Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Akani B 003
₹500.00
நாவல். 
 
பேப்பர்பேக்;  
504 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
அகநி வெளியீடு.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நாவலில் அறநூறு வருட வாழ்க்கை ஒரு குடும்பத்தின் னிகழ்வுகளைச் சொல்லப்படுகிறது, பெண் தெய்வங்கள் தங்களை அழித்துக் கொண்டு மற்றவைகளைக் காப்பதாகபல வழக்கு கதைகள் இருந்தாலும் இந்நாவலில் வருகிற நொண்டி மீணாட்சி என்கிறபெண் தனி ஒருவளாக தன் தங்கையையும் அவளது வம்சத்தையும் நிலைநிறுத்தப் பலபோராட்டங்களை மேற்க்கொள்கிறாள், அவளது கதையை மிக அருமையாகச் சொல்லிஇருக்கிறார் நன்பர் ராஜேந்திரன். நான் இதை நாவலாகவே பார்க்கிறேன், அப்படி தான்பார்க்க முடியும், ஒருவர் பாதையிலான சுயசரிதை அல்லது ஒற்றை வாழ்க்கை, பலவகையிலும் அவர் வழுகிற சமூகமும் சார்ந்ததே. வடகரை-ஒரு வம்சத்தின் வரலாறு’ நூலுக்காக கோவை மா.பொ.சி. சிலம்புச் செல்வர் இலக்கிய விருது, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின ’புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’.                                                                                                                                                                                                                                                       
எழுத்தாளர் குறிப்பு :  டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப., மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகிலுள்ள வடகரை கிராமத்தில் பிறந்தவர். முதுகலை ஆங்கில இலக்கியமும் சட்டமும் படித்தவர். ஐ.ஏ.எஸ். தேர்விற்காக வரலாற்றை ஒரு பாடமாக எடுத்து படித்தப் பிறகு, அவரின் முழு ஆர்வமும் வரலாற்றின்மீதே திரும்பியது. வரலாற்றைத் தேடி பயணிப்பதில் தீராத ஆர்வம் உள்ளவர். இயற்கைப் பாதுகாப்பு செயல்பாட்டாளர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராய் இருந்தபோது மாவட்டத்தில் உள்ள அனைத்து மலைப்பகுதிகளிலும் பத்து லட்சம் விதைகளைத் தூவி, மலைவளம் காத்தவர். மாவட்டத்தில் இருக்கும் ஆயிரம் ஆண்டுகாலப் பழமையான கோவில்களில் உள்ள கல்வெட்டுகளைத் தொல்லியல்துறை உதவியுடன் படியெடுத்தவர். 'திருக்குறளில் உள்ள உள்நாட்டு வெளிநாட்டுச் சட்டக்கூறுகள்' என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முதல் பட்டமளிப்பு விழாவில் 'முனைவர்' பட்டம் பெற்ற முதல் மாணவர். தற்போது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.
More Information
SKU Code Akani B 003
Weight in Kg 0.800000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப - Dr M.Rajendiran I.A.S
Publisher Name அகநி வெளியீடு - Akani Veliyeedu
Write Your Own Review
You're reviewing:வடகரை - Vadakarai

Similar Category Products





Other Books by டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப - Dr M.Rajendiran I.A.S