உடல் நோய்களும் கைரேகை விஞ்ஞானமும்
முன்னுரை
குரு வாழ்க! குருவே துணை!
பேரன்புடையீர், வணக்கம்!
"தன்னையறிய தனக்கோர் கேடில்லை' என்ற திருமூலரின் வாக்கிற்கிணங்க நாம், நம் உடல் உறுப்புகளைப் பற்றியும், நம் உடலிலும், உள்ளத்திலும் தோன்றுகின்ற நோய்கள் பற்றியும், நோய் எதிர்ப்புச் சக்தி எந்த அளவு நமக்குள்ளது என்பதைப் பற்றியும் அறிந்து கொண்டால்தான் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து பல சாதனைகள் செய்து நமது குடும்பத்திற்கும், இந்த சமுதாயத்திற்கும் பயனுள்ளவராக வாழ இயலும்.
நம் உடல் உறுப்புகளின் பலம் மற்றும் பலவீனம், நமக்கு இருக்கும் நோய், வர இருக்கிற நோயினையும், உடல் சக்தியினையும் நம் கைகள் ஒரு கண்ணாடி மாதிரி காட்டிக் கொடுத்து விடும்.
ஒருவரின் இரு கைகளிலும் இருக்கிற கிரக மேடுகளையும், ரேகைகளையும், நகங்களின் அமைப்பினையும், கைகளின் நிறத்தினையும், கிரக மேடுகளில் உள்ள குறிகளையும், ரேகைகளில் உள்ள குறிகளையும் கொண்டு ஒரு கை ரேகை நிபுணரால் வர இருக்கிற நோயினைக் கூறி விட முடியும்.
ஒருவருக்கு எந்த உறுப்பில் எந்த நோய் உள்ளது, நோய் ஏற்படும் வயது, அந்த நோயின் பாதிப்புகள், எந்தளவு தாக்கத்தினை ஏற்படுத்தும், அந்த நோய் எப்போது குணமாகும்? என்பதையும் முன்கூட்டியே அறிந்து திட்டமிட்ட உடற்பயிற்சியாலும், மனப் பயிற்சியினாலும், சரியான உணவு, மூலிகைச் சாறுகள், மருந்துகள் மூலம் நோயினைப் போக்கி, அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற நோக்கில் அனைவரும் படித்துப் புரிந்து கொள்ளும்படி மிக எளிமையான கைரேகை பட விளக்கங்களுடன் 'உடல் நோய்களும் கைரேகை விஞ்ஞானமும்' என்ற நூலினை குரு அருளாலும், இறையருளாலும் எழுதியுள்ளேன்.
இந்த நூலினை எழுதுவதற்கு எண்ணத்தினைக் கொடுத்த இறைவனுக்கு முதற்கண் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நூலில் கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் பல ஆயிரக்கணக்கான மனிதர்களின் கைகளை ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளே! இந்த உண்மைகளைக் கண்டறிய உதவிய அனைத்துப் பெருமக்களுக்கும் நன்றி!
இந்த நூல் வெளியாவதற்கு உதவியாக இருந்த அனைத்து அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி !
வாழ்க ஜோதிடக்கலை! வாழ்க வளமுடன்!
- காஞ்சி எஸ்.சண்முகம்.
பொருளடக்கம் :
1.உடல் நோய்களும் கைரேகை விஞ்ஞானமும்
- இரு கைகளையும் ஆராய வேண்டும்;
- கைரேகை விதிகள்
2.இருதய நோய்களும் கைரேகையும்
மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் இருதய நோய்கள்
எதிர்பாராத இழப்பின் காரணமாக ஏற்படும் மாரடைப்பு
வளர் இளம் பருவத்தினரின் ஆரோக்கியமும், இருதய ரேகையும்
உண்மைச் சம்பவங்கள் (1-4)
50 வயதுக்குப் பின் வரும் இருதய நோய்களும், கை ரேகையும்
உண்மைச் சம்பவங்கள் (5-7)
3.சர்க்கரை நோயும், கைரேகையும்
உண்மைச் சம்பவங்கள் (8-10)
4.ஆஸ்துமா நோயும், கைரேகையும்
உண்மைச் சம்பவங்கள் (8-10)
5.சிறுநீரக நோய்களும், கைரேகையும்
உண்மைச் சம்பவம் (11)
6. கருப்பை கோளாறுகளும், கைரேகையும்
உண்மைச் சம்பவம் (12)
7.கண் நோய்களும், கைரேகையும்
8.கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய்களும், கைரேகைகயும்
9.மூட்டுவலி, முதுகுவலி, கண்வலி நோய்களும், கைரேகையும்
10.மூளை தொடர்பான நோய்களும், கைரேகையும்
உண்மைச் சம்பவம் (13)
11.புற்று நோயும், கைரேகையும்
உண்மைச் சம்பவம் (14).
‘'கைரேகை’ என்பது, மனிதக் கருவறையில் இறைவனால் வரையப்பட்ட வாழ்க்கை வரைபடம். கை நிறைய சம்பாதித்து, மனம் நிறைய மகிழ்ச்சியை உறவுகளோடு பகிர்ந்துகொண்டு வாழ வேண்டும் என்பதுதான், மனித சமுதாயத்தின் மாண்பு. இதற்கு உள்ளங்கைகளில் பதிந்துள்ள ரேகைகள் துணை புரியுமா? என்ற கேள்வி, அநேகரிடம் இருப்பதை காண முடிகிறது. ரேகை அமைப்பு முறைகளை அனைவரும் படித்து புரிந்துகொள்ளும் விதத்தில் வரைபடங்களுடன் எளிமையாக விவரித்துள்ளார் நூலாசிரியர். ரேகை மற்றும் கிரக மேடுகளின் அடிப்படையில் பலன்களை விவரித்துள்ள இந்த நூல், வளம் பெற முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை நிச்சயம் காட்டும்.
ஆசிரியர் குறித்து:
கைரேகைக்கலை குறித்து படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள நூலை எழுதியுள்ளார் ஜோதிட ரத்னா மற்றும் கைரேகை நிபுணர் காஞ்சி எஸ் சண்முகம்.
ஆசிரியர் பெயர்: செ.சண்முகம்
வயது: 50
கல்வித் தகுதி: B.Sc., M.A, B.Ed, S.D.T.D
பெற்றோர் : எஸ்.செல்வ கணபதி -இராஜலெட்சுமி
சொந்த ஊர் : வேதாரண்யம்
ஜோதிடபட்டங்கள் : ஜோதிஷ் ஞான சிரோன்மணி; ஜோதிஷ் சாம்ராட்; ஜோதிஷ் வித்வான் மணி
எழுதிய நூல்: கே.பி.ஜோதிடமும் செவித்திறன் குறையும் (ஒரு பாகம்)
வீட்டு முகவரி: பிளாட் எண்.128, 172 A, பெரியார் சாலை,
அன்னை இந்திரா நகர்,
புதிய இரயில் நிலையம் அருகில்,
காஞ்சிபுரம்-631502.
Ph. 9659632767.