வேதாளம் சொன்ன கதைகள் - ஏ.எஸ்.வழித்துணைராமன் - Vedhalam Sonna Kathaigal - A.S.Vazhithunairaman - Vedhaalam Vethalam Vethaalam Kathaikal Kadhaigal Kadhaikal
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: In stock
SKU:
Bharti B 250
₹60.00
சிறுவர் கதைகள். சிறுவர்களுக்கான பாரத கதைகள். பண்பாட்டு கதைகள் /தத்துவ கதைகள். வாழ்க்கை வாழ்வதற்கான போதனை கதைகள்.
காகித உறை / பேப்பர்பேக்;
144 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதல் பதிப்பு: டிசம்பர், 2014.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இதுவரை வெளிவராத வேதாளம், விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன கதைகள்.
விக்கிரமாதித்தன் தன்னுடைய அறிவு, சாமர்த்தியம் ஆகியவற்றுக்கு பெயர்பெற்றவர்.
வேதாளம் கதைகளை சொல்லி கதையின் முடிவை விந்தையான பல கேள்விகள் கொண்டு கேட்கும். விக்கிரமாதித்யன் தவறான பதிலை சொன்னால் அவன் தலை சுக்கு நூறாக உடையும். தனது மதியூகத்தினாலும் சாமர்த்தியத்தினாலும் ஆராய்ந்து, சரியான முடிவை கூறும் விக்கிரமாதித்தனின் நன்னெறிக் கதைகள். குழந்தைகளுக்கு எந்த ஒரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு எனவும், அதை மதிகொண்டு சுலபமாக வென்றிடலாம் என சொல்லாமல் சொல்லித் தரும் இக்கதைகள்.
***
உலகப் பிரசித்தி பெற்ற கதைகளில் நெஞ்சில் நீக்கமற நிறைவு பெருங்கதை விக்கிரமாதித்தன் கதை.
உஜ்ஜயினியை ஆண்டு வந்த மன்னன் விக்கிரமாதித்தன் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அந்த வரலாற்று அரசனுக்கும் நாட்டில் அவனைப் பற்றி வழங்கும் நாடோடிக் கதைகளுக்கும் நெருங்கிய சம்பந்தத்தை மக்கள் மனதில் வேரூன்றச் செய்த பெருமை அந்தக் காலத்துக் கதாசிரியர்களுக்கு உரியது.
எனவே, அவர்களுக்குத் தலைவணங்கி, நாட்டில் பெரும்பாலும் கேட்டறியாத இந்தக் கதைகளை ரசிக்கத் தகுந்த முறையிலே இங்கே தந்திருக்கிறோம்.
பழைய சுவடிக் கதைகளைச் சற்று மெருகூட்டி புதிய கோணத்தில் படைக்கும் இந்த வேதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன கதைகளை (விட்டுப் போன விக்கிரமாதித்தன் கதைகள்) நிச்சயம் தமிழ் வாசகர் வட்டம் பாராட்டும்.
வேதாளம் இதோ விக்கிரமாதித்தன் அரண்மனைக்குள் புகுந்து ஆசார வாசலில் அவனுக்காக நின்று கொண்டு இருக்கிறது.
"வாரும் பிள்ளாய்! வேதாளமே வருக! வருக! " என்று வரவேற்பை விக்கிரமாதித்தன் வாய்முனக, அவன் வருகிறான்.
அவன் பின்னால் மதியூக மந்திரி பட்டி வந்து, "வாழ்க வேதாளம்! வருக வேதாளம்!" என வரவேற்றான்.
வேதாளம் பதிலுக்கு, "ராஜாதி ராஜ மார்த்தாண்ட விக்கிரம ராஜ பூபதியே! வணக்கம். மற்றும் அறிவார்ந்த பட்டி பிரபுவே! வணக்கம்!" என்று கூறி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கியது. ஆயினும் வேதாளத்தின் மேனியில் ஒரு மண்ணோ, துறும்போ, தூசியோ ஒட்டவில்லை. காரணம், கால் பூமியில் பாவாது அந்தரத்தில் வந்தனம் செய்த வேதாளத்தைக் கண்டு பட்டியும், அரசனும் பரவசமுற்றனர்.
"மன்னர் மன்னவா! தாங்கள் நாடாண்ட மாதங்கள் ஆறு நிறைவுறப் போகிறதே! காடாள எப்போது நீங்கள் வரப்போகிறீர்கள்?" என வேதாளம் வினவியது.
பட்டி பதில் சொன்னான்: "நாங்கள் காட்டிற்கு வருவதில் உனக்கு ஏன் அத்தனை அக்கறை?"
"ஆயிரமாயிரம் கதைகளை நீங்களும் உம் அரசனும் யாரிடமோ கேட்டிருக்கலாம்."
உடனே விக்கிரமாதித்தன், "என் அரச பீடத்து அழகு அலங்காரப் பதுமைகள் 32-ம் சொன்ன கதைகளை குறிப்பிடுகிறாயா?
"ஆம், ஆம்" என்று வேதாளம் தலை அசைத்தது.
பட்டி, "தேவலோகத்தையும் திக்பிரமை அடையச் செய்யும் அந்தச் சிறப்பு கதைகளை விடவா வேறுயாரும் சொல்லப் போகிறார்கள்?"
"மகா மந்திரியே! மோனப் பதுமைகள் முகிழ்த்த கதைக்கே இத்தனைச் சிறப்பு முத்திரை என்றால் என் கதைக்கு நீர் என்ன சொல்லப் போகிறீர்?" என வேதாளம் கூறியது.
"பொம்மைகளுக்குப் போட்டியாக வேதாளமே நீ கதை சொல்லக் கிளம்பி விட்டாயா?" என்று கேட்டான் விக்கிரமாதித்தன்.
"அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன். ஆயினும் என கதையின் முடிவில் ஓர் புதிர் முடிச்சு இருக்கும். அதை நீங்கள் இருவரும் அவிழ்க்கவிட்டால் நீங்கள் நாட்டிற்குத் திரும்பாமல் காட்டிலேயே மீண்டும் ஆறு மாதம் இருக்க வேண்டிவரும். இதற்கு சம்மதமா?"
"வேதாளமே! இதற்கு விடை நாளை மாலை வா, சொல்கிறேன்" என்று அரசன் சொல்ல, வேதாளம் அவ்விடம்விட்டு அகன்றது.
உடனே பட்டி, "இதற்கு பதிலை இப்போதே சொல்லியிருக்கலாமே" என்றான்.
"சொல்லலாம்தான். எனினும் காடாறு மாதம் ஆட்சிக்கு நாம் செல்லும் முன் காளியை வணங்கி விடை கேட்டுச் சொல்வோம்" என்றான் அரசன்.
மறுநாள் பொழுது புலர்ந்தது. நாட்டைவிட்டு காடாறு மதம் போக வேண்டிய காரணத்திற்காக பட்டியும் அரசனும் ஆயத்தமானார்கள். காளி கோயில் மணி ஓசை கேட்டது. இருவரும் உடனே அங்கே சென்றனர். அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடத்தி கர்ப்பக்கிரகத்திற்குள் சென்றனர். அங்கு ஒரு முகூர்த்த காலம் தியானத்தில் ஆழ்ந்தனர்.
தேவி பிரசன்னமானாள். "விக்கிரமாதித்தா! நீ வேதாளம் சொல்லும் கதைகளைக் கேள். அதிலுள்ள புதிர்களை நீ எளிதில் அவிழ்ப்பாய். ஆயினும் வேதாளம் மாதம் இருமுறை, அதாவது அமாவாசை, பௌர்ணமி அன்று மட்டுமே கதை சொல்லட்டும். இப்படி ஆறு மாதம் மொத்தம் பன்னிரண்டு கதைகள் சொல்வதில் 12-ம் கதையின் முடிச்சை உன்னால் அவிழ்க்க முடியாது.
அதனால் மீண்டும் ஆறு மாதம் நீ காட்டிலேயே தங்க நேரிடும். அது உன் நன்மைக்கே. ஏனென்றால் உன் பகைவர்கள் உன்னையும் உன் நாட்டையும் வெற்றி கொள்ள முயற்சிப்பார்கள். அக்காலக் கோள்கள் உனக்கு உகந்ததல்ல. ஆதலால் மீண்டும் பன்னிரண்டு கதைகளை கேட்டு புதிர் அவிழ்த்து வெற்றியோடு திரும்புக" என்றாள் காளி.
"தாயே உன் சித்தம்" என்று கூறி காட்டிற்குச் சென்றனர்.
இதனுள்:
01.சித்திரைத் திங்கள் பௌர்ணமிக் கதை;
02.சித்திரைத் திங்கள் அமாவாசைக் கதை;
03.வைகாசித் திங்கள் பௌர்ணமிக் கதை;
04.வைகாசித் திங்கள் அமாவாசைக் கதை;
05.ஆனித் திங்கள் பௌர்ணமிக் கதை;
06.ஆனித் திங்கள் அமாவாசைக் கதை;
07.ஆடித் திங்கள் பௌர்ணமிக் கதை;
08.ஆடித் திங்கள் அமாவாசைக் கதை;
09.ஆவணித் திங்கள் பௌர்ணமிக் கதை;
10.ஆவணித் திங்கள் அமாவாசைக் கதை;
11.புரட்டாசித் திங்கள் பௌர்ணமிக் கதை;
12.புரட்டாசித் திங்கள் அமாவாசைக் கதை;
13.ஐப்பசித் திங்கள் பௌர்ணமிக் கதை;
14.ஐப்பசித் திங்கள் அமாவாசைக் கதை;
15.கார்த்திகைத் திங்கள் பௌர்ணமிக் கதை;
16.கார்த்திகைத் திங்கள் அமாவாசைக் கதை;
17.மார்கழித் திங்கள் பௌர்ணமிக் கதை;
18.மார்கழித் திங்கள் அமாவாசைக் கதை;
19.தைத் திங்கள் பௌர்ணமிக் கதை;
20.தைத் திங்கள் அமாவாசைக் கதை;
21.மாசித் திங்கள் பௌர்ணமிக் கதை;
22.மாசித் திங்கள் அமாவாசைக் கதை;
23.பங்குனித் திங்கள் பௌர்ணமிக் கதை;
24.பங்குனித் திங்கள் அமாவாசைக் கதை.
| SKU Code | Bharti B 250 |
|---|---|
| Weight in Kg | 0.100000 |
| Dispatch Period in Days | 3 |
| Brand | Bookwomb |
| Author Name | ஏ.எஸ்.வழித்துணைராமன் A.S.Vazhithunairaman |
| Publisher Name | பாரதி பதிப்பகம் Bharathi Pathippagam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%
























