
2.அதன் பின்னர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் (நடராஜபதி) வருவார். அப்போது இந்த தூலதேகத்தோடு சித்திகள் பல நிகழ்த்துவோம்.
 
3.தூலதேகம் ஜோதியோடு கலக்கவில்லை. அவர் அண்ட வெளியிலுள்ள நாதாந்த நாட்டின் நாயகராக செங்கோலாச்சி வருகின்றார்.
 
இராமலிங்கரின் இந்த அறிவிப்பைப் பொய்யுரை என்று சந்தேகிப்போரைப் பார்த்து அவர் இவ்வாறு எச்சரிக்கின்றார்: 
 
நான் சொல்வது பொய்யுரை என்று கருதினால் புறக்கடைக்குப் போங்கள் (நரகத்திற்குப் போங்கள்). மெய்யுரை என்று எண்ணினால் என் மார்க்கத்தில் பொருந்தியிருங்கள்.
 
- இங்ஙனம்
இராமலிங்கரின் பாத சேவகன்,
பா.கமலக்கண்ணன்.
 
பொருளடக்கம்: 
01.இறைவன் வருவிக்கவந்தவர் இராமலிங்கர்; 
02.பிள்ளைப் பெயரிட்டவர் நடராஜபதியே;  
03.திருஐந்தெழுத்தின் உட்பொருள் அறிவிக்கப் பெற்றார்; 
04.தூங்கும்போது கீழே விழாது தூக்கி எடுக்கப் பெற்றார்;  
05.பசித்திடுதோறும் உணவளிக்கப் பெற்றார்;  
06.ஒன்பது வயதில் சிதம்பரத்தில் கண்டறியாதன கண்டார்;  
07.இராமலிங்கரின் மெய்ஞ்ஞான குருநாதர் நடராஜபதியே;  
08.சிவமாலையும் சிவஇரகசியமும்;  
09.நடராஜபதி கற்பித்த மெய்ஞ்ஞானக் கல்வி;  
10.திருமந்திரத் திருமுறையால் கற்பித்த சன்மார்க்கம்;  
11.பாதம் தலைமேல் பொருந்திடப் பாவம் எரிந்து போனதே;  
12.பாடுக என்றிடப் பாடினார்; வேத ஆகமம் என்றான் பரமன்;  
13.வேதங்களின் விளக்கமே திருஅருட்பா;  
14.ஆறாம் திருமுறையில் சித்தர்களின் பரிபாஷை;  
15.சிறுவயதில் செய்த தொழிலும் தற்கொலை முயற்சியும்;  
16.இல்லறம்;  
17.வடலூரில் தீயோர்களால் துன்பமும் சிவபெருமான் பாதுகாப்பும்;  
18.மேட்டுக்குப்பம் சென்ற பின்னர் நிம்மதி அடைந்தார்; 
19.ஆறாம் திருமுறை கூறும் இறை விளக்கம்; 
20.சிறிய தெய்வங்கள் யார்?; 
21.இறைவனை சிந்திக்கும் முறை; 
22.உயிர்க்கொலையும் புலால் உணவும்; 
23.இறைவன் அளிக்கும் தேகத்தை எரிப்பது குற்றம்; 
24.இராமலிங்கர் உலகமக்களுக்கு உணர்த்திய பாடல்கள்; 
25.இராமலிங்கர் எய்திய 16 இறைமை நிலைகள்; 
26.உதிரிப்பூக்கள்.
மேற்கோள் காட்டப் பெற்றிருக்கும் நூல்களின் பட்டியல்.
  
ஆசிரியர் குறித்து: திரு.பா.கமலக்கண்ணன் அவர்களின் முதல் நூல் 'ஞானக்கனல்' வானதி பதிப்பகத்தால்  1989-ல் வெளியிடப்பெற்று இதுவரை பத்து பதிப்புகள் வந்துள்ளன. இவர் திருஅருட்பா 6733 பாடல்களுக்கும் ஞானவிளக்க உரை எழுதியுள்ளார். தேவாரம், திருவாசகம், திருமந்திரம், சிவஞானபோதம், ஆகிய அனைத்தும் வேதங்களின் விளக்கமே என்று நிறுவி நூல்களை உருவாக்கியுள்ளார். திருவள்ளுவரின் சுயசரிதையை வெளிப்படுத்தி அவர் பிறந்தது கரூர்; இயற்பெயர்: சாம்புவமூர்த்தி, தந்தையார் சாம்பசதாசிவன் என்றும் அவர் அகத்தியருடைய சீடர் என்றும் நிறுவியுள்ளார். சிலப்பதிகாரத் தலைமை பொற்கொல்லன் ஒரு யவனன் என்று நிறுவியுள்ளார். இவர் தமிழில் முப்பத்திரண்டு நூல்களும் ஆங்கிலத்தில் நான்கு நூல்களும் உருவாக்கியுள்ளார். அவ்வைக்குறள், ஞானவாசிட்டம் ஆகிய அரிய நூல்களை இவர் வெளிக்கொணர்ந்துள்ளார். இவருடைய 'சித்தர் தத்துவம்' என்ற நூல் 2001-ம் ஆண்டில் சிறந்த நூலாகத் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப் பெற்றது.
More Information
SKU Code VAN B 384
Weight in Kg 0.690000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பா.கமலக்கண்ணன் - B.Kamalakkannan
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:திருஅருட்பா ஆறாம் திருமுறை உட்பொருள் திரட்டு - பா.கமலக்கண்ணன் - Thiruarutpa Aaram Thirumurai Utporul Thirattu - Thiruvarutpa Aram Tirumurai Utporul Thiratu - Tiruarutpa Aaraam Thirumurai Utporul Tiratu - B Kamalakkannan

Similar Category Products