Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Thunai - துணை

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 078
₹80.00
பேப்பர்பேக்; 
வெளியீட்டு ஆண்டு: 2016;  
பதிப்பு : 4; 
200 பக்கம்; 
பதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
எங்கள் வாழ்க்கை எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. எங்கள் முன்னேற்றம் எங்கள் அப்பாவை வாயடைக்க செய்து விட்டது. இன்றைய சம்பளம் என்ன தெரியுமா, கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய். எங்களுடைய காசில் நங்க நல்லூரில் அப்பா நிலம் வாங்கி வீடு காட்டியிருக்கிறார். அந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு அபிராமபுரத்தில் மிகப்பெரிய ஃப்ளாட்டில்   மீதி மூன்று பெண்களோடு குடித்தனம் செய்து கொண்டிருக்கிறார்.

இப்போதெல்லாம் நான்கும் பெண்ணாகப் பெற்று விட்டேன் என்று அவர் அலுத்துக் கொள்வதில்லை. 'என் பெண்களைப் போல உண்டா' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆணென்ன, பெண்ணென்ன என்று அடக்கி வாசிக்கிறார். அம்மாவின் முகத்தில் எவ்வளவு பூரிப்பு தெரியுமா, போன முறை போனபோது அம்மாவிடம் பேசினேன். இரண்டாம் பெண்ணுக்கு திருமணம் செய்யக் கூடாதா என்று 'ஏன் உன்னை மறந்து விட்டாய்?' என்று சொன்னாள். நான் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று இருக்கிறேன் என்றேன். அம்மா திரும்பி பார்த்தாள். 

வீடு விட்டுப் பொய் இவ்வளவு காசு சம்பாதிக்கத் தெரிந்து இந்தக் குடித்தனத்தை நிமிர்த்த தெரிந்த உனக்கு ஒரு புருஷனை தேர்தெடுக்கத் தெரியாதா? அதற்கு நாங்கள்தான் நிற்க வேண்டுமா? நாங்கள் பார்த்து தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? அப்படி தேவையே இல்லை. நீயே உன் புருஷனைத் தேர்ந்தெடுக்கக் கூடிய முழு தகுதி உனக்கு இருக்கிறது. நீயே தேர்ந்தெடுத்துக் கொள்வதுதான் நல்லது.

ஏனம்மா ஏன் அப்படி தள்ளி விடுகிறாய்?

உன்னுடைய ரசனை என்ன? உன்னுடைய விருப்பம் என்ன? நீ எப்பேர்பட்டவள் என்பது எனக்கு இன்னும் தெளிவாகவில்லை. நான் பார்த்த வசந்தி இப்போது இல்லை எனவே நான் பார்க்காத எனக்கு தெரியாத வசந்திக்கு நான் எப்படி மாப்பிள்ளை பார்க்க முடியும்? உன்னைப் பற்றி உனக்குத்தான் தெரியும். உனக்குத் தெரிந்த மாப்பிள்ளையாக, உனக்குப் புரிந்த மாப்பிள்ளையாக நீயே தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கோல். எனக்கு அந்தப் பொறுப்பை கொடுக்க வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.
More Information
SKU Code TMN B 078
Weight in Kg 0.040000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:Thunai - துணை

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran