Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Thirumana Vazhkaiyum Kairegai Vignanamum by Kanchi S Shanmugam திருமண வாழ்க்கையும் கைரேகை விஞ்ஞானமும் - காஞ்சி எஸ். சண்முகம்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 309
₹55.00
ஜோதிட நூல்; 
கைரேகை சாஸ்திரம்; 
கைரேகை ஜோதிடம்.

மொழி: தமிழ்; 
காகித அட்டை (Paperback); 
படிக்கக்கூடிய எழுத்துரு (Readable Font);  
பாரதி பதிப்பகம். 

FREE SHIPPING ON ALL ORDERS. 
Prices are Inclusive of Tax.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

‘கைரேகை’ என்பது, மனிதக் கருவறையில் இறைவனால் வரையப்பட்ட வாழ்க்கை வரைபடம். கை நிறைய சம்பாதித்து, மனம் நிறைய மகிழ்ச்சியை உறவுகளோடு பகிர்ந்துகொண்டு வாழ வேண்டும் என்பதுதான், மனித சமுதாயத்தின் மாண்பு. இதற்கு உள்ளங்கைகளில் பதிந்துள்ள ரேகைகள் துணை புரியுமா? என்ற கேள்வி, அநேகரிடம் இருப்பதை காண முடிகிறது. ரேகை அமைப்பு முறைகளை அனைவரும் படித்து புரிந்துகொள்ளும் விதத்தில் வரைபடங்களுடன் எளிமையாக விவரித்துள்ளார் நூலாசிரியர். ரேகை மற்றும் கிரக மேடுகளின் அடிப்படையில் பலன்களை விவரித்துள்ள இந்த நூல், வளம் பெற முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை நிச்சயம் காட்டும்.

       முன்னுரை

குரு வாழ்க! குருவே துணை!!

பேரன்புடையீர், வணக்கம்

"திருமண வாழ்க்கையும் கைரேகை விஞ்ஞானமும்" என்ற நூலினை எழுதிடும் வாய்ப்பளித்த இறைவனுக்கு முதற்கண் நன்றி கூறி, இந்நூலை எழுதியதற்கான நோக்கத்தையும் கூற விரும்புகிறேன்

எனது தகப்பனார் சோதிடர் என்பதால் 15 வயதிலேயே சோதிடத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு வீட்டில் உள்ள சோதிட நூல்களை படிக்கத் துவங்கிய எனக்கு கைரேகைக் கலையில்தான் முதலில் ஆர்வம் ஏற்பட்டது

பொழுதுபோக்காக பல கைரேகை நூல்களைப் படித்து என் கையில் உள்ள ரேகைகளையும், என்னுடன் இருப்பவர்கள், உற்றார் உறவினர்களின் கைரேகைகளையும் ஆராயத் துவங்கிய எனது பயணம் நாட்கள் செல்லச் செல்ல விரிவடைந்தது

எனது வாழ்நாளில் ஒரு லட்சம் பேருடைய கைரேகைகளையும் ஜாதகங்களையும் ஆய்வு செய்து இந்த அரிய சோதிடக் கலைக்கு ஒரு துளியாவது பெருமை சேர்க்க வேண்டும் என்பது என்னுடைய வாழ்நாள் இலட்சியம். இன்று வாழும் மனிதர்களிடையே இல்லற வாழ்க்கையிலும், பொதுவாழ்விலும் நிலவுகின்ற குழப்பங்களும், சிக்கல்களும், சண்டை சச்சரவுகளும், மன வருத்தங்களும், தாழ்வு மனப்பான்மையும், தற்கொலை சிந்தனைகளும் சிறிதளவாவது மாறி கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஏற்பட்டு அமைதியுடன் ஆனந்தத்துடன் வாழ என்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 

பல ஆண்டுகளாக 10,000க்கும் மேற்பட்டவர்களின் கைரேகை மற்றும் ஜாதகங்களை, தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று, பலதரப்பட்ட மக்களையும் சந்தித்து ஆராயும் வாய்ப்பு குரு அருளாலும் இறையருளாலும் கிடைக்கப் பெற்றது. 

என்னுடைய 35 ஆண்டுகள் அனுபவங்களையும், ஆராய்ச்சிகளையும் நூல்கள் மூலம் மக்களுக்கு கொடுத்து அவற்றின் பயனை அவர்கள் சிறிதளவாவது அடைந்து அமைதியாக வாழ வேண்டும் என்ற நோக்கில் உருவானதுதான் இந்த திருமண வாழ்க்கையும் கைரேகை விஞ்ஞானமும் என்ற நூல்

இந்த நூலினைப் படித்து நீங்கள் பயன் பெறுவதுடன் உங்களை சார்ந்திருப்போருக்கும் பலன் கூறி அவர்களுக்கு வர இருக்கிற நற்பலன்களை மேலும் நற்பலன்களாக்கி மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும். அதன் மூலம் அவர்களது குடும்பமும் சமுதாயமும் நற்பலன் அடையவும், வர இருக்கிற துன்பங்களைக் குறைத்துக் கொண்டு மன அமைதியுடன் வாழ நீங்கள் மற்றவர்களுக்கு வழி காட்டுவதுடன் சோதிட கலைக்கு சிறப்பு சேர்ப்பதாக அமையும் என்பதை கூறி நிறைவு செய்கிறேன்

இந்த நூல் வெளியாவதற்கு உதவியாக இருந்த அனைத்து அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது நன்றி.

 வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

எஸ்.சண்முகம் 

                      

          பொருளடக்கம்

1.திருமண வாழ்க்கையும் கைரேகை விஞ்ஞானமும்; 

திருமண ரேகையின் அமைப்பு;

திருமண ரேகையின் எண்ணிக்கை; 

திருமண ரேகையின் துவக்கமும் முடிவும்; 

திருமண ரேகையின் புள்ளி வகைகள்; 

திருமண ரேகையின் உள்ள குறிகள்; 

 

2.திருமண ரேகையும் கிரகமேடுகளும்  ஓர் ஆய்வு; 

குருமேடும் திருமண ரேகையும்;

சனிமேடும் திருமண ரேகையும்;

சூரியமேடும் திருமண ரேகையும்;

புதன் மேடும் திருமண ரேகையும்;

செவ்வாய் மேடும் திருமண ரேகையும்;

சந்திரமேடும் திருமண ரேகையும்;

சுக்கிரமேடும் திருமண ரேகையும்;

 

3.முக்கிய ரேகைகளும் திருமண வாழ்க்கையும்

புத்திரேகையும் திருமண வாழ்க்கையும்; 

இருதயரேகையும் திருமண வாழ்க்கையும்;

ஆயுள்ரேகையும் திருமண வாழ்க்கையும்;

விதிரேகையும் திருமண வாழ்க்கையும்;

சூரியரேகையும் திருமண வாழ்க்கையும்;

 

4.புதன் விரலும் திருமண வாழ்க்கையும்;

குழந்தைச் செல்வம் உண்டா?;

சுக்கிர வளையம்;

 

5.சில கைரேகை பலன்கள் ஓர் ஆய்வு.

 
ஆசிரியர் குறித்து: 
கைரேகைக்கலை குறித்து படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள நூலை எழுதியுள்ளார் ஜோதிட ரத்னா மற்றும் கைரேகை நிபுணர் காஞ்சி எஸ் சண்முகம். 

ஆசிரியர் பெயர்: செ.சண்முகம்

வயது: 50

கல்வித் தகுதி: B.Sc., M.A, B.Ed, S.D.T.D

பெற்றோர் : எஸ்.செல்வ கணபதி -இராஜலெட்சுமி

சொந்த ஊர் : வேதாரண்யம்

ஜோதிடபட்டங்கள் : ஜோதிஷ் ஞான சிரோன்மணி; ஜோதிஷ் சாம்ராட்; ஜோதிஷ் வித்வான் மணி

எழுதிய நூல்: கே.பி.ஜோதிடமும் செவித்திறன் குறையும் (ஒரு பாகம்)

வீட்டு முகவரி: பிளாட் எண்.128, 172 A, பெரியார் சாலை,

அன்னை இந்திரா நகர்,

புதிய இரயில் நிலையம் அருகில்,

காஞ்சிபுரம்-631502.

Ph. 9659632767.

More Information
SKU Code Bharti B 309
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Jothida Rathna Palmistry Kanchi S Shanmugam ஜோதிட ரத்னா மற்றும் கைரேகை நிபுணர் காஞ்சி எஸ் சண்முகம்.
Publisher Name Bharathi Pathippagam பாரதி பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Thirumana Vazhkaiyum Kairegai Vignanamum by Kanchi S Shanmugam திருமண வாழ்க்கையும் கைரேகை விஞ்ஞானமும் - காஞ்சி எஸ். சண்முகம்

Similar Category Products





Other Books by Jothida Rathna Palmistry Kanchi S Shanmugam ஜோதிட ரத்னா மற்றும் கைரேகை நிபுணர் காஞ்சி எஸ் சண்முகம்.